தில்லி சட்ட சபை தேர்தல் வரும் பிப்ரவரி 7ம் தேதி நடைபெறும் என இந்திய தலைமைதேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பந் நேற்று மாலை அறிவிப்புவெளியிட்டார். இதனைத் தொடர்ந்து அங்கு நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்குவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தலைமையில் பாஜக தலைவர்கள், தில்லி சட்ட சபை தேர்தல் குறித்து நேற்றுமாலை ஆலோசனை கூட்டம் நடத்தினர். நள்ளிரவுவரை நீடித்த இந்த ஆலோசனை கூட்டத்தில் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வியூகங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாம். தற்போது எம்.எல்.ஏ.க்களாக உள்ளவர்கள் மற்றும் வேட்பாளர்கள் குறித்து விவாதிக்கப் பட்டுள்ளது.
அந்தகூட்டத்தில் அமித்ஷா பேசியது குறித்து பாஜக வட்டாரங்கங்கள் கூறுகையில்,, வாக்கு சாவடிகள் மற்றும் வாக்களார்களை சென்றடைவது உள்ளிட்டவற்றில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும், பூத் மட்டத்தில் சிறப்பாக களப்பணியாற்று பவர்களை கண்டறிவதுடன், ஒவ்வொரு தொகுதியிலும் வேட்பாளர்களை கண்டறியவேண்டும் என்று கூறியதாக தெரிவித்தனர்.
மேலும் இன்னும் இரண்டு ,மூன்று நாட்களுக்குள் பாஜக தேர்வுகுழு, தில்லி சட்ட சபை தேர்தலில் போட்யிடும் பேட்பாளர்கள் பட்டியலை இறுதிசெய்யும் என்று தெரிவித்தனர். வேட்புமனு தாக்கல் புதன் கிழமை தொடங்குகிறது. நாட்டின் தலைநகரான தில்லியில் வெற்றிபெற்று புதிய அரசை அமைக்க வேண்டும் என்ற முனைப்பில் பாஜக தீவிரம் காட்டிவருகிறது.
இது குறித்து பாஜக தேசியசெயலாளர் ஸ்ரீகாந்த் சர்மா கூறுகையில், தேர்தல் அறிவிக்கப்பட்டதை நாங்கள் வரவேற்கிறோம். நாங்கள் முழு மெஜாரிட்டியுடன் வெற்றிபெற்று ஆட்சியைப்பிடிப்பதுடன் மத்திய அரசுடன் இணைந்து தில்லியில் வளர்ச்சி திட்டங்களை செயல் படுத்துவோம் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ... |
கோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் வேகவைத்தால் கெட்டியாய்விடும்; ... |
கோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, பேய் சீந்தில், ... |
Leave a Reply
You must be logged in to post a comment.