நேதாஜி கொல்லப்பட்டாரா?

 இந்த சுப்ரமணிசாமிக்குப் பின்னால் அப்படி என்னதான் சக்தி இருக்கிறதோ?

கடந்த 10-ஆம் தேதியன்று கொல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், 'அரசாங்கம் சொல்வதைப் போல நேதாஜி 1945-ஆம் ஆண்டில் விமான விபத்தில் இறக்கவில்லை. 1953-ஆம் ஆண்டுவாக்கில் ரசியாவின் சைபீரியா பகுதியில் அவர் கொல்லப்பட்டார்' என சூட்டைக் கிளப்பியுள்ளார் சு.சாமி.

நமக்குக் கிடைத்துள்ள ஆவணங்களின்படி நேதாஜியே விமானவிபத்தில் தான் இறந்துவிட்டதாகத் தகவலைப் பரப்பிவிட்டு, அப்போது ரசியாவின் கட்டுப்பாட்டில் இருந்த இன்றைய சீனத்தின் மஞ்சூரியா பகுதிக்குத் தப்பிச் சென்றார். அன்றைய ரசிய அரசுத்தலைவர் ஸ்டாலின், நேதாஜியை கடுங்குளிர்ப் பிரதேசமான சைபீரியாவில் சிறையில் அடித்தார். அங்கு 1953 வாக்கில் தூக்கிலிடப்பட்டோ மூச்சுத் திணற வைக்கப்பட்டோ நேதாஜி கொல்லப்பட்டார்.

சைபீரியாவின் யகுட்ஷ்க் சிறையில் நேதாஜி அடைக்கப்பட்டார் என்பது அப்போதைய பிரதமர் நேருவுக்குத் தெரியும். இது தொடர்பான கமுக்க ஆவணங்களை மத்திய அரசு வெளியிடவேண்டும். நேதாஜியின் மரணம் தொடர்பான சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஏனென்றால் இரண்டாம் உலகப் போரில் பிரிட்டன் வெற்றிபெற்றபோதும், இந்தியாவிலிருந்து வெளியேறுவதற்கு முக்கிய காரணமாக இருந்தது. நேதாஜியின் வீரதீரமான போராட்டச் செயல்பாடுதான் என சு.சாமி சொல்லியிருப்பது, நேதாஜியின் குடும்பத்தினர் வரலாற்றியலாளர்கள், நேதாஜியின் அபிமானிகளிடம் மீண்டும் பதற்றம் கலந்த ஆர்வத்தைக் கிளறிவிட்டிருக்கிறது .

பல தரப்பினரும் நேதாஜியின் மரணம் பற்றிய ஆவணங்களை பகிரங்கமாக வெளியிட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. மேற்குவங்க மாநிலத்தின் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சுகெந்து சேகர் ராய், கடந்த நவம்பரில் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த உள்துறை இணையமைச்சர் அரிபாய் பார்த்திபாய் சவுத்ரி, நேதாஜி தொடர்பாக மத்திய அரசிடம் மொத்தம் 87 ஆவணங்கள் இருப்பதாகவும் அவற்றை ரகசியமான கோப்புகளாகப் பாதுகாப்பதாகவும் தெரிவித்தார். இவற்றில் 60 ஆவணங்கள் பிரதமர் அலுவலகத்திலும் 29 ஆவணங்கள் வெளியுறவு அமைச்சகத்திடம் இருக்கின்றன. பிரதமர் அலுவலகத்திலிருந்த கோப்புகளில் இரண்டை மட்டும் தேசிய ஆவணக் காப்பகத்துக்கு அனுப்பிவைத்துள்ளனர். இந்த விவரங்களைத் தெரிவித்தபோதும், இவற்றை பொதுமக்கள் தெரிந்து கொள்ளுமாறு வெளியிடமுடியாது என மோடி அரசு கூறியுள்ளதுதான், சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது.

கடந்த ஆகஸ்ட், அக்டோபர் மாதங்களை அடுத்தடுத்து இது பற்றி மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு, திரிணாமுல் எம்.பி. சுகெந்து சேகர் ராய், கடிதம் அனுப்பியிருந்தார். அது பற்றிப் பரிசீலனை செய்வதாக ராஜ்நாத்சிங் பதில் அனுப்பினார். எனினும் பிற நாடுகளுடனான உறவு பாதிக்கும் என அரசு தயங்குகிறது.

'அப்படி பங்கம் வந்தாலும் பரவாயில்லை, நாட்டு மக்களுக்கு நேதாஜியின் இறுதிக்காலம் பற்றி இருக்கும் ஆவணங்களை வெளியிடவேண்டும்' என்கிறார் சு.சாமி. நேதாஜி உருவாக்கிய பார்வர்ட் ப்ளாக் கட்சியின் பொதுச்செயலாளர் தேவபிரசாத் பிஷ்வாஷ். ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் கூட இதில் அதிக ஆர்வம் காட்டுவது, கவனிக்கத்தக்கது.

ஆர்.எஸ்.எஸ். தலைவர்களில் ஒருவரான இந்திரேசுகுமாரை, நேதாஜியின் கொள்ளுப்பேரன் சந்திரகுமார் போஸ் மற்றும் சித்ரா கோஷ், பேராசிரியர் டி.என்.போஸ் ஆகியோர் உள்பட நேதாஜியின் குடும்பத்தினர், கடந்தமாதம் 27ஆம் தேதியன்று கொல்கத்தாவில் சந்தித்து கடிதம் ஒன்றை அளித்தனர். அதில், வாஜ்பாய் ஆட்சியில் நேதாஜியின் மரணம் குறித்து ஆய்வதற்காக நியமிக்கப்பட்ட ஒரு நபர் கமிஷனின் தலைவர் நீதிபதி முகர்ஜியே, மத்திய அரசு தன்வசமுள்ள முக்கியமான ஆவணங்களைத் தனகுக் காட்டமருத்துவிட்டது எனக் குறிப்பிட்டுள்ளார். நேதாஜியின் இறுதிக்காலம் பற்றிய கேள்விகளை இது இன்னும் வலுவாக்கதான் செய்கிறது என்று நேதாஜியின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மோடி அரசிடம் இதபற்றி முறையிடுவதாக இந்திரேசுகுமார், அவர்களிடம் தெரிவித்திருக்கிறார்.

முகர்ஜி கமிஷனுக்கு முன்பு, நேதாஜி பற்றி விசாரிக்க இரண்டு கமிஷன்கள் அமைக்கப்பட்டன. ஒன்று, 1956-ல் நேரு பிரதமராக இருந்தபோது இந்திய தேசிய இராணுவத்தின் முன்னாள் தளபதியும் அப்போதைய எம்.பி.யுமான ஷாநவாஷ்கான் தலைமையில் மூவர் கமிட்டி அமைக்கப்பட்டது. அதில் ஐ.சி.எஸ். அதிகாரி மித்ரா என்பவர் மேற்குவங்க அரசு சார்பிலும், நேதாஜியின் அண்ணன் சுரேஷ் சந்திரபோஸ் ஆகியோர் இடம்பெற்றனர். இந்தியா, ஜப்பான், தாய்லாந்து, வியட்நாம் நாடுகளுக்குச் சென்ற மூவர் குழு, 67 பேரைச் சந்தித்துப் பேசியது. அந்தக் குழுவின் இறுதி அறிக்கையில், 1945 ஆகஸ்ட் 18ஆம் தேதியன்று பார்மோசாவில்(தைவான்) நடந்த விமானவிபத்தில் நேதாஜி இறந்துவிட்டார் என்று முடிவாகக் கூறப்பட்டது. அதன் ஆரம்ப குறிப்புகளை ஏற்றுக்கொண்ட சுரேஷ்சந்திர போஸ், நேதாஜியின் மரணத்தை ஏற்கமுடியாது எனக் கூறி அதில் கையெழுத்திடவில்லை. மற்ற இரண்டு உறுப்பினர்களும் முக்கிய ஆவணங்களை தன்னிடம் காட்டவில்லை என்றும் நேரு சொன்னதன் படியே அவர்கள் அப்படிச்செய்ததாகவும் தனியாக குறிப்பு எழுதினர். மேலும் ஷாவும், மித்ராவும் மேற்குவங்க முதல்வராக இருந்த பி.சி.ராயும் இறுதி அறிக்கையில் கையெழுத்திடுமாறு தன்னை வற்புருத்தினார்கள் என்றும் நேதாஜியின் அண்ணன் சுரேஷ் கூறினார்.

இந்த விவகாரம் பற்றி வரலாற்றியல் அறிஞர் லியோனர்ட் கார்டன், ஆய்வுமுறைப்படி அளிக்கப்பட சாட்சியங்களில் இருந்து அப்படி ஒரு முடிவுக்கு சுரேஷ் போஸ் வர முகாந்திரம் இருக்கிறது என்று குறிப்பிட்டார்.
60-கள் முழுவதும் நேதாஜியின் மரண சர்ச்சை தொடர்ந்த படி இருந்தது. 1970-ல் பஞ்சாப் உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஜி.டி.கோஸ்லாவைக் கொண்டு ஒரு நபர் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அவர் தந்த அறிக்கையில், நேதாஜியின் இறுதிக்காலம் பற்றி தெளிவான முடிவு எதுவும் கூறப்படவில்லை.

மூன்றாவது முறையாக நீதிமன்ற உத்தரவுப்படி, 1999-ல் வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தீதிபதி எம்.கே.முகர்ஜியைக் கொண்டு ஒரு நபர் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. முந்தைய கமிட்டியினரைப் போல அல்லாமல், நீதிபதி முகர்ஜி சிரத்தை எடுத்து, ரசியா, தைவான், ஜப்பான் உள்பட பல நாடுகளுக்கும் சென்று, ஏராளமான தகவல்களைத் திரட்டினார். முடிவாக, விமான விபத்தில் சுபாஷ் சந்திர போஸ் இறக்கவில்லை என அறிக்கை அளித்தார். 2005 நவம்பரில் அவர் அறிக்கையை அளித்தபோது, 2006, மே 17-ல் தான் நாடாளுமன்றத்தில் அந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. எந்த காரணத்தையும் கூறாமல், அப்போதைய காங். கூட்டணி அரசு முகர்ஜி அறிக்கையை நிராகரித்தது" என்கிறார்கள் நேதாஜி அபிமானிகள்.

மேலும், (தைவானை ஆண்ட) ஜப்பானின் டோக்கியோவில் உள்ள ரெங்கோஜி கோயிலில் வைக்கப்பட்டிருப்பது நேதாஜியின் அஷ்திதான் என்பதையும் மறுத்த முகர்ஜி கமிஷன், அது ஜப்பானியப் படைவீரர் இச்சிரோ அகுரோவின் அஸ்திதான் என்றும் தெரிவித்தது.

நேதாஜியின் விமான விபத்தில் தப்பிய ஒரே மனிதர், அவருக்கு நம்பிக்கையான உதவியாளரான ரகுமான் மட்டுமே. அவரோ நேதாஜி இறந்துவிட்டார் என்றே கடைசி வரைக்கும் சொல்லிவந்தார். ஆனால் கமிஷன் விசாரணைகளில் முன்னுக்குப்பின் முரணாக வாக்குமூலம் கொடுத்தார். நேதாஜியின் சகோதரர் சுரேஷ் போஸ் எத்தனை முறை கேட்டபோதும், அதே பதிலைத்தான் கூறினார், ரகுமான்.

கோஸ்லா கமிஷன் விசாரணையில் ஆஜராகிய மேற்குவங்க முன்னாள் போலீஸ் அதிகாரி எஸ்.எம். கோஸ்வாமி, "1948-ல் மாஸ்கோவுக்கு இந்தியத் தூதுக் குழுவில் சென்ற ராதாகிருஷ்ணன், நேதாஜியைச் சந்தித்துள்ளார். அப்போது இந்தியாவுக்கு தான் திரும்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு நேதாஜி கேட்டுள்ளார்.

1954-ல் ராதாகிருஷ்ணன், டெல்லியில் வைத்து இதை என்னிடம் கூறினார். பின்னர் குடியரசுத் தலைவராக ஆனபிறகு கொல்கத்தாவுக்கு ராதாகிருஷ்ணன் வந்த போதும், நேதாஜி தகவலை மீண்டும் உறுதிப்படுத்தினார். இதை வெளிப்படையாகச் சொல்லலாமே என்று கேட்டதற்கு, அப்படி அறிக்கை வெளியிட்டு, நேதாஜி ஒருவேளை இந்தியாவுக்கு வராவிட்டால் என்னுடைய நிலையை நினைத்துப் பாருங்கள் என்று ராதாகிருஷ்ணன் என்னிடம் கூறினார்" என வாக்குமூலம் அளித்தார். நேருவின் சகோதரியான விஜயலட்சுமி பண்டிட்டும் ரசியாவில் நேதாஜியைச் சந்தித்துள்ளார் என்றும் கோஷ்வாமி கூறியது இன்றுவரை முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

இத்துடன் இதே சுப்ரமணியன்சுவாமி, 1978-ல் ஜனதா கட்சியின் எம்.பி.யாக இருந்தபோது முதல் பிரதமர் நேரு மீது அதிர்ச்சியான குற்றச்சாட்டை முன்வைத்தார். அந்த ஆண்டு பிப்ரவரி 8ஆம் தேதியன்று மும்பையில் பேட்டியளித்த சு.சாமி, "1952-ல் ஜப்பான் அரசு தன்னிடமிருந்த இந்திய தேசிய ராணுவத்துக்குச் சொந்தமான தங்க நகைகளைக் கொண்ட பெட்டிகளை அனுப்பிவைத்தது. அதை அப்போதைய ஐ.சி.எஸ். அதிகாரி ஒருவர், ஜப்பானிலிருந்து சிறப்பு விமானம் மூலம் கொண்டுவந்தபோது சுங்கத்துறை அதிகாரி, அதை வெளியில் அனுப்ப மறுத்துவிட்டார். அதையடுத்து அந்த சுங்கத்துறை அதிகாரி நேருவின் முன்னாள் நிறுத்தப்பட்டார். அந்தப் பெட்டிகளும் நேருவின் தீன்மூர்த்தி இல்லத்துக்குக் கொண்டு செல்லப்பட்டன. ஆனால், அவற்றை அரசு கஜானாவில் சேர்க்கவே இல்லை" என்று வெடியைக் கொளுத்திப்போட, காங்கிரஸ் தரப்பில் கொந்தளித்து விட்டனர்.

இப்படியாக பல சம்பவங்களைப் பின்னிப் பிணைந்துள்ள நேதாஜியின் வரலாறு தொடர்பாக, புத்தகம் எழுதியுள்ள அனுஜ் தர் என்பவர், சாமியின் சமீபத்திய கருத்து பற்றிக் கேட்டதற்கு, "நேதாஜியை ஸ்டாலின் கொன்றிருக்க வாய்ப்பில்லை; ஏனென்றால் ஸ்டாலினுக்கு நேருவைப் பிடிக்காது; அதே சமயம், இரண்டாம் உலகப்போரில் ஜப்பான், ஜெர்மனிக்கு ஆதரவாகப் போர் நடத்திய நேதாஜி, இந்தியாவிலிருந்த பிரிட்டன் படையை வெல்ல முடியவில்லை. சுதந்திர இந்தியாவில் கால்வைக்கவே விரும்பிய அவர், பர்மா பகுதியிலிருந்து அன்றைய ரசியாவின் பகுதியான மஞ்சூரியா பகுதிக்குச் சென்று, ரசியாவின் ஆதரவைத் தேட முடிவுசெய்திருக்கலாம் அது முடியாத நிலையில், அங்கேயே இருந்து இறந்துபோயிருக்கலாம். விமானவிபத்து என்பது நேதாஜியே உருவாக்கிய கதையாக இருக்க வாய்ப்புண்டு என்பதே என்னுடைய ஆய்வில் தெரியவந்தது" என்று கூறினார்.

உலகத்தின் மிகப்பெரிய இரண்டு தலைவர்களைப் பற்றி சுப்ரமணியசாமி கூறியுள்ள குற்றச்சாட்டு மெய்ப்பிக்கப்பட வேண்டுமானால், நேதாஜி பற்றிய ரகசிய ஆவணங்களை மத்திய அரசு வெளியிடுவதுதான் தீர்வாக இருக்கும்.

நன்றி : நக்கீரன்
இரா. தமிழ்க்கனல்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அரசியலில் தி.மு.க – வின் அரசியல ...

அரசியலில் தி.மு.க – வின் அரசியல் நாடகத்தை கேள்வி கேட்க அனைவருக்கும் உரிமை உண்டு – அண்ணாமலை அரசியலில் தி.மு.க.,வின் இரட்டை வேடத்தை கேள்வி கேட்க அனைவருக்கும் ...

கூட்டுறவு இயக்கத்தை பொருளாதார ...

கூட்டுறவு இயக்கத்தை பொருளாதாரத்துடன் இணைக்க மோடி அழைப்பு கூட்டுறவு இயக்கத்தை, சுழற்சி பொருளாதாரத்துடன் இணைப்பதன் அவசியத்தை பிரதமர் ...

இந்திய அரசியல் சாசன தினத்தையொட ...

இந்திய அரசியல் சாசன தினத்தையொட்டி இன்று மோடி உரை இந்திய அரசியல் சாசன தினத்தையொட்டி இன்று (நவ. 26), ...

மகாயுதி’ கூட்டணி வெற்றிக்கு வ ...

மகாயுதி’ கூட்டணி வெற்றிக்கு வழிகாட்டிய ஆர்.எஸ்.எஸ் சனிக்கிழமை (23-11-2024) அன்று வெளியான மகாராஷ்டிர சட்டப் பேரவைத் ...

இந்தியாவில் கூட்டுறவு துறையை வ ...

இந்தியாவில் கூட்டுறவு துறையை வலுப்படுத்தி வருகிறோம்-மோடி பெருமிதம் '' இந்தியாவில் கூட்டுறவு இயக்கத்தை வலுப்படுத்தி வருகிறோம், '' ...

அதிகாரப்பசி கொண்ட கட்சிகளை மக் ...

அதிகாரப்பசி கொண்ட கட்சிகளை மக்கள் நிராகரித்து விட்டனர் –  மோடி  'பார்லியில் மக்களுக்காக என்றுமே காங்., பேசியதில்லை. அதிகாரப் பசி ...

மருத்துவ செய்திகள்

பாகற்காயின் மருத்துவக் குணம்

பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ...

முகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க

வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ...

மிகவும் மெலிந்து காணப்படுகிறவர்களுக்கு உணவு முறை

அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் சம்பந்தப்பட்ட உணவுகள்; ...