இந்திய பெருங் கடல் நாடுகளுடன் கடல்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்தி கொள்ளும் நோக்கிலேயே, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அடுத்தமாதம், சிறிலங்கா உள்ளிட்ட நான்கு நாடுகளுக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக, டெக்கான் ஹெரால்ட் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
நரேந்திர மோடி அடுத்தமாதம், சிறிலங்கா, மாலைதீவு, செஷெல்ஸ், மொரிசியஸ் ஆகிய நாடுகளுக்கு அதிகார பூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.
இந்தியப் பெருங் கடல் நாடுகளான, சிறிலங்கா மற்றும் மாலத்தீவு ஆகிய நாடுகளுடன் கொண்டுள்ள கடல்சார் ஒத்துழைப்பை, மொரிசியஸ், செஷெல்ஸ் ஆகிய நாடுகளுக்கும் விரிவாக்கி கொள்வதற்கு இந்தியா எதிர்பார்க்கிறது.
நரேந்திர மோடியின் இந்தப்பயணம் இந்த நாடுகளுடன் கடல்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்தி கொள்வதற்கு பயன்படுத்தப் படவுள்ளது.
இந்திய பெருங் கடல் பிராந்தியத்தில், சீனாவின் அதிகரித்துவரும், மூலோபாயத் தலையீடுகளை தடுத்து நிறுத்துவதே, இந்தியாவின் இந்தநகர்வின் வெளிப்படையான நோக்கமாக கருதப்படுகிறது.
இரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களை பாதித்து ... |
காரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் சாப்பிட்டாலே ஒரு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.