போதைப் பொருளை பயன்படுத்துவது நவநாகரிகமல்ல பேரழிவு

 இளைஞர்கள் போதை பொருட்களுக்கு அடிமையாவது வேதனை தருகிறது, போதைப்பழக்கமும் தேசிய துயரமே என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

'மனதில் உள்ளதை பேசுகிறேன்' (மன் கி பாத்) என்ற நிகழ்ச்சி மூலம் பிரதமர் நரேந்திர மோதி வானொலியில் பேசி வருகிறார்.

முதல் முறையாக, கடந்த அக்டோபர் 3-ம் தேதி, நாட்டுமக்களுக்காக பிரதமர் நரேந்திர மோதி வானொலி மூலம் உரையாற்றினார்.

அந்த வரிசையில் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் -14), நாட்டு மக்களுக்காக வானொலியில் உரையாற்றிய பிரதமர் மோடி, இளைஞர்கள் போதைபொருட்களுக்கு அடிமையாவது குறித்தும் அவர்களை மீட்டெடுப்பது குறித்தும் பேசினார்.

இளைஞர்களிடையே பரவும் போதைப் பழக்கம் தேசத்தின் வலியாகும். இளைஞர்கள் போதைக்கு அடிமையாகியுள்ளனர். அவர்கள் போதைப் பொருள்கள் பயன்படுத்துவதை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

போதைப் பழக்கத்துக்கு ஆளாவதால் இருள் சூழும், அழிவும், பேரழிவும் உருவாகும் . இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, திரைப்பட பிரபலங்கள், கிரிக்கெட்வீரர்கள் உள்பட பிற துறைகளில் பிரபல மானவர்களைக் கொண்டு "போதை இல்லாத இந்தியா' எனும் பிரசாரம் நடத்த முயற்சி மேற்கொள்வேன். மதுயில்லா இந்தியாவை உருவாக்குவோம்.

நீண்ட நாள்களாக, இளைய தலைமுறையினரை நான் கவனித்து கொண்டிருக்கிறேன். சிலர் அழிவை ஏற்படுத்தும் புதை குழிக்குள் விழுந்துள்ளனர். போதைப்பொருள் ஒரு பேரழிவாகும்.

இது மனம், சமூகம், மருத்துவம் சார்ந்த ஒருபிரச்னையாகும். இந்தப் பிரச்னையைப் போக்க குடும்பத்தினர், நண்பர்கள், சமூகத்தினர், அரசு, சட்டத்துறையினர் என அனைவரும் கூட்டாகச் செயல்பட வேண்டும்.

இந்தப் பிரச்னை குறித்து ஆலோசனை வழங்க "கட்டணமில்லா உதவி மையம்' தொடங்குமாறு அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டுள்ளேன்.

போதைப்பழக்கத்துக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் ஓர்சிறப்பு நிகழ்ச்சியைத் தொடங்கவும் அறிவுறுத்தியுள்ளேன்.

போதைப்பொருள் குறித்து நான் உரையாற்றுவேன் என்று முன்னர் வானொலி நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தேன். அதுதொடர்பாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடிதங்கள், மின்னஞ்சல்கள் பொதுமக்களிடம் இருந்து வந்துள்ளன. அவை, போதைப் பொருளுக்கு எதிரான ஆலோசனைகள் ஏற்கெனவே தொடங்கிவிட்டது என்பதையே காட்டுகின்றன.

இளைஞர்கள் தங்களுக்கு போதைப்பழக்கம் இல்லை என்பதைக் கூறிகொள்ள ஆர்வம்காட்ட வேண்டும்.

போதைப் பொருளை பயன்படுத்துவது நவநாகரிகம் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், அவற்றில் உண்மையில்லை. அவை உங்களை பேரழிவுக்கே அழைத்துச் செல்லும்.

போதைப்பொருள்களை விலைகொடுத்து வாங்கும் இளைஞர்களுக்கு அந்தப் பணம் தீவிரவாதத்துக்கு பயன்படுகிறது என்பது தெரியுமா? இந்தியாவை நேசிக்கும் நீங்கள் எப்படி தீவிரவாதத்துக்கு உதவலாம்? பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கென நேரத்தை ஒதுக்கி அவர்கள் இலக்கை நிர்ணயிக்கவும், அதை அடையவும் செயல்பட வேண்டும். அவர்கள் உங்களிடம் மனம் திறந்து பேசவும், அவர்கள் தவறான பாதையில் செல்லாதவாறு இருக்கும் வகையிலும் பெற்றோர் செயல்பட வேண்டும்.

ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், மும்பை அணியை எதிர்த்து விளையாடி ஜம்மு-காஷ்மீர் கிரிக்கெட் அணி வெற்றிபெற்றது. சமீபத்தில்தான் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் வெள்ளப்பெருக்கால் பாதிப்படைந்தது. அந்த மாநிலத்தின் விளையாட்டு மைதானங்கள் நீரில் மூழ்கின. இந்த இடையூறுகள் இருந்த பின்னரும் அந்த மாநில அணி கிரிக்கெட் போட்டியில் வெற்றிபெற்றது. கிரிக்கெட் போட்டித் தொடரில் இது ஒரு உயர்ந்த வெற்றியாகும். அந்த அணியை நான் பாராட்டுகிறேன்.

ஜூன் 21}ஆம் தேதியை "சர்வதேச யோகா தினமாக' அறிவிக்க வேண்டும் என்று ஐநா சபையில் இந்தியா வலியுறுத்தியது. இத்தீர்மானத்தை ஐநா சபை ஏற்று அறிவித்துள்ளது. இதற்கு 177 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

அதுபோல, நெல்சன் மண்டேலாவின் பிறந்த நாளை சர்வதேச தினமாகவும் ஐநா அறிவிக்கவுள்ளது. இத்தீர்மானத்துக்கு 166 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன என்றார் அவர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

குழந்தை திருமணம் இல்லாத இந்திய ...

குழந்தை திருமணம் இல்லாத இந்தியாவை உருவாக்கும் வகையில் அன்னபூர்ணா தேவி இன்று பால் விவாகம் முகத் பாரத் தேசிய இயக்கத்தை தொடங்கி வைக்கிறார் குழந்தை திருமணம் இல்லாத இந்தியாவை உருவாக்கும் வகையில் மத்திய ...

தமிழக கூட்டுறவு வங்கிக்கு அமித ...

தமிழக கூட்டுறவு வங்கிக்கு அமித்ஷா விருது வழங்கினார் டில்லியில் சர்வதேச கூட்டுறவு ஆண்டு விழா நேற்று நடந்தது. ...

அரசியலமைப்பு சட்டத்திற்கு உட் ...

அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு எனது  கடமைகளை செய்கிறேன் – பிரதமர் மோடி '' யாருடைய அதிகார வரம்பையும் மீறாமல், அரசியலமைப்பு சட்டத்திற்கு ...

நீதித்துறையின் பணியை, எதிர்க்க ...

நீதித்துறையின் பணியை, எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன 'நீதித்துறையின் பணியை, எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன' என மக்களவை ...

மக்களின் விருப்பங்களை மதிக்கவ ...

மக்களின் விருப்பங்களை மதிக்கவில்லை எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்றத்தின் இருஅவைகளும் நேற்று ஒத்திவைக்கப் பட்டன. ...

அரசியலில் தி.மு.க – வின் அரசியல ...

அரசியலில் தி.மு.க – வின் அரசியல் நாடகத்தை கேள்வி கேட்க அனைவருக்கும் உரிமை உண்டு – அண்ணாமலை அரசியலில் தி.மு.க.,வின் இரட்டை வேடத்தை கேள்வி கேட்க அனைவருக்கும் ...

மருத்துவ செய்திகள்

பாகற்காயின் மருத்துவக் குணம்

பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ...

‘எலும்பு வங்கி’ என்றால் என்ன?

உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ...

சித்த மருத்துவம்

சித்தர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி, தேசம் என்ற பாகுபாடு இல்லை. அகத்தியர், ...