இந்திய விளையாட்டு வரலாற்றில் பாரா ஒலிம்பிக்கு தனி இடம் உண்டு

இந்திய விளையாட்டுவரலாற்றில், டோக்கியோ பாராலிம்பிக்ஸ் போட்டிக்கு எப்போதும் சிறப்பான இடம்உள்ளது என பிரதமர் நரேந்திர மோடி கூறினார். நமதுகுழுவில் உள்ள ஒவ்வொரு உறுப்பினரும் சாம்பியன் மற்றும் உற்சாகத்தின் ஊற்று என அவர் கூறினார்.

விளையாட்டு வீரர்களுக்கு நிலையான ஆதரவு அளித்ததற்காக அவர்களின் பயிற்சி யாளர்கள், உதவி ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினரை பிரதமர்பாராட்டினார். தனித்துவமான விருந்தோம்பல், முக்கிய விஷயங்களை கவனித்தது, அதிகம் தேவையான மீள் தகவல்களை பரப்பியது, இந்த ஒலிம்பிக்மூலம் ஒன்றாக இருந்தது ஆகியவற்றுக்காக ஜப்பான் குறிப்பாக டோக்கியோ மக்கள், ஜப்பான் அரசை அவர் பாராட்டினார்.

இது குறித்து தொடர் சுட்டுரையில் பிரதமர் கூறியதாவது:

‘‘ இந்திய விளையாட்டு வரலாற்றில், டோக்கியோ #Paralympics-க்கு எப்போதும் சிறப்பானஇடம் உள்ளது. இந்த விளையாட்டுப் போட்டி, ஒவ்வொரு இந்தியரின் நினைவிலும் இருக்கும் மற்றும் பலதலைமுறை விளையாட்டு வீரர்கள், விளையாட்டுகளை தொடர ஊக்குவிக்கும். நமது குழுவில் உள்ள ஒவ்வொரு உறுப்பினரும் சாம்பியன் மற்றும் உற்சாகத்தின் ஊற்று.

இந்தியாவென்ற அதிக எண்ணிக்கையிலான பதக்கங்கள், நமது மனதை மகிழ்ச்சியால் நிறைத்துள்ளன. இதற்காக விளையாட்டு வீரர்களின் பயிற்சியாளர்கள், உதவிஊழியர்கள் மற்றும் குடும்பத்தினரை பாராட்ட விரும்புகிறேன். விளையாட்டுகளில் நமதுவெற்றிகள் அதிக பங்கேற்பை உறுதிசெய்யும் என நம்புகிறோம்.

நான் முன்பு கூறியது போல், ஜப்பான், குறிப்பாக டோக்கியோ மக்கள் மற்றும் ஜப்பான் அரசு, தனித்துவமான விருந்தோம்பல், முக்கிய விஷயங்களை கவனித்தது, அதிகம்தேவையான மீள் தகவல்களை பரப்பியது, இந்த ஒலிம்பிக் மூலம் ஒன்றாக இருந்தது ஆகியவற்றுக்காக பாராட்டப்பட வேண்டும்’’ என கூறியுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் 47 லட்சம் விவசாயிகள ...

தமிழகத்தில் 47 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர் 'பிரதான் மந்திரி கிஸான் சம்மான் நிதி' எனப்படும், விவசாயிகளுக்கு ...

ஜம்மு – காஷ்மீருக்கு மாநில அந ...

ஜம்மு – காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும் -அமித் ஷா உறுதி ஜம்மு, ''சட்டசபை தேர்தலுக்குப் பின், ஜம்மு - காஷ்மீருக்கு ...

எழுத்தறிவு தின கொண்டாட்டங்களி ...

எழுத்தறிவு தின கொண்டாட்டங்களில் ஜக்தீப் தன்கர் பங்கேற்பு நமது வாழ்வில்குறைந்தபட்சம் ஒருவரையாவது எழுத்தறிவு பெற்றவராக மாற்ற ஒவ்வொருவரும் ...

புதிய கல்விக்கொள்கை சிறந்த மாற ...

புதிய கல்விக்கொள்கை சிறந்த மாற்றத்தை ஏற்படுத்தும் -குடியரசுத்துணைத்தலைவர் நமது வாழ்வில் குறைந்தபட்சம் ஒருவரையாவது எழுத்தறிவு பெற்றவராக மாற்ற ...

மாநிலத்தில் பயங்கரவாதிகள் அளி ...

மாநிலத்தில் பயங்கரவாதிகள் அளித்த கோவிலை மீண்டும் கட்டுவோம்-அமித்ஷா உறுதி ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, பா.ஜ.,வின் தேர்தல் ...

தெலுங்கானாவில் வெள்ள நிவாரண பக ...

தெலுங்கானாவில் வெள்ள நிவாரண பகுதிகளை மத்திய அமைச்சர் பார்வையிட்டார் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் மற்றும் ஊரக ...

மருத்துவ செய்திகள்

சங்கிலையின் மருத்துவக் குணம்

சங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை வெந்நீரில் 20 ...

ஆல்பொகாடா பழம்

இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ...

கருந்துளசியின் மருத்துவ குணம்

நஞ்சை முறிப்பவையாகவும், சீரணத்தைத் தூண்டுபவையாகவும் செயல்படுகிறது.