பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவத்தில் மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யதயாராக இருப்பதாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். மேலும் குண்டு வெடிப்பு குறித்து பொது மக்கள் பீதி அடைய தேவையில்லை என்று முதலமைச்சர் சித்தராமையா கேட்டுக் கொண்டுள்ளார்.
பெங்களூரு பிரிகேட் அருகே சர்ச் தெருவில் உள்ள தனியார் ஓட்டல் முன்புள்ள நடைபாதையில் நேற்றிரவு குண்டு வெடித்த சம்பவம் தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவிடம் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார். மாநில அரசிற்கு தேவையான உதவிகளைசெய்ய தயாராக உள்ளதாக அவர் தெரிவித்தார். இந்தசம்பவத்தின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் கிர்ரன் ரிஜ்ஜூ தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து குண்டு வெடிப்பு நடைபெற்ற இடத்தை சித்தராமையா நேரில் பார்வையிட்டார். பின்னர் அவர் கூறும்போது, பெங்களூருவில் புத்தாண்டை சீர் குலைக்கவும், பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தவும் குண்டு வெடிப்பை நிகழ்த்தி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அதேபோன்று மத்திய அமைச்சர் சதானந்த கவுடாவும் குண்டுவெடிப்பு நடந்த இடத்தை பார்வையிட்டுள்ளார். இதனையடுத்து மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட நாட்டின் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
குளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், வயிற்று உப்பிசம், ... |
உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ... |
கீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் சத்துக்களும் உள்ளன. ... |
Leave a Reply
You must be logged in to post a comment.