சிமென்ட் நிறுவனங்கள் கூட்டுசேர்ந்து, விலையை உயர்த்துவதால், சாலைகள் மற்றும் நெடுஞ் சாலைகள் அமைப்பதற்கான திட்டச்செலவுகள் தாறுமாறாக எகிறியுள்ளன," என, மத்திய அமைச்சர் நிதின் கட்காரி குற்றம் சாட்டியுள்ளார்.
அவர், இந்திய தொழிலக கூட்டமைப்பின் கூட்டத்தில் பேசியதாவது: சிமென்ட் நிறுவனங்களின் உற்பத்திக்கும், விற்பனை விலைக்கும் இடையே அதிகவித்தியாசம் உள்ளது. அவை, கூட்டுசேர்ந்து செயல்படுகின்றன. ஒவ்வொரு நிறுவனமும் லாபம் சம்பாதிக்க வேண்டியதுதான். ஆனால், அளவிற்கதிகமாக சுரண்டக்கூடாது. சிமென்ட் நிறுவனங்களின் இத்தகைய போக்கு குறித்து, பிரதமரிடம் முறையிட உள்ளேன். அரசு, சிமென்ட்சாலைகளை அமைக்கவும், அவற்றுக்கான செலவைக் குறைக்கவும் விரும்புகிறது. ஆனால், மூலப்பொருள் விலை குறைவாக இருந்தால்தான், இது சாத்தியமாகும். தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தை, சீரமைக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. ஆணையத்தின் நடவடிக்கைகள் வெளிப்படையாக இருக்கவேண்டும். இதற்காக, ஆணையத்தை சீரமைத்து, நவீன மயமாக்க அரசு திட்டமிட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.
நடப்பு நிதியாண்டிற்குள், 8,000 கி.மீ., நெடுஞ் சாலை திட்டங்களை செயல்படுத்த, இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ஒருநாளில், சாலை அமைப்பதற்கு நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச இலக்கு, 3 கி.மீ., என்ற அளவில் இருந்து, 30 கி.மீ., ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
பீட்ரூட் சாறு புற்றுநோய்க்கு கொடுத்தால் குணமாகிவிடும். பீட்ரூட்டில் மேலும் பல மருத்துவ பயன்கள் ... |
ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ... |
நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.