புதுவையிலிருந்தபோது பாரதியும், வ.வெ.சு.ஐயரும் ஒரு நாள் பாரதமாதாவுக்கு ஒரு உருவம் தரவேண்டும் என்று எண்ணினார்கள். அப்போது ஓவியக் கலையில் சிறந்ததோர் மேதை பேத்ரீஷ் என்றொருவர் பிரெஞ்சுக் கல்லூரியில் ஆசிரியராக இருந்தார். அவரைச் சந்தித்து ‘இந்தியாவின் நில அமைப்பு அப்படியே பாரததேவியின் உருவாகக் காட்சியளிக்க வேண்டும். தலைமேல் ஒரு தங்க கிரீடம், தலைமுடி இரு பக்கமும் விரிந்து, இமய பர்வதத்தையும், சிந்து, கங்கை ஆறுகள் இரு மருங்கிலும் ஓடிப் பாய்வது போலவும், இலங்கையை ஒரு தாமரை போலவும் அமைத்திட வேண்டும்’ என்பது போன்ற அவரிடம் விளக்கினார்கள். அவர் ஒரு சில நாட்களில் பாரததேவியின் ஓவியத்தை எழுதி முடித்தார்.
பாரதமாதாவின் உருவ அமைப்பைப் பற்றி வ.வெ.சு.ஐயரும், பாரதியும் விவாதித்த போது ஒரு கருத்து மோதல் ஏற்பட்டது. வ.வெ.சு.ஐயர் பாரதமாதாவுக்கு ஆபரணங்கள் வேண்டாம், வெள்ளையன் நாட்டைக் கொள்ளை கொண்டு வறுமை நிலையில் வைத்துள்ளான் என்றார். பாரதி சிறிது நேரம் சிந்தித்து விட்டு, ‘இல்லை இல்லை, நமது நாட்டில் இன்னும் செல்வங்கள் ஏராளமாக உள்ளன. எனவே பாரதமாதா சர்வாலங்கார பூஷிதையாகவே காட்சி தர வேண்டும்’ என்றார். அதன்படி பின்னர் படத்தில் திருத்தங்கள் செய்து நகைகள் அணிவிக்கப்பட்டன.
பின் இதை மண்ணில் சிலையாக உரிய வண்ணங்களோடு வடித்தெடுக்க வேண்டும் என்று முடிவு செய்தார்கள். அக்காலத்தில் புதுவையில் குயவர்பாளையம் என்ற ஊரில் பொம்மைகள் செய்வதில் சிறந்த கலைஞர்கள் இருந்தார்கள். அவர்கள் வடித்தெடுக்கும் பொம்மைகள் எழில் மிகுந்தவை. பேத்ரீஷ் எழுதிய பாரதமாதாவின் ஓவியத்தைப் போல களிமண்ணினால் சிலையை வடித்து, வண்ணங்களைத் தீட்டிக் கொடுத்தார்கள். இந்தச் சிலையில் பாரதமாதா கால்களில் விலங்குகள் இட்ட நிலையில் காட்சியளிக்கிறாள். அவளது வலதுகரம் முகவாய்க் கட்டில் ஊன்றிய நிலையில் உள்ளது. பாரதியின் யோசனையின் பேரிலேயே இவ்வாறு செயப்பட்டது. ‘என் அன்னை சிந்தனையில் இருக்கிறாள்’ என்பதே பாரதி இதற்குக் கூறிய விளக்கம்.
நன்றி : விஜய பாரதம்
கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ... |
கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை ... |
ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ... |
Leave a Reply
You must be logged in to post a comment.