பிரபல மலையாள திரைப்பட நடிகர் சுரேஷ் கோபி விரைவில் பாஜக.,வில் இணைகிறார்

 பிரபல மலையாள திரைப்பட நடிகர் சுரேஷ் கோபி விரைவில் பாஜக.,வில் இணைய உள்ளார். கேரளாவில் செப்டம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தலும் அடுத்தாண்டு மே மாதம் சட்ட சபை தேர்தலும் நடைபெற உள்ளது.

இந்த தேர்தல்களுக்கு முன் கேரளாவில் பாஜக.,வை பலப்படுத்த கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதில் ஒருபகுதியாக திரையுலக பிரபலங்களை கட்சியில் சேர்த்து அதன்மூலம் கட்சியை பலப்படுத்த அவர் விரும்புவதாக தெரிகிறது.

இதனால் கேரளாவில் முன்னணியில் விளங்கும் சிலதிரையுலக பிரபலங்கள் விரைவில் பா.ஜ.க.வில் சேரக்கூடும் என எதிர்பார்க்கப் படுகிறது. இந்நிலையில் பிரபல மலையாள நடிகரான சுரேஷ் கோபி பா.ஜ.க.வில் சேரப்போவதாக சூசகமாக தெரிவித்துள்ளார்.

கொல்லத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த சுரேஷ்கோபி, ஆரன முல்லா விமான நிலைய விவகாரம் குறித்து நான் கருத்துகளை தெரிவித் திருக்கிறேன். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர் காங்கிரசார் எனக்கு எதிராக போராட்டம் நடத்தி உருவ பொம்மை எரித்தனர். அப்போது என் நெஞ்சம் உடைந்து விட்டது. அதன் பின்னர் என்னுடைய அரசியல் பார்வையும் மாறிவிட்டது. பிரதமர் நரேந்திரமோடியின் விருப்பங்களை நிறைவேற்ற நான் விரும்புகிறேன். ஆனால் இதுதொடர்பாக கூறுவதற்கு எதுவும் இல்லை. அது குறித்து மோடிதான் தெரிவிக்க வேண்டும் என்றார். மோடியின் விருப்பங்களை நிறைவேற்றதயார் என்று சுரேஷ் கோபி கூறியிருப்பதன் மூலம் அவர் பா.ஜ.கவில் விரைவில் சேரக் கூடும் என தெரிகிறது

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தொடர்ந்து ஓரிரு முறை கருச் சிதைவு ஏற்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்?

இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ...

தும்பையின் மருத்துவக் குணம்

தும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை டம்ளர் அளவு ...

அதிமதுரத்தின் மருத்துவக் குணம்

இதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் உள்ள சுவகைகளை ...