பொதுக் கூட்டத்திற்கு வந்திருந்த லட்சக்கணக்கான தொண்டர்களுக்கு உள்ளம் கனிந்த நன்றி

 மரியாதைக்குரிய அகில பாரத தலைவர் திரு. அமித்ஷா அவர்களின் தமிழக சுற்றுப்பயணம் வெற்றி பயணமாக அமைந்திருக்கிறது. பொதுக் கூட்டத்திற்கு வந்திருந்த லட்சக்கணக்கான தொண்டர்களுக்கும், பொது மக்களுக்கும் எங்கள் உள்ளம் கனிந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

எதையும் எதிர்பார்க்காமல் வந்திருந்த கூட்டம், தமிழக அரசியலில் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்பது மட்டுமல்லாமல் எந்த வித எதிர்ப்பையும் எதிர்த்து அரசியல் செய்யும் துணிச்சலையும் அளித்திருக்கிறது.

பாரதிய ஜனதா கட்சி, மத்தியில் ஒரு வளர்ச்சியை நோக்கி ஒரு நல்லாட்சியை நடத்தி வருகிறது. பத்தாண்டு காலமாக காங்கிரஸ் கட்சியின் சீரழிக்கப்பட்ட பொருளாதாரத்தை சீர் செய்வதும், ஊழலினால் மக்கள் பணம் சுரண்டப்பட்டதை நேர் செய்வதும் அவ்வளவு சுலபமான காரியம் அல்ல ஆனாலும் நல்லாட்சியை கொடுத்து வருகிறார்கள்.

இதை பொறுத்துக் கொள்ளாமல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் விமர்சனம் செய்கிறார்கள். பாராளுமன்றத்தை முடக்குகிறார்கள். ஏழை மக்களின் இயலாமையை சாதமாக்கி கட்டாயமாக, கொள்கைக்கு மாறாக மதம் மாற்றுவது பல சமூக பிரச்சனைக்கு வழிவகுக்கும் என்பதால் கட்டாய மத மாற்றம் தேவை என்ற விவாதம் வந்திருக்கிறது.

அது பாராளுமன்ற விவாதத்தை முடக்கும் அளவிற்கு அதிகார ப+ர்வமாக அறிவிக்கப்படவில்லை. பாராளுமன்றத்தில் மரியாதைக்குரிய திரு. வெங்கையா நாயுடு அவர்கள் மிக தெளிவாக இதை வலியுறுத்தினார்கள். அதன் பின்பும் ஒரே சட்டம் கொண்டு வந்து விட்டதை போன்றும் பாரதிய ஜனதா மக்களிடம் மத ஒற்றுமையை குலைத்து மதவேற்றுமை ஏற்படுத்துவது போன்ற பொய்யான தோற்றத்தை ஏற்படுத்தி அதில் அரசியல் லாபம் காணும் முயற்சியில் எதிர்கட்சிகள் இறங்கியுள்ளன.

அலகாபாத் உயர்நீதிமன்றம் கொள்கை பிடிப்பில்லாமல், கொள்கையை முற்றிலும் ஏற்றுக் கொள்ளாமல், மதமாற்றம் செய்பவரை ஒத்துக் கொள்ள முடியாது என்றும் இப்படி மதம் மாற்றப்படுபவர்கள் அத்தனைபேரும் பெண்களாகவே இருக்கிறார்கள் என்றும் தீர்ப்பளித்திருப்பதும் இன்று கவனத்தில் கொள்ள வேண்டியதொன்றாகும்.

மதவேற்றுமையை பாஜக ஏற்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டு அடிப்படை ஆதரமற்ற குற்றம்.சிறுபான்மையினரை ஓட்டு வங்கியாக பயன்படுத்தி வந்த கட்சியிடமிருந்து இத்தகைய போலி மதசார்பின்மை குரல்கள் எழும்புவது ஒன்றும் வியப்பில்லை.

ஆனாலும் பாஜக நிலையை தெளிவு படுத்த வேண்டியதாகிறது. இளங்கோவன் போன்றவர்கள், அமித்ஷா அவர்கள் ராகுலை விமர்சனம் செய்ய கூடாது ஏனென்றால் சுதந்திர போராட்டத்தில் ஈடுப்பட்ட நேருவின் பேரனை எப்படி விமர்சனம் செய்யலாம் என்று கேட்கிறார். அமித்ஷா என்ன சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டாரா? என்றும் கேட்கிறார்.

மரியாதைக்குரிய சோனியாகாந்தி அவர்கள் எத்தனை போராட்டத்தில் கலந்து கொண்டார்கள் என்று தெரிவித்தால் இதை சொல்வதற்கு வசதியாக இருக்கும். சுதந்திர வாங்கியதில் மரியாதைக்குரிய சோனியாகாந்தியின் பங்கு என்ன என்பதை நாடு அறியும். நாட்டில் நடந்த ஊழலில் அவரின் பங்கு என்ன என்பதையும் நாடு அறியும். ஆனால் திரு. அமித்ஷா அவர்கள் சுதந்திர போராட்டத்தில் பங்கெடுத்திருக்கிறார்கள்.

ஆம்…
ஊழல் மிகுந்த மோசமான ஆட்சி நடத்திய காங்கிரஸிடமிருந்து நாட்டை மீட்டெடுத்த இரண்டாவது சுதந்திர போரில் திரு. அமித்ஷா அவர்கள் மிக பெரிய பங்கெடுத்திருக்கிறார்கள.
காமராஜர் பெயரை சொன்னாலே பலனில்லை என்று சொல்லும் காங்கிரஸ்காரர்கள் அன்று வாங்கிய சுதந்திரத்தை பற்றி இன்றைய காங்கிரஸ்காரர்கள் நம்பினாலும் மக்கள் நம்பபோவதில்லை. இன்று கூட வாகனங்களுக்கு வாங்க படும் சுங்கவரியை ரத்து செய்வதற்கான மாபெரும் முயற்சியை பாஜக மேற்கொண்டிருப்பது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

மக்கள் மீது சுமத்திய சுமையை நீக்க மத்திய அரசு பாடுபடுகிறது ஆனால் மாநில அரசோ போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்சனைகளை கண்டுகொள்ளாததால், இன்று அவர்கள் 29ம் தேதி முதல் வேலைநிறுத்தம் அறிவித்திருக்கிறார்.கள்

இதனால் 90 சதவீத அரசு பேருந்துகள் இயங்காமல் முடங்கிவிடும். இது பொது மக்களுக்கு மிகுந்த இன்னலை ஏற்படுத்தும். தொடர்ந்து பண்டிகை காலம் வர இருக்கும் நிலையில், படிக்கும் குழந்தைகளும், மாணவ மாணவிகளும், விடுமுறைக்கு செல்லும் சூழ்நிலையில் பணியிலிருந்தும் பல ஊழியர்கள் விடுமுறையில் செல்லும் சூழ்நிலையில் இந்த போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் மிகுந்த இடைய+றை ஏற்படுத்தும். மற்றும் தனியார் போக்குவரத்து வரம்புக்கு மீறி கட்டணத்தை உயர்த்தி மக்களுக்கு மேலும் சிரமம் அளிக்க கூடும். எனவே தமிழக அரசு மக்களுக்கு எந்தவித இடைய+றும் ஏற்படாமல் இந்த பிரச்சனையை அணுக வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன்.

அதே போல ரேஷன் கார்டுகளில், உள் தாள் ஒட்டுவதற்கு பல குளறுபடிகள் நடக்கின்றன. குடும்பதலைவர்கள் வர தேவையில்லை என்று குறிப்பளிக்கிறார்கள். ஆனால் உள் தாள் ஒட்ட செல்லும் பெண்களிடம் குடும்ப தலைவர்கள் வர வேண்டும் என கட்டாய படுத்துகிறார்கள. அதனால் மக்கள் குறிப்பாக பெண்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி இருக்கிறார்கள். இது தமிழக அரசின் நிர்வாக சீர்கேட்டை காண்பிக்கிறது. இதனை பொது மக்களுக்கு பிரச்சனைகள் ஏற்படாமல் முறைபடுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன்.
ஜார்கண்ட் மற்றும் ஜம்மு காஷ்மீரில் பொது மக்கள் பாஜக-விற்கு அமோக ஆதரவளித்திருக்கிறார்கள. பாஜக-வின் வெற்றிக்கு பாடுபட்ட தொண்டர்களுக்கும், தலைவர்களுக்கும், வாக்களித்த மக்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்படிக்கு
என்றும் மக்கள் பணியில்

(டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன்)

பாஜக மாநில தலைவர்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் கலந்து கொள்ள மோடி வலியுறுத்தல் இந்தியாவை  அறிந்துகொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறுபுலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தல ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை  மோடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

மருத்துவ செய்திகள்

அகத்திப் பூவின் மருத்துவக் குணம்

அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது.

துவர்ப்பு

உடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், பிதைப்பையும், துவர்ப்புச் ...

சூரியகாந்திப் பூவின் மருத்துவக் குணம்

சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ...