பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ம.தி.மு.க நீடிப்பதாக மத்திய கப்பல், நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டு தமிழக பா.ஜ.க தலைமை அலுவலகமான கமலாலயத்தில் அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அவர் மரியாதைசெலுத்தினார்.பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் நினைவு நாளை பாஜக அரசு நாடுமுழுவதும் அனுசரித்து வருகிறது. அவரது நினைவை போற்றும் மத்திய சாலை போக்கு வரத்துத் துறை சார்பில் இன்று பசுமைச்சாலைகள் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.இதன்படி நாடுமுழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் மரக்கன்றுகள் நட்டு வளர்க்கப் படும். தமிழகத்தில் தாம்பரத்தில் இந்தத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
திருவள்ளுவர், பாரதியாரின் பிறந்த நாளை நாடுமுழுவதும் கொண்டாட உத்தரவிட்ட மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.மகாகவி பாரதியாரின் பிறந்த நாளான டிசம்பர் 11-ஆம் தேதி நாடுமுழுவதும் பெண்கள் முன்னேற்றம் என்ற பெயரில் கட்டுரைப் போட்டி நடத்தப்படும்.
இலங்கைச் சிறையில் மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. மீனவர்களின் நலனுக்காக கச்சத்தீவை மீட்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்.தமிழகத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மதிமுக நீடிக்கிறது. அதில் எந்த பிரச்னையும் இல்லை என்றார் பொன். ராதாகிருஷ்ணன்.
குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, ... |
உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.