மதச்சார்பின்மை, சமத்துவம் நீக்கப்படலாமா?

 "குடியரசு தினத்திற்காக மத்திய அரசு சார்பாக அந்த விளம்பரம் வெளியிடப்பட்டது. ஆனால் அந்த விளம்பரத்தில் 1950-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சாசனத்தின் படம் வெளியானது. அதில் சமத்துவம், மதச்சார்பின்மை என்ற இரண்டு வார்த்தைகள் விடுபட்டதாக பல்வேறு கட்சிகள் குற்றச்சாட்டுகளை வைக்கின்றன.

விளம்பரத்தில் ஏற்பட்ட தவறுக்காக மத்திய அமைச்சர் ரத்தோர் விளக்கத்தையும் கொடுத்தார். இந்த விளக்கத்தை ஏற்காத பல்வேறு கட்சிகள் விவாதம் செய்வதிலேயே குறியாக இருக்கின்றன சிவசேனா கட்சியின் ஆலோசனையை மத்திய அமைச்சர் ரவிஷங்கர் பிரசாத் விவாதிக்கப்படும் என்றுதான் கூறியுள்ளார். ஆனால், அதற்குள் அந்த வார்த்தைகளை நீக்கிவிட்டது போல் பல்வேறு காட்சிகள் சர்ச்சைகளைக் கிளப்பி வருகின்றன.

அரசியல் நிர்ணய சபையில் கே.டி.ஷா, 'சமத்துவம், மதச்சார்பின்மை ஆகிய வார்த்தைகளை சேர்க்க வேண்டும்' என்று சொன்னபோது அப்போது அம்பேத்கர் அதை நிராகரித்துவிட்டார். 'காலத்திற்கு ஏற்றாற் போல் அரசாங்கம் முடிவு செய்து கொள்ளட்டும்' என்று அம்பேத்கர் கூறினார். அப்போது யாரும் அதற்கு எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. எந்த வித விவாதமும் எழுப்பப்படவில்லை. அதன் பின் 1950-ஆம் ஆண்டிலிருந்து 1976-ஆம் ஆண்டு வரை மதச்சார்பின்மை என்ற வார்த்தை இல்லாமல்தான் மதச்சார்பற்ற நாடாகத்தான் இந்தியா இருந்திருக்கிறது.

அதன் பிறகு அவசர காலத்தில் இந்திரா காந்தியால் இந்த வார்த்தைகள் எந்தவித விவாதமும் இல்லாமல் சட்டத்தில் கொண்டு வரப்பட்டது. விவாதம் இல்லாமல் கொண்டுவரப்பட்ட இந்த இரண்டு வார்த்தைகளை நீக்க, ஏன் விவாதம் செய்யக்கூடாது?

வெறும் எழுத்தளவில் தான் நம் தேசத்தில் மதச்சார்பின்மை இருக்கிறது. ஓர் உதாரணம் சொல்கிறேன், எத்தனையோ இந்துக் கோயில்களின் சொத்துகள் இன்னும் அரசிடம்தான் இருக்கின்றன. மற்ற மதங்களின் கோயில் சொத்துகள் அரசிடம் இல்லையே? இப்படி ஒரு சூழ்நிலையில் மதச்சார்பற்ற நாடு என்று நாம் எப்படிச் சொல்ல முடியும். எனவே அந்த இரண்டு வார்த்தைகளை நீக்குவது குறித்து விவாதம் செய்வதில் தவறில்லை.

உலகில் ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் சமத்துவத்துடன் உருவானது. ஆனால் அப்படி சமத்துவத்துடன் தற்போது எந்த நாடும் இல்லை. முப்பது ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்ட ஒரு வார்த்தையை இப்போதும் இருக்க வேண்டும் என்று உறுதியாக இருப்பதில் எந்தப் பயனும் இல்லை.

எங்களுடைய கட்சியில் மதச்சார்பின்மையை வைத்துதான் உறுதிமொழியை ஏற்றுக்கொள்கிறோம். அத்வானி அவர்கள் எப்போதும் வலியுறுத்தி வரும் சீரான மதச்சார்பின்மை நாட்டிற்குத் தேவை. அதற்கு பாஜக எப்போதும் உறுதுணையாக இருக்கும்."

நன்றி : புதிய தலைமுறை

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அதிகாரப்பசி கொண்ட கட்சிகளை மக் ...

அதிகாரப்பசி கொண்ட கட்சிகளை மக்கள் நிராகரித்து விட்டனர் –  மோடி  'பார்லியில் மக்களுக்காக என்றுமே காங்., பேசியதில்லை. அதிகாரப் பசி ...

சிட்டுக்குடுவிக்களின் எண்ணிக் ...

சிட்டுக்குடுவிக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது – மோடி “நாட்டில் குறைந்து வரும் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பல்வேறு ...

தேசிய மாணவர் படையில் இணையுங்கள ...

தேசிய மாணவர் படையில் இணையுங்கள் – பிரதமர் மோடி அழைப்பு  'என்.சி.சி.,யில் அதிகமான இளைஞர்கள் இணைய வேண்டும். வளர்ந்த இந்தியாவை ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் கலந்து கொள்ள மோடி வலியுறுத்தல் இந்தியாவை  அறிந்துகொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறுபுலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தல ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை  மோடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

மருத்துவ செய்திகள்

சங்கிலையின் மருத்துவக் குணம்

சங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை வெந்நீரில் 20 ...

குழந்தை வளர்ப்பு முறை

குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ...

முள்ளங்கியின் மருத்துவக் குணம்

முள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. செரிமானம் எளிதில் ...