ஒற்றுமைக்கு அடிகோலிய படேல்லை மறக்ககூடாது

 இந்தியாவின் 550 சமஸ்தன்னைங்களை ஒருங்கினணத்ததுடன் ஹைதராபாத் ராஜாக்கர்களை ஒடுக்கி இந்திய ஒற்றுமைக்கு அடிகோலிய படேல்லை இந்தியர்கள் மறக்ககூடாது என்று பிரதமர் மோடி பேசியதுடன், சர்தார் வல்லபாய் படேலின் பணி சேர்ந்தால்தான் மகாத்மா காந்தி முழுமையடைகிறார் என்று சொல்லி காங்கிரஸ்காரர்களை வெருப்பேற்றியிருக்கிறார்.

ஏற்கனவே காந்தியின் பிறந்த நாள் – நினைவு நாளை மட்டுமே மத்திய அரசு அதிகாரப்பூர்வமாகக் கொண்டாடும். மற்ற மறைந்த தலைவர்களின் விழாக்களை அதற்கான கட்சிகள், அறக்கட்டளைகள், அமைப்புகள் கொண்டாடிக் கொள்ளலாம் என்று அறிவித்துவிட்டார். அதேபோல் தலைநகர் டெல்லியில் இனி எந்தத் தலைவருக்கும் நினைவில்லிங்கள் அரசு அமைக்காது – அனுமதி தராது என்று நிதி மற்றும் பாதுகாப்பு அமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்தார்.

கன்ஷிராம் போன்ற மறைந்த தலைவர்களுக்கு காங்கிரஸ் அரசு நினைவில்லம் அமைத்ததால், ராஸ்ட்ரிய லோக் தள கட்சி தலைவர் அஜித் சிங் டெல்லியில் பல வருடங்களாக தான் பயன்படுத்திய அரசு பங்களாவை, இப்போது மந்திரி, எம்.பி. எதுவுமே இல்லாதபோதும் காலி செய்ய மறுத்து கலாட்டா செய்தார். தனது தந்தை சரண்சிங் ஒரு காலத்தில் தங்கியிருந்த பங்களா என்பதால் அதை நினைவில்லாமாக பி.ஜே.பி.அறிவிக்க வேண்டும் என்று தன்னுடைய மாநில விவசாயிகளைக் கொண்டு வந்து டெல்லி தெருக்களில் உட்காரவைத்து போராட்டம் செய்தார். இதை அரசியல் ரீதியாகப் பயன்படுத்த நினைத்த காங்கிரஸ், அப்போதைய ஹரியானா முதல்வர் பூபேந்திர ஹுடே மூலம் சரன்சிங்கிற்கு நினைவில்லம் கொடுப்பதை ஆதரித்து அறிக்கைவிட்டது. அஜித் சிங் மட்டும் கேட்டிருந்தாலாவது பி.ஜே.பி. ஒப்புக்கொண்டிருக்கும். காங்கிரஸ் ஆதரித்தவுடன் ‘ஆணிய பிடுங்க வேண்டும்’ என்பது போல் இனி யாருக்கும் நினைவில்லமே டெல்லியில் கிடையாது என்று சொல்லிவிட்டது.

ஜவஹர்லால் நேருவைப் பொறுத்தவரை கொஞ்சம் அதிர்ஸ்டசாலி. அவருடைய பிறந்த நாள் குழைந்தைகள் தினமாக அனுசரிக்ப்பட்டதால் வருடா வருடம் நிச்சயம் விடுமுறையாவது உண்டு-சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5 ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுவதுபோல். சுதிந்தரமடைந்து இத்தனை வருடங்களாக காந்தி-நேரு இருவருமே காங்கிரஸ் கட்சியின் ஏகபோக உரிமையாக இருந்து வந்ததுடன், அவர்களைத் தவிர சுதந்திரப் போராட்டத் தலைவர்கள் அனைவரையும் வெற்றிகரமாக இருட்டடிப்பு செய்து வந்தது காங்கிரஸ்.

மகாத்மா காந்தி,நேரு இருவரது சுதந்திரப் போராட்ட சாதனைகளும் தேசத்திற்காற்றிய பணியையும் யாரும் குறைத்து மதிப்பிட முடியாதுதான். ஆனால், அதே சமயம் நாட்டின் சுதந்திரத்திற்கும் அதற்குப்பின் நடந்த பல நன்மைகளுக்கும் அவர்கள் இருவரை தவிர வேறு யாருமே காரணமில்லை என்று சொல்வது அபத்தம். உதரணமாக பஞ்சாப் கேசரி லாலா லஜபதி ராய் 1865-ல் பஞ்சாப் – லாகூரில் பிறந்து சுதரத்திற்காக வெள்ளையர்களை எதிர்த்து போராடியவர். இந்துத்வா கொள்கைகளில் மிகுந்த பிடிப்பும், இந்து மகா சபா, ஆர்யசமாஜம் போன்ற அமைப்புகளில் இனைந்து செயலாற்றியவர். தயானந்த சரஸ்வதியின் சீடராகவே பணியாற்றினார். காந்தி, நேரு போலவே அவர்களுக்கெல்லாம் முன்னதாகவே அந்நிய தேசிய காங்கிரசில் இணைந்தவர். பஞ்சாபில் அரசியல் போரட்டதில் வெள்ளையருக்கு எதிராக ஈடுபட்டதால், கைது செய்யப்பட்டு பர்மாவிற்கு 1907-ல் நாடு கடைத்தப்பட்டார். இவர்மேல் வழக்கு நிறுபனமாகாததளால் பின்னர் விடுதலை ஆனார்.

இந்த சமயத்தில் காந்தி தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியாவிற்கே வரவில்லை. ஜவஹர்லால் நேரு 18 வயது வாலிபர். வெள்ளையர்கள் அல்லாத கல்வி நிறுவனமாக லாகூரில் தேசியக் கல்லூரியை நிறுவினார் லால லஜபதி ராய். இந்தக் கல்லூரியில்தான் வீரர் பகத் சிங்க படித்தார். 1920.-ல் லாலா லஜபதிராய் காங்கிரஸ் கட்சித் தலைவரானார். 1921-ல் சர்வன்ட்ஸ் ஆப் தி பீபிள் சொசைடி என்ற சேவை நிருவனத்தை அமைத்தார். ஒத்துழையாமை இயக்கத்தில் போராடியதால் 1921 முதல் 1923 வரை சிறையில் அடைக்கப்பட்டார்.

ஆங்கிலேயே அரசு 1928-ல் இந்திய அரசியல் களத்தை ஆய்வு செய்ய சர் ஜான் சைமன் கமிசனை அமைத்தது. இதில் இந்தியர் யாரும் இல்லாததை எதிர்த்து புறக்கணித்து லாகூரில் நடந்த போராட்டத்தில் வெள்ளைக்கார போலிசார் தடியடி செய்தனர். அடிபட்டு ரத்தம் ஒழுகும் நிலையிலும் லாலா லஜபதிராய், பொதுகூட்டத்தில் ‘என் மேல் விழுந்த ஒவ்வொரு அடியும் பிரிட்டிஷ் ஆட்சிக்கு சமாதி கட்டும் மரண அடி’ என்று பேசினார். ஆனால் தடியடியில் பட்ட காயங்களால் உடல்நலம் மோசமாகி மூன்றே வாரத்தில் 1928-ல் உயிரிழந்தார். இவருடைய மரணத்திற்கு பழிவாங்கத்தான் இவருடைய கல்லூரியில் படித்த மாணவர்களான பகத்சிங், சுக்தேவ் தாபர், சிவராம் ராஜகுரு, சந்திரசேகர் ஆசாத் ஆகியோர் லாலா லஜபதிராயை தாக்க உத்தரவிட்ட காவல்துறை எஸ்.பி.சம்ஸ் ஸ்காட்டைக் கொல்லத் திட்டமிட்டனர். ஆனால், தவறுதலாக ஜான்.பி.சாண்டர்ஸ் என்ற வெள்ளை அதிகாரியை பகத்சிங்கும் ராஜகுருவும் சுட்டுத்ள்ளினர். 17 நவம்பர் 1928-ல் லாலா லஜபதிராய் இறந்தார். 17 டிசம்பர் 1928-ல் வெள்ளை அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டார். பகத்சிங்கும் அவரது இரு சகாக்களும் இந்திய சரித்திரத்தில் பகத்சிங்கின் பெயர் தீவிரவாதியாகதான் வெள்ளையார்களால் பதிவு செய்யப்பட்டது. காங்கிரஸ் இத்தனை ஆண்டுகளில் இதை அதிகாரப்பூர்வமாக மாற்ற முயற்சி எடுக்கவேயில்லை.

LalBalPal என்றழைக்கப்பட்ட மூன்று தலைவர்கள் லாலா லஜபதிராய், பாலகங்காதர திலகர், பிபின் சந்திர பால். சுதேசி இயக்கம் செயல்பட்டது இந்த மூவரால்தான், 1905 – 1919 காலகட்டத்தில் வெள்ளையர்களை எதிர்த்தும் வங்காளப் பிரிவினையை எதிர்த்தும் போராடினார். பால கங்காதர திலகர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்திய சுதந்திர போராட்டத்தின் தந்தை என்று வெள்ளையர்களாலேயே சொல்லப்பட்டவர். லோகமான்ய திலகர் – அதாவது மக்கள் தலைவர் என்று பட்டம் பெற்றவர். ஸ்வராஜ் அதாவது சுயாட்சி என்பதே நம் மூச்சி என்று சொல்லி ஹோம் – ரூல் இயக்கத்தை இவர் தொடங்கியபோது உடனிருநதவர் தான் பின்னாலில் பாகிஸ்தான் பிரியக் காரணமான முகமது அலி ஜின்னா ஆசிரியரான திலகர், சுய பலனை எததிர்பாராமல் போராட்டதில் எதிரியைக் கொல்பவன் செய்வது பாவமாகாது என்று பகவத் கீதையை மேற்கோள்காட்டி மாணவர்களுக்கு போதித்தார். 1897-ல் (திலகர் அப்போது 41 வயது) இரு வெள்ளை அதிகாரிகளைக் கொன்ற சபேகார் சகோதரர்களுக்கு உடந்தையாக இருந்ததாக 18 மாதம் சிறையிலடைக்கப்பட்டார். விடுதலையாகிவந்து சுதேசி இயக்கத்தை வலுப்படுத்தினார். வெளிநாட்டுப் பொருட்களை பகிஷ்கரிக்கும் போராட்டத்தை தொடங்கினார். இந்த போராட்டத்தைதான் பின்னாளில் பல வருடங்களுக்குப் பிறகு காந்தி, நேரு போன்றோர் பின்பற்றினார்.

பிபின் சந்தர்பாலும் புரட்சி போராலும் சுதேசி இயக்கத்தில் இணைந்தாலும், ஓத்துழையாமை இயக்கத்தில் எல்லாம் இவருக்கு நம்பிக்கை இல்லை. காந்தியுடன் ஒத்துப்போகாதாதால் ஒரு கட்டத்தில் காங்கிரசிலிறருந்தே விலகிவிட்டார். அரவிந்தர் இவரை இந்தியாவின் மிக வலிமையான தேசியவாதி என்றழைத்தார். பிபின் 1932-ல் காலமானார்.

இதே மாதிரி எத்தனையோ தலைவர்கள். வ.உ.சி., வாஞ்சிநாதன் போன்ற பல இந்த தேசத்திற்காக உயிரை விட்டிருக்கிராகள்,உண்மையைச் சொல்லப் போனால், காந்தி,நேரு சிறையில் இருந்த காலைத்தைவிட மிக அதிகமான காலம் சுதந்திரத்திற்காக சிறைபைட்டிருக்கிறார்கள். மிகப்பெரிய செல்வந்தரான கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. சிறையில் செக்கிழுத்தார் சித்ரவதை அனுபவித்தார். சிறையிலிருந்து வெளியாகிக் கடைசிக் காலத்தில் சோற்றுக்கே திண்டாடினார். சுப்ரமணிய சிவா சிறையில் சித்ரவதைப்பட்டு தொழுநோயால் பாதிக்கப்பட்டு, வெளியில் வந்து உடலில் புழுக்கள் நெளிந்த நிலையிலும் வந்தே மாதரம் என்று முழங்கினார்.

சர்தார் வல்லபாய் படேலும் இந்த வரிசையில் பெருமைப்படுத்தப்பட வேண்டிய சுதந்திர போராட்ட வீரர் என்பதுடன் இந்தியா என்றொரு முழு அமைப்பு உருவாகக் காரணமானவர். அவர் இந்தியா என்றொரு நாட்டை உருவாக்காவிட்டால், நேரு சௌகரியமாக பிரதமர் பதவியில் உட்கார்ந்து 1964 வரை ஆட்சி செய்திருக்க முடியாது.

இந்த தலைவர்களை எல்லாம் ஒப்ப்பிடும்போது காந்தியோ நேருவோ சிறையில் சித்ரவதை அனுபவிக்கவில்லை. தெருவில் தடியடி படவில்லை, பகத்சிங், வாஞ்சிநாதன் போன்று இளவயதில் குடும்பைத்தைவிட்டு விட்டு நாட்டிற்காக உயிரைவிடத் துணியவில்லை. காந்தி – நேரு ஆற்றிய பணியையும் தியாகத்தையும் குறைத்து மதிப்பிடுவதல்ல நம் நோக்கம், படேல் முதலான மற்ற தலைவர்களின் பணியும் தியாகமும் காந்தி – நேருவின் பெருமைக்கு ஒரு மில்லி அங்குலம் கூட குறைவில்லை. இந்த அர்த்தத்தில்தான் படேல் இல்லை என்றால் மகாத்மா காந்தி முழுமை பெற மாட்டார் என்று மோடி கூறியிருக்கிறார்.

இதே வரிசியில் தீனதயாள் உபாத்யாய்,ஷியாமா பிரசாத் முகர்ஜி, வீர சாவர்க்கர் என்று எத்தனையோ தலைவர்கள் – இவர்களைவிட தேசத்திற்காக உயிர் கொடுயத்துவிட்டு பிற்கால சரித்திரத்தில் பெயரே தெரியாமல் போன எத்தனையோ பெருவீரர்கள் இருக்கிறார்கள்.

இந்தத் தலைவர்களை பெருமைப் படுத்துவதற்காக காந்தி – நேருவை சிறுமைப்படுயத்துவாதா என்று கேட்டால் அது மிக நியாயமான கேள்வி. எத்தனையோ காலமாய் சில உயர் சாதியினர் கீழ்சாதியினர் என்று சொல்லப் பட்டவர்களைத் தீண்டத் தகாதவர்களாக வைத்து முன்னேற விடாமல் செய்ததால், அம்பேத்கர் முதலான தலைவர்கள் போராடிப் பெற்ற உரிமைதானே ‘இட ஒதுக்கீடு’ கொள்கை. தாழ்த்தப்பட்டவர்களை முன்னேற்றுவதர்காக இந்த கொள்கை என்று எடுத்துக்கொள்ள வேண்டுமே தவிர உயர்சாதியினரை சிறுமைப்படுத்தும் கொள்கை என்று சொல்லிவிட முடிமா? சொன்னால் யாரும் ஒப்புக்கொள்வார்களாலா?

அதே போலத்தான் ஒரு சில தலைவர்களை மட்டுமே சரித்திரப் பதிவுகளில் வெளிச்சம் போட்டுக்காட்டிவிட்டு பிற தலைவர்களை பலகாலம் இருட்டடிப்பு செய்ததன் விளைவு அந்தத் தலைவர்களுக்கு சரித்திரத்தில் கட்டாய இட ஒதுக்கீடு இன்று தரப்படுகிறது- தவறென்ன?

சமீபத்தில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஷ்மிருதி இரானியை ஒரு குழு சந்தித்து, தவறாக விடுபட்டுப்போன சரித்திரப் பதிவுகளை திருத்தவேண்டும் என்று கூறியிருக்கின்றனர்.

இந்தக் குழுவில் சர்ச்சைக்குரிய சமூக சேவகர் கல்வியாளர் தீனநாத் பத்ராவும் இருந்தார், இந்து மதத்தில் வேத காலத்திலிருந்ததே ஒளிந்திருக்கும் வினஞ்சா உண்மைகளை பாடத்திட்டங்களில் பதிவு செய்து நம் பண்டைய பெருமையை வரும் தலைமுறைகள் அறியச் செய்ய வேண்டும் என்கிறார் பத்ரா. இவரது முழக்கங்கள் சில சமயங்களில் சற்று அதிகப்படியாகத் தெரிந்தாலும் இவரது அடிப்படை எண்ணங்கள் நியாமானவை. அவர் சொல்வதை அப்படியே கேட்கவேண்டியதில்லை என்றாலும் அவர் சொல்வதில் உள்ள நியாயமான விஷயங்களை மட்டுமாவது பரிசீலனை செய்யலாமே.

மோடி அரசு நேருவை இருட்டடிப்பு செய்கிறது என்று காங்கிரஸ்காரர்களுக்கு பொத்துக்கொண்டு வருகிறது. இந்திரா காந்தின் நினைவு நாளை மத்திய அரசு பெரிதாகக் கொண்டாடவில்லை என்று சசிதருர் திக்விஜய்சிங் என்று ஆளுக்காள் ஒப்பாரி வைக்கிறார்கள். இந்திரா காந்தி அம்மையார் காங்கிரசுக்கு பெரும்பணி செய்தார் உண்மை ஆனால்,அது காந்தி நேரு உள்ளிட்ட பல தலைவகள் இருந்த இந்திய தேசிய காங்கிரசுக்கு அல்ல – அவர் ஆரம்பித்த இந்திரா காங்கிரசுக்கு!

இந்தியாவில் இருக்கும் கடைசி ஆங்கிலேயன் நான் என்றும் தவறுதலாக இந்தியனாகப் பிறந்துவிட்டேன் என்று சொன்ன நேருவுக்கிப் பின் வந்து நேர்மையானவராகவும் வாரிசு அரசியலை வளர்க்காத வருமாகச் செயல்பட்ட லால்பகதூர் சாஸ்திரி, ஒரு காலத்தில் காங்கிரசில் இருந்து பின்னால் ஜனதா கட்சியில் இணைந்த மொரார்ஜி தேசாய், சத்தமேயில்லாமல் 5 வருடங்கள் நிலையான ஆட்சி கொடுத்த காங்கிரசின் நரசிம்மராவ் – இவர்களின் பெருமை பேச காங்கிரஸ் தவறியது ஏன்?

பிந்தரன்வாலேயை உருவாக்கிவிட்டு சீக்கியர்களைப் பிரித்து மிகப்பெரிய இனக்கலவரத்திற்கு வித்திட்ட இந்திராகாந்தியை நினைவுகூர வேண்டுமா அல்லது அவரது மரணத்திற்குப் பழிக்குப்பழியாக கொல்லப்பட்ட மூவாயிரத்து சொச்சம் அப்பாவி சீக்கியர்களுக்கு முறையான நினைவஞ்சலி செலுத்த வேண்டுமா? இந்த நாட்டின் சரித்திரத்தின் கறுப்பு பக்கங்களை ரத்த மையில் ‘நெருக்கடி நிலை’ என்ற பெயரில் எழுதியவருக்கு நினைவைஞ்சலி வேண்டுமாம் – நாட்டின் ;வரைபடம் தலை நிமிர்ந்து நிற்கக்காரணமான சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளைக் கொண்டாடினால் பொறுக்கவில்லியாம்.

அநியாய ஏற்றத்தாழ்வுகள் அதிகமாகும்போது இட ஒதுக்கீடுகள் தானாகத் தோன்றும். சமுதாயைத்தில் மட்டுமல்ல – சரித்திரத்திலும் கூட!

நன்றி தமிழக அரசியல்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சாகசத்தை மட்டுமே பேசுகிறது வரல ...

சாகசத்தை மட்டுமே பேசுகிறது வரலாறு – அமைச்சர் ஜெய் சங்கர் ''அனைத்து சமூகத்திலும் வரலாறு என்பது சிக்கலானது. அன்றைய அரசியல் ...

தி சபர்மதி ரிப்போர்ட் படத்தை அம ...

தி சபர்மதி ரிப்போர்ட் படத்தை அமைச்சர்களுடன் பார்த்த பிரதமர் மோடி குஜராத்தின் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை மையமாக வைத்து ...

கவலை அளிக்கும் டிஜிட்டல் மோசடி ...

கவலை அளிக்கும் டிஜிட்டல் மோசடிகள் – மோடி பேச்சு 'டிஜிட்டல்' மோசடிகள், 'சைபர்' குற்றங்கள், ஏ.ஐ., தொழில்நுட்பங்களால் அரங்கேறும், ...

உலக எய்ட்ஸ் தினம்

உலக எய்ட்ஸ் தினம் ​1988 முதல் ஆண்டுதோறும் டிசம்பர்1ஆம் தேதிஅனுசரிக்கப்படும் உலக எய்ட்ஸ் ...

வளர்ச்சி அடைந்த பாரதத்தின் வரல ...

வளர்ச்சி அடைந்த பாரதத்தின் வரலாறு அறிவியலின் மூலம் எழுதப்படும் -ஜிதேந்திர சிங் வளர்ச்சி அடைந்த பாரதத்தின் வரலாறு அறிவியலின் மூலம் எழுதப்படும் ...

சிறுபான்மையினரை பாதுகாக்ககும் ...

சிறுபான்மையினரை பாதுகாக்ககும் பொறுப்பு வாங்க தேசத்துக்கு உள்ளது – ஜெய் சங்கர் வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில், ...

மருத்துவ செய்திகள்

வாசனைத் திரவியங்கள்

பொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் இதே ...

தொடர்ந்து ஓரிரு முறை கருச் சிதைவு ஏற்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்?

இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ...

கறிவேப்பிலையின் மருத்துவக் குணம்

கறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் தயிரில் கலந்து ...