கருப்புப்பணம் குறித்த விவாதத்துக்கு மத்திய அரசு தயாராக உள்ளதாக நாடாளுமன்ற விவகாரத் துறை இணையமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடி தெரிவித்துள்ளார்.
கருப்புப்பண விவகாரம் குறித்து விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். குறிப்பாக, திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இன்று காலை, நாடாளுமன்ற பிரதானவாயிலை முற்றுகையிட்டு திரிணமூல் காங்கிரஸ் எம்பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் மக்களவையில், 'கருப்புப் பணத்தை மீட்டு கொண்டுவாருங்கள்' என்ற வாசகம் எழுதப்பட்ட குடைகளை திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் விரித்து காட்டியபடி கோஷங்களை எழுப்பினர். இதனால், அவை ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், பாஜக நாடாளுமன்றக்குழு கூட்டத்திற்குப் பின்னர் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த நாடாளுமன்ற விவகாரத் துறை இணை அமைச்சர் ராஜீவ் பிரதாப்ரூடி, "கருப்புப்பணம் குறித்த விவாதத்துக்கு மத்திய அரசு தயாராக இருக்கிறது. வெளி நாடுகளில் பதுக்கப்பட்டிருக்கும் கருப்பு பணத்தை மீட்பதில் அரசு உறுதியுடன் உள்ளது " என கூறினார்.
உடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் முதன்மையாக இடம் ... |
இலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, பட்டை ஆகியவை ... |
கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.