இந்துக்களுக்கு மனம் புண்படி எழுதும் எழுத்துக்கள்– செய்யும் செயல்பாடுகள், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்து வருகிறது. மொகலாயர், கிறிஸ்தவர்களால் மட்டுமல்ல நம் சொந்த இந்து சகோதரர்களே அதை செய்திருக்கின்றனர், செய்தும் வருகின்றனர்.
கடவுள் இல்லை என்பதும், மதமே இல்லை என்ற , 5000 வருடங்களுக்கு முன்பே "கர்வா" என்னு ம் சிந்தனை கொண்டவர்கள் இருந்திருக்கிறார்கள்.
அதற்காக பூமி உருண்டை என்ற கலிலியோ, கிறிஸ்த்தவத்துக்கு எதிரான சிந்தனையாளர் சாக்ரடீஸ் போன்றோரை தூக்கிலிடடது போல இந்துமதம் அவர்களை தூக்கிலிடவில்லை.
அந்த காலத்தில் 8 வகையான திருமண முறை இருந்தது என்றும் அதில் 4 வகை திருமண முறைகளை —- ஏற்றுக் கொள்ளவில்லை என்பதும்== அதில் ஒன்று தான் "நியோகா" முறை என்பதும், மனுஸ்மிருத்தியில் குறிப்பிட்டிருக்கிறது.
நேற்றைய டிவி விவாதங்களில், "மாதொரு பாகனுக்கு" ஆதரவாக "நியோகா" முறை சொல்லப்பட்டு– மகாபாரத்தில் அம்முறையில் பிறந்த ஒரு சிலரின் பெயர் பட்டியல் வாசிக்கப்பட்டது.
தான் செய்த தவறை நியாயப் படுத்த , நாம் மதிக்கும் தலைவர்கள், புராணங்கள், நீதி நூல்களை "துணைக்கு அழைப்பது" இவர்களின் வழக்கம், வாடிக்கை. –குடிகாரர்கள், காந்தியே ஒருமுறை மது அருந்தியதாக சொல்லியிருக்கிறாரே, மாமிசம் சாப்பிட்டதாக எழுதி இருக்கிறாரெ, அதனால் தான் நான் குடிக்கிறேன் என சொல்வதும் இந்த "அநியாயங்களுக்கு" ஆதரவு திரட்டுபவர்களின் வாதம்.
விதிவிலக்குகள் விதியாகக்கூடது…. அன்றைய காலத்தை இன்றைக்கு ஒப்பு நோக்கமுடியாது… "நீதிகள்" மட்டுமே எடுத்துக் கொள்ளப்படவேண்டும். "நெறிமுறைகள்" காலத்துக்கு காலம் மாறலாம்…..
பெருமாள் முருகனின் புத்தகத்தில், குழந்தையில்லா தம்பதிகள், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரருக்கு எடுக்கப்படும் 15 நாள் திருவிழாவில், 14-ம் நாள், எந்த பெண்ணும் எந்த ஆணோடும் உடல் உறவு வைத்துக் கொள்ளலாம் என்றும், அன்று ஊரிலுள்ள அத்தனை பொண்ணும் "தேவதாசிகள்" (நான் எழுத்தாளர் உபயோகித்த வார்த்தையை எழுதவில்லை) என்று குறிப்பிட்டுள்ளதும், ""இது பலகாலமாக கடைபிடிக்கப்பட்ட நடைமுறை"- என்று தமது எழுத்துக்கு அவர் நியாயத்தையும் கற்பித்திருப்பது மாபெரும் மக்கள் கிளர்ச்சியை ஏற்படுத்தியது.
91-வயது நிரம்பிய காளியண்ணன் என்னும் முன்னாள் பாராளு மன்ற உறுப்பினர் தனக்கு தெரிந்து இப்படி ஒரு நடைமுறை அங்கு இருந்ததே இல்லை என்று கூறியிருக்கிறார்.
கடையடைப்பு, போராட்டம் முடிந்து பேச்சுவார்த்தையும் முடிந்து பெருமாள் முருகன் நிபந்தனையற்ற மன்னிப்பும், புத்தகத்தை திரும்பபெறுவதாக அறிவித்ததும் பிரச்சனையே முடிவுக்கு கொண்டு வந்திருப்பது ஆறுதலான செய்திதான்.
நன்றி ; எஸ்.ஆர். சேகர்
பாஜக மாநிலப் பொருளாளர்
மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ... |
ஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி விடுதல், வாயில் ... |
எட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ஆரஞ்சுப்பழ நிறத்தில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.