மேற்கு வங்கத்தில் முகாமிட்டுள்ள அமித் ஷா முன்னிலையில் மம்தாவின் ஆளும் அமைச்சர்கள் 5 பேர் பாஜக., கட்சியில் தங்களை இணைத்துகொள்ள முடிவு செய்திருப்பதாக கோல் கட்டா வட்டார தகவல் தெரிவிக்கிறது.
பா.ஜ.க, தலைவர் அமித்ஷா கட்சியை பலப்படுத்தும் விதமாக பல்வேறு மாநிலங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் இன்று அமித்ஷா மேற்குவங்கம் பர்த்வானில் பொதுக்கூட்டம் ஒன்றில் பங்கேற்றார். இந்தகூட்டத்தில் பேசிய அவர் இம் மாநிலத்தில் பாஜக., விரைவில் ஆட்சி அமைக்கும், இதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.
இவர் டில்லி திரும்பும் முன்னதாக அங்கு ஆளும் திரிணாமூல் காங்., கட்சியைசேர்ந்த அமைச்சர்கள் 5 பேரை பா.ஜ.,வில் சேர்க்க திட்டமிட்டுள்ளார். இதுதொடர்பாக பேச்சும் நடந்து வருகிறதாம். இன்று காலையில் மம்தாவின் நெருங்கிய நபரான தினேஷ் திரிவேதி ( முன்னாள் ரயில்வே அமைச்சர்) பாஜக.,வில் சேர விருப்பம் தெரிவித்துள்ளார். ஏற்கனவே பலமுக்கிய பிரமுகர்கள் பாஜக,.வில் தங்களை இணைத்து கொண்டனர். இந்நிலையில் அமைச்சர்கள் நிறம்மாறுவதால் மம்தா அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.
மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ... |
ஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி பிரச்சனை இன்று ... |
முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.