தமிழக அரசியல் வட்டாரம் அமீத் ஷாவைக் கண்டு அலறுவதன் ரகசியம்

 ஒரு வார காலமாக தமிழக தொலைக்காட்சி ஊடகங்களில் அமீத் ஷா வருகை மணிக்கணக்காக விவாதிக்கப்பட்டது. பங்குபெற்ற திமுக, அதிமுக, இடதுசாரி பிரபலங்கள், அமீத் ஷாவால், "இந்த திராவிட மண்ணில் ஒன்றும் செய்ய முடியாது" என்று குரல் நடுக்கத்தோடுதான் சொன்னார்கள்! "பொது எதிரியை விரட்ட" பழைய பகைவர்கள் திமுக அதிமுகவும் சேர்ந்து கொண்டு எதிர்த்தனர்.

அமீத் ஷாவின் மீதுள்ள பயம் நியாயமானதுதான். 'போர்ப்படை தளபதி', புலிகேசி', 'ஆறரை கோடி தமிழர்களின் தலைவன்', 'கலிங்கத்துப் பரணி', 'வாழும் தெய்வம்', 'அன்னை மேரிமாதா' என்றெல்லாம் விளித்து போஸ்டர் ஒட்டப்படும் தலைவர்களும் அமீத் ஷாவிடம் அஞ்ச என்ன காரணம்?

அமீத் பாய் அணில் சந்திர ஷா என்கிற அமீத் ஷா 1964 அக்டோபர் 22 அன்று மும்பையில் பிறந்தார். அவரது தகப்பனார் செல்வச் செழிப்புள்ள ஒரு வியாபாரி. மெஹஷானா என்னும் ஊரில் பள்ளிப் படிப்பை முடித்த அமீத் ஷா, கல்லூரி படிப்பிற்காக ஆமதாபாத் இடம் பெயர்ந்தார். அங்கு C.U. ஷா கல்லூரியில், 'பயோ கெமிஸ்ட்ரி' பட்டம் பெற்றார். 17வது வயதில் ஏபிவிபி-ல் சேர்ந்தார். அதற்கு முன்பே சங்க ஷாகாக்களில் பயிற்சி பெற்றார். 18வது வயதில் நரேந்திர மோடியின் நண்பரானார். அப்போது மோடி குஜராத்தில் சங்க பிரச்சாரகராக பணிபுரிந்து வந்தார்.

அமீத் ஷாவின் துவக்கமே அதிரடிதான். அவர் எந்த விஷயத்தையும் மாற்றி யோசிக்கிறார். 1991ல் காந்தி நகர் தொகுதியில் போட்டியிட்ட அத்வானிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார்.

குஜராத்தில் காங்கிரஸ் பெரும் சக்தியாக விளங்கியது. அதனுடைய சக்தி கேந்திரம் எது என ஆராய்ந்தார். கிராமப்புறங்களில் காங்கிரசின் செல்வாக்கை தகர்க்க முடிவு செய்தார்.

பஞ்சாயத்துத் தேர்தலில் போட்டியிட்டு தோற்றுப்போன 8,000 கிராமப்புற இளைஞர்களை கையிலெடுத்தார். இரண்டே ஆண்டுகளில் காங்கிரசை செல்வாக்கு இழக்கச் செய்தார்.

அடுத்து இந்தியாவிலேயே பெரிய கூட்டுறவு வங்கி ஆமதாபாத் கூட்டுறவு வங்கி. அது காங்கிரஸின் கையில் இருந்தது. அதன் மீது குறிவைத்து அதை கைப்பற்றினார். அப்போது ரூ.36 கோடி நஷ்டத்தில் இயங்கிய அந்த வங்கியை ரூ.27 கோடி லாபம் பெறும் வங்கியாக மாற்றினார். இன்று அது ரூ.250 கோடி லாபம் ஈட்டித் தருகிறது.

மாணவர்களின் அறிவைப் பெருக்கும் விளையாட்டான செஸ் என்னும் சதுரங்க விளையாட்டை குஜராத் பள்ளிகள் அனைத்திலும் மோடி கட்டாயமாக்கியதற்கும் ஒரு பின்னணி உண்டு. அமீத் ஷாவிற்கு செஸ்சில் மிகுந்த ஈடுபாடு உண்டு. அவர் குஜராத் மாநில செஸ் அமைப்பின் தலைவரானார். மாநில கிரிக்கெட் அமைப்பின் துணைத் தலைவராகி, மோடியை மாநில தலைவராக்கினார். குஜராத் கிரிக்கெட் அசோசியேஷன் நாட்டிலேயே அதிக பணக்கார அமைப்பு.

இப்படி வெற்றி மேல் வெற்றி குவித்து வந்தபோது தான் 33 வயதே ஆனா அமீத் ஷாவை சர்கெஜ் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட கட்சி பணித்தது. 56 சதவீத வாக்குகளை பெற்று அமோக வெற்றி பெற்றார். தொடர்ந்து 4 முறை 70 சதவீதம் வரை வாக்குகள் பெற்று வெற்றியைத் தொடர்ந்தார்.

2001ல் மோடி முதல்வரான போது அமீத் ஷா மோடியின் அமைச்சரவையில் இடம் பெற்றார். தொடர்ந்து 2014 வரை (இடையில் 'சொரபுதீன் ஷேக்' என்கவுண்டர் வழக்கில் இவர் மத்திய காங்கிரஸ் அரசால் சேர்க்கப்பட்டு, ராஜினாமா செய்த காலம் போக) அமைச்சராக இருந்தார். இவரின் துரிதமான, சிறப்பான செயல்பாடுகளை கண்ட மோடி, 12 துறைகளுக்கு இதுவரை அமைச்சர் ஆக்கினார். ஒரேநேரத்தில் 12 அமைச்சர்களை கையாண்ட மிகச் சிறந்த நிர்வாகி என்ற பெயரை பெற்றார்.

கொள்கை ரீதியான செயல் பாட்டில் சமாதானம் செய்து கொள்ளாதவர் அமீத் ஷா. 'பொடா' சட்டத்தை மத்திய காங்கிரஸ் அரசு வாபஸ் பெற்றுக் கொண்டபோது, அதற்கு மாற்றாக Gujarat Organised Crime Act ஐ கொண்டு வந்தார். இவையெல்லாம் கடுமையான எதிர்ப்பை மீறி நிறைவேற்றப் பட்டவை.

குஜராத்தின் வளர்ச்சிக்கு பெரும் மூளையாக நரேந்திர மோடியின் வெற்றிக்கு பெரும் துணையாக பணியாற்றியவர் அமீத் ஷா.

இந்தப் பின்னணியில் தான் 2014 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிக் கணக்கை துவக்க உத்தரப்பிரதேசம் இவர் கையில் ஒப்படைக்கப்பட்டது.

நாட்டின் மிகப்பெரிய மாநிலம். 80 தொகுதிகளில் 10ல் மட்டுமே பாஜக இருந்தது. உ.பியை துறுவினார். சமாஜ்வாதி, பகுஜன் கட்சிகளிடையே மக்களின் அதிருப்தி மேலோங்கி இருப்பதைக் கண்டு பிடித்தார். 450 வீடியோ ரதம் உருவாக்கி தொலைக்காட்சி ஊடங்களே செல்லாத கிராமங்கள் எல்லாம் சென்றார். 1,40,000 பூத்களிலும் 5லிருந்து 10 பேர் கொண்ட கமிட்டி அமைத்தார். இவரின் வெற்றி இங்கேதான் தொடங்கியது. மக்களிடம் யாருக்கு ஆதரவு அதிகம் இருக்கிறதோ அவர்களை வேட்பாளராக்கினார். 73 தொகுதிகளில் வெற்றி பெற வைத்தார்.
அரசியலை கலையாக பார்த்த காலம் மாறி அரசியலை விஞ்ஞானமாக்கினார் அமீத் ஷா. இந்த பயிற்சிகள் எந்த கல்லூரிகளிலும் பல்கலைக் கழகங்களிலும் போதிக்கப்படுவதில்லை. மாறாக மனிதனை உருவாக்கும் ஆர்.எஸ்.எஸ்ஸின் அடிப்படை பயிற்சிகள் இந்த சாதுர்யத்தையும் சாமர்த்தியத்தையும் ஒவ்வொருவரிடமும் உருவாக்குகிறது. அமீத் ஷா ஆர்.எஸ்.எஸ்ஸின் மாணவன்.

இப்போது புரியும் ஏன் தமிழக கட்சிகளுக்கு அமீத் ஷாவின் வருகை வயிற்றில் புளியைக் கரைக்கிறது என்று.

நாடாளுமன்ற வெற்றியோடு அமீத் ஷா உறங்கப் போகவில்லை. ஒருவேளை, அதை மோடி அலை என்றோ காங்கிரஸ் மீதிருந்த அதிருப்தி என்று சொல்லி தட்டிக் கழித்து விடலாம். ஆனால் அதற்கு பின்பு, மகாராஷ்டிரா, ஹரியானாவில் அமீத் ஷா தொடர்ந்து பெற்ற வெற்றிகள் தான் அவர் 'திட்டமிடும் வித்தகன்', 'செயல்பாட்டில் அர்ஜூனன்' என்பதை நிரூபித்திருக்கிறது.

தற்போது வெளிவந்துள்ள ஜார்கண்ட் மாநில வெற்றி, காலடி பதிக்க முடியாது என்ற காஷ்மீரத்தின் கணிசமான வெற்றி இவை அமீத் ஷாவின் அடுத்தடுத்த வெற்றி மைல் கல்கள்.

காஷ்மீரத்தின் 87தொகுதிகளில் 59 தொகுதிகள் முஸ்லிம் மெஜாரிட்டி உள்ள தொகுதிகள். வெறும் 28 தொகுதிகள் தான் போட்டிக்கே அர்த்தமுள்ளது. அதற்குப் பின்பும் இந்த வெற்றி என்பது அமீத் ஷாவுக்கு ஆர்.எஸ்.எஸ் தந்த பலம்தான்.

போனவாரம் சென்னை மறைமலை நகரின் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அமீத் ஷா இரண்டே விஷயங்களை நறுக்குத் தெறித்தாற்போல குறிப்பிட்டார்.

ஒன்று, நான் இங்கு அரசியல் பேச வரவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களித்த லட்சோப லட்சம் பேருக்கு நன்றி சொல்ல வந்துள்ளேன்.

இரண்டும், உங்களுடையை இனிய தமிழ் மொழியை நான் கற்று வருகிறேன். அடுத்த முறை தமிழில் பேசுவேன். தமிழ் கலாசாரம், பண்பாடு, மொழி, தமிழின் கௌரவம் இவைகளை காக்க பாராட்டிய ஜனதா கட்சி செயல்படும்.

இதற்குப் பின்னால் நடைபெற்ற ஊழியர் கூட்டத்தில் 60,000 பூத்களில் 60 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க முடிவு செய்யப்பட்டது. வாக்காளர் பட்டியலை பார்த்து உறுப்பினர் படிவத்தை பூர்த்தி செய்து போலிக்கணக்கு காட்டும் தமிழக கட்சிகள் அமீத் ஷாவின் அதிரடியில் அஞ்சுவது சகஜம் தானே?

அமீத் ஷாவின் தமிழக வருகை, தலைமை இல்லாமல் தடுமாறும் அதிமுகவிற்கும், வாரிசு சண்டையில் குடும்பமே குப்புற கிடக்கும் திமுகவிற்கும், இல்லாத காங்கிரசுக்கும், பொல்லாத இடதுசாரிகளுக்கும் சிம்ம சொப்பனமாக இருப்பது சகஜம் தானே?

நன்றி : விஜய பாரதம்
எஸ்.ஆர்.சேகர்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மக்களின் விருப்பங்களை மதிக்கவ ...

மக்களின் விருப்பங்களை மதிக்கவில்லை எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்றத்தின் இருஅவைகளும் நேற்று ஒத்திவைக்கப் பட்டன. ...

அரசியலில் தி.மு.க – வின் அரசியல ...

அரசியலில் தி.மு.க – வின் அரசியல் நாடகத்தை கேள்வி கேட்க அனைவருக்கும் உரிமை உண்டு – அண்ணாமலை அரசியலில் தி.மு.க.,வின் இரட்டை வேடத்தை கேள்வி கேட்க அனைவருக்கும் ...

கூட்டுறவு இயக்கத்தை பொருளாதார ...

கூட்டுறவு இயக்கத்தை பொருளாதாரத்துடன் இணைக்க மோடி அழைப்பு கூட்டுறவு இயக்கத்தை, சுழற்சி பொருளாதாரத்துடன் இணைப்பதன் அவசியத்தை பிரதமர் ...

இந்திய அரசியல் சாசன தினத்தையொட ...

இந்திய அரசியல் சாசன தினத்தையொட்டி இன்று மோடி உரை இந்திய அரசியல் சாசன தினத்தையொட்டி இன்று (நவ. 26), ...

மகாயுதி’ கூட்டணி வெற்றிக்கு வ ...

மகாயுதி’ கூட்டணி வெற்றிக்கு வழிகாட்டிய ஆர்.எஸ்.எஸ் சனிக்கிழமை (23-11-2024) அன்று வெளியான மகாராஷ்டிர சட்டப் பேரவைத் ...

இந்தியாவில் கூட்டுறவு துறையை வ ...

இந்தியாவில் கூட்டுறவு துறையை வலுப்படுத்தி வருகிறோம்-மோடி பெருமிதம் '' இந்தியாவில் கூட்டுறவு இயக்கத்தை வலுப்படுத்தி வருகிறோம், '' ...

மருத்துவ செய்திகள்

குப்பைமேனியின் மருத்துவ குணம்

குப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் சிறிதளவு உப்புச் ...

அத்தியின் மருத்துவ குணம்

சிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் அத்தி இலையில் ...

செம்பரத்தையின் மருத்துவக் குணம்

செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும்.