டெல்லி சட்ட சபை தேர்தல் முடிவுகளை நரேந்திர மோடி அரசின் செயல்பாடு மீதான வாக்கெடுப்பாக கருதமுடியாது என்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் மேலும் கூறியதாவது,
டெல்லியில் நடை பெறுவது மாநிலதேர்தல். அங்கு பிரதமர் நரேந்திரமோடி போட்டியிடவில்லை. டெல்லி தேர்தலில் முதல்வர் யார் என்பதை மக்கள்தான் முடிவு செய்யவேண்டும். டெல்லியில் பாஜக.,வுக்கும், மற்ற கட்சிகளுக்கும் இடையேயான போட்டி தான் நிலவுகிறது. பிரதமர் நரேந்திர மோடி அரசின் செயல்பாடுகள் குறித்து மக்கள் அளிக்கும் கருத்துகளின் வெளிப்பாடாக டெல்லி சட்ட சபை தேர்தல் முடிவுகளை எடுத்து கொள்ள கூடாது.
மகராஷ்டிரம், ஜார்கண்ட், அரியானா, ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்ற சட்ட சபை தேர்தல்களில் மோடி அரசின் செயல் பாட்டை வைத்துத் தான் மக்கள் பாஜக.,வுக்கு வெற்றிவாய்ப்பை அளித்தார்களா? அதுபோல மத்திய அரசின் செயல்பாடு மீதான வாக்கெடுப்பாக டெல்லிதேர்தல் முடிவுகளை கருத முடியாது. மோடியின் கரங்களுக்கு வலுசேர்க்க வேண்டும் என்ற மனோநிலை தான் மக்களிடையே நிலவுகிறது.
டெல்லியில் ஆட்சியமைத்த காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய இரு கட்சிகளும் மாநிலத்தை அழிவு பாதைக்கு கொண்டுசென்றன. அந்த இரு கட்சிகளுக்கும் இடையே நல்லதொடர்பு உள்ளது. எனவேதான் போலி நிறுவனங்கள் மூலம் முறைகேடாக நன்கொடை பெற்றதாக எழுந்த புகாரில் ஆம் ஆத்மி காங்கிரஸ் காப்பாற்ற முயற்சித்து வருகிறது என்று தெரிவித்தார்.
பொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் இதே ... |
கண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.