இந்த வெற்றி 2016 தேர்தலில் தமிழகத்திலும் கிடைக்கும்

 நரேந்திர மோடியின் நல்லாட்சிக்கு மக்கள் அங்கீகாரம் அளித்து வருகிறார்கள். மற்ற மாநிலங்களில் தொடரும் இந்தவெற்றி 2016 தேர்தலில் தமிழகத்திலும் கிடைக்கும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஜார்க்கண்ட், காஷ்மீர் மாநிலத்தில் நடை பெற்ற தேர்தலில் பாஜக அமோக வெற்றிபெற்றது. ஜார்க்கண்ட்டில் ஆட்சியை கைப்பற்றியது. காஷ்மீரில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இந்தவெற்றியை தமிழக பாஜகவினர் சென்னை கமலாலயத்தில் பட்டாசுவெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினார்கள்.

இதைத்தொடர்ந்து பாஜகவின் வெற்றிகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தர ராஜன் கூறியதாவது: பாஜக.,வின் தேசிய தலைவராக அமித்ஷா பொறுப்பேற்ற பிறகு நடைபெற்ற அனைத்து மாநில தேர்தல்களிலும் பாஜக மிகப் பெரிய வெற்றியை பெற்றுள்ளது.

நரேந்திர மோடியின் நல்லாட்சிக்கு மக்கள் அங்கீகாரம் தந்து வருகிறார்கள். மற்ற மாநிலங்களில் தொடரும் இந்தவெற்றி 2016 தேர்தலில் தமிழகத்திலும் கிடைக்கும். அமித் ஷாவின் வருகை அதற்கான மாற்றத்தை ஏற்படுத்தும். பாஜக.,வின் வெற்றியை பொறுக்க முடியாத எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை முடக்குகின்றனர். கட்டாய மதமாற்ற தடைசட்டம் என்பது ஒரு விவாத பொருளாவே இருந்து வருகிறது. அலகாபாத் உயர்நீதிமன்றம் கூட திருமணத்துக்காக ஒருபெண் மதம் மாறுவதை ஏற்க முடியாது. இது ஒரு சமூக அவலமாக மாறிவிடும் எனக் கூறியுள்ளது.

பாஜக மதவேற்றுமையை ஏற்படுத்துவது போல் காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் விமர்சித்து உள்ளார். ஊழலுக்கு காரண மானவர்கள், ஊழலால் தண்டிக்கப் பட்டவர்கள் எங்களை பற்றி விமர்சிக்க தகுதி இல்லை. நேருவின் கொள்ளு பேரன் என்ற ஒரு காரணத்துக்காக ராகுல்காந்தி விமர்சனத்துக்கு அப்பாற்றப்பட்டவர் அல்ல.

சுதந்திரத்துக்காக போராடிய அன்றைய காங்கிரஸ் வேறு. இன்றைய காங்கிரஸ் வேறு. அமித்ஷா சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டவரா? என்று இளங்கோவன் கேட்கிறார். ஊழலுக்கு எதிரான இரண்டாவது சுதந்திரபோரை அமித்ஷா தலைமையில் எங்கள் கட்சி நடத்தி வருகிறது என்பதை அவருக்கு நினைவூட்டுகிறேன். இளங்கோவன், வாசன், திருமாவளவன் ஆகியோருக்கு நான் ஒருவேண்டுகோள் வைக்கிறேன். மதத்தின் பெயரால் மக்கள் இடையே மத வேற்றுமையை ஏற்படுத்தி அரசியல் செய்யாதீர்கள். திருமாவளவன் கூறுவதுபோல் எந்த மாநிலத்திலும் இந்தியை திணிக்கவில்லை. நாங்கள் பலம்பெற்று வருவதை பொறுக்க முடியாமல் இதுமாதிரியான விமர்சனங்களை கூறி வருகிறார்கள் என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

உளுந்தின் மருத்துவக் குணம்

இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ...

சங்கிலையின் மருத்துவக் குணம்

சங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை வெந்நீரில் 20 ...

முயற்சியின் அளவே தியானம்

சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ...