போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகள் அனைத்தும் உடனடியாக நிறைவேற்றப்படா விட்டால் கடும் விளைவுகளை தமிழக அரசு சந்திக்கநேரிடும் என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் எச்சரிக்கை விடுத்தார்.
சென்னை பல்லவன் இல்ல சாலையில் அமைந்துள்ள போக்குவரத்துக் கழக தொழிற்சங்க அலுவலக வளாகத்தில் ஞாயிற்றுக் கிழமை (டிச.28) நடைபெற்ற அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டத்தில் பங்கேற்ற அவர், பின்னர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
போக்குவரத்து ஊழியர்களின் ஊதியம் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை மறு நிர்ணயம் செய்யப்பட வேண்டும், 240 நாள்கள் பணி முடித்தவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளைத்தான் வலியுறுத்தி வருகின்றனர்.இந்தகோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து 15 மாதங்களாக தொழிலாளர்கள் பல்வேறுகட்ட போராட்டங்களை நடத்தி வந்த போதும், தமிழக அரசு அதை கண்டுகொள்ளவே இல்லை. அதனை தொடர்ந்துதான் டிசம்பர் 29-ம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தை அவர்கள் அறிவித்தனர்.
போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகளை அரசு உடனேபரிசீலிக்க வேண்டும். அவர்களின் வேலைநிறுத்தத்தால் போராட்டத்தால், பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என பாஜக சார்பிலும் ஏற்கெனவே அறிக்கை வெளியிடப்பட்டது.ஆனால், தொழிலாளர்களின் ஊதியத்தைப் பிடித்தம் செய்து ஒரு நாள் முன்கூட்டியே, ஞாயிற்றுக்கிழமை (டிச.28) முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தை செய்யும்படி தமிழக அரசு தள்ளியுள்ளது.மேலும், வேலைநிறுத்தப் போராட்டம் என தொழிலாளர்கள் அறிவித்த பிறகு, பேருந்துகள் அனைத்தும் எந்தவித பாதிப்புமின்றி இயங்கும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது, வேண்டுமென்றே பொதுமக்களை அலைக்கழிக்கத் திட்டமிடப்பட்டதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
தொழிலாளர்களின் போராட்டத்துக்கு பாஜக-வைச் சேர்ந்து பி.எம்.எஸ். தொழிற்சங்கமும் ஆதரவு தெரிவித்துள்ளது. பொதுமக்களுக்கு எந்த பாதிப்பு வந்தாலும் பாஜக பொறுத்துக்கொள்ளாது. மேலும், தொழிலாளர்களின் கோரிக்கைகள் தொடர்பாக அமைச்சர் அளவில் இதுவரை பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை. அதிகாரிகள் அளவிலேயே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.எனவே, கோரிக்கைகள் மீது அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் கடுமையான விளைவுகளை தமிழக அரசு சந்திக்க நேரிடும் என்றார் அவர்.
பொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை திர்க சில ... |
சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.