டெல்லி தேர்தல்பிரசார கூட்டத்தில் மத்திய அமைச்சர் நிரஞ்சன் ஜோதி, சர்ச்சைக்குரிய விதத்தில் பேசியதை பிரதமர் நரேந்திர மோடி கண்டித்துள்ளார்.
பாராளுமன்ற பா.ஜ.க கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி இது தொடர்பாக கூறியதாவது; பொது இடங்களில் பேசும்போது எப்படி பேசுகிறோம்? என்ன பேசுகிறோம்? என்பதை மத்திய அமைச்சர்களும், பாஜக எம்.பி.க்களும் புரிந்துகொண்டு பேச வேண்டும். பொது மக்களிடையே உரையாற்ற சிலதகுதிகளும், வரம்பும் உள்ளன. இதைப் பொருள் படுத்தாமல் முந்திக்கொண்டு வரம்பு மீறி பேசினால் அதை என்னால் ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது. அவ்வாறு பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார் பிரதமர் .
சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட விவகாரத்தில் மத்திய இணை அமைச்சர் நிரஞ்சன் ஜோதி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் செவ்வாய்க் கிழமை மன்னிப்புக் கேட்டார்.
"நான் யாரையும் புண்படுத்தும் விதத்திலோ , குறிப்பிட்டோ பேசவில்லை. இருந்தாலும் எனது பேச்சைத் திரும்பப்பெற்றுக் கொண்டு, நடந்த நிகழ்வுக்காக மன்னிப்புக் கேட்டு கொள்கிறேன்' என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த விவகாரம் குறித்து செவ்வாய்க் கிழமை மாலையில் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் வெங்கய்யநாயுடு, "நிரஞ்சன்ஜோதி மன்னிப்பு கேட்டுக் கொண்டதால், இதை முடிந்துபோன விவகாரமாக கருதி, அவை நடவடிக்கை சுமுகமாகத் தொடர எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்' என கேட்டுக்கொண்டார்.
இதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் உடைய செடி. ... |
செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ... |
உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.