நாடாளுமன்ற குளிர் கால கூட்டத் தொடர் சுமுகமாக நடைபெறும் என்று பிரதமர் நரேந்திரமோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற அனைத்து கட்சிக்கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எதிர்க் கட்சிகளுடன் சேர்ந்து, முக்கியப் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும் என கூறினார். இந்தக் கூட்டத்தில், பாஜ தலைவர்களுடன் காங்கிரஸ் கட்சியின் மக்களவை தலைவர் மல்லி கார்ஜூன கார்கே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியசெயலாளர் டி.ராஜா, திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர். இன்று தொடங்கி டிசம்பர் 23ம் தேதி வரை நடைபெறும் இந்த கூட்டத் தொடரில், பல்வேறு முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. நாடாளுமன்றத்தில் தற்போது 67 மசோதாக்க ள் நிலுவையில் உள்ளன. இவற்றில் 59 மசோதாக்களை மாநிலங்களவையிலும், 8 மசோதாக்களை மக்களவையிலும் நிறைவேற்ற வேண்டியிருக்கிறது
"ஆஸ்துமா" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச சிறுகுழல்கள் சுருங்குவதால் ... |
இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ... |
30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.