பாராளுமன்றத்தில் மக்கள் வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்ற ஆதரவுகேட்கவே மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி, ஜெயலலிதாவை சந்தித்தார். இதில் எந்த பூனைக் குட்டியும் வெளியே வரவில்லை என தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-
சென்னையில் மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி ஜெயலலிதாவை சந்தித்தது குறித்து பல சர்ச்சைகளை கிளப்புகிறார்கள். இதற்கு முன்பு மத்தியமந்திரி ரவிசங்கர் பிரசாத்தும், வெங்கையா நாயுடுவும் ஜெயலலிதாவை சந்தித்த போது இதே போல் சர்ச்சை கிளப்பினார்கள். இவர்கள் எல்லாம் ஊழலில் திளைத்த வர்களுக்கு சிறப்பான வரவேற்பு கொடுத்தவர்கள்தான்.
பாராளுமன்றத்தில் மக்கள் நலனுக்கான வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்ற ஆதரவு கேட்டுத்தான் ஜெயலலிதாவை அருண் ஜெட்லி சந்தித்தார். பாஜக. நாட்டை வளர்ச்சிபாதையில் அழைத்து செல்ல முனைப்புடன் செயல்படுகிறது.
எனவே இந்த சந்திப்பின் போது எந்த பூனைக் குட்டியும் வெளியே வரவில்லை. யானைக் குட்டியும் வெளியே வரவில்லை. இதற்கு அருண் ஜெட்லி விளக்கம் அளிக்க வேண்டியது இல்லை. மாநில தலைமை விளக்கம் தந்தாள் போதுமானது.
வயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரி செய்யும். சிறுநீரகக் கோளாறுகளையும், சிறுநீர்ப்பைக் ... |
தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ... |
அகத்தை சுத்த படுத்துவதால் அகத்தி என பெயரை வைத்துள்ளனர்..சுமார் 50பது ஆண்டுகளுக்கு முன்பு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.