பட்ஜெட் தொடர்பான மக்களின் எதிர் பார்ப்புகளை நிறைவேற்ற முயற்சிப்போம்

 நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படவுள்ள ரயில்வே பட்ஜெட் மக்களிடம் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

கடந்த சில வாரங்களாக டீசல் விலை குறைந்துவருவதால், ரயில்வே துறைக்கு சுமார் ரூ.6 ஆயிரம் கோடி மிச்சமாகிறது. அது அப்படியே ரயில்வே திட்டங்களை செயல்படுத்த ஒதுக்கப்படும். அதேநேரத்தில் சுமார் 3200 கோடி ரூபாய் அளவுக்கு அரசிடம் கூடுதல் நிதி ஒதுக் கீட்டை கோரும் என்று தெரிகிறது. வருவாயை உயர்த்தி அதன் மூலம் உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும், ரயில்வே துறையை நவீனப் படுத்துவதற்கும் பட்ஜெட்டில் அதிக முன்னுரிமை அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய வழித்தடங்கள் அமைத்தல், புதியரயில்களை அறிமுகப்படுத்துதல் ஆகியவற்றுக்காக ரயில்வே அமைச்சர் சுரேஷ்பிரபு, மத்திய நிதி யமைச்சர் அருண் ஜேட்லியிடம் பெரிய அளவில் நிதியைகோருவார் என்று தெரிகிறது.

தனியார் துறையுடன் இணைந்து ரயில்வே நவீனமய மாக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி ஏற்கெனவே கூறியுள்ளார். எனவே தனியார் துறையுடன் கைகோர்க்கும் வகையிலான புதிய அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெறும் என்று தெரிகிறது. , 'மேக் இன் இந்தியா' திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு அறிவிப்புகள் இடம் பெறும் என்றும் எதிர்பார்க்கலாம்.

மற்றவற்றுடன் ஒப்பிடும் போது கட்டணம் மிகக்குறைவாக இருப்பதால் இந்தியாவில் பொதுமக்கள் ரயில் பயணத்தையே பெரிதும் விரும்புகின்றனர்.

எனவே மக்களை கவரும்வகையில் புதியரயில்கள் போன்ற சில கவர்ச்சிகர அறிவிப்புகளும், ரயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் புதிய அறிவிப்புகளும் இடம் பெற வாய்ப்புண்டு.

ரயில்வே ஊழியர்களுக்கான ஊதியம், ஓய்வூதியம் ஆகியவை பெருமளவில் அதிகரித்துள்ளதால், ரயில்வே வருவாயில் இருந்து ஒதுக்கீடு செய்யப்படும் முதலீட்டின் அளவு ஆண்டுதோறும் குறைந்து வருகிறது.

முன்னெப்போதும் இல்லாத அளவில் பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது. அதுமட்டுமல்லாது பெரும் எதிர்பார்ப்புடன் பிரதமராக நரேந்திர மோடியை மக்கள் ஆட்சி பீடத்தில் அமர்த்தியுள்ளனர். சிறப்பான நிர்வாகம் தருவோம் என்பது மோடியின் முக்கிய தேர்தல் வாக்குறுதியாக இருந்தது.

ரயில்வே பட்ஜெட் குறித்து ரயில்வே அமைச்சர் சுரேஷ்பிரபு செய்தியாளர்களிடம் கூறியது: இப்போது ரயில்வேதுறை மிகவும் கடினமான கால கட்டத்தில் உள்ளது. எனினும் பட்ஜெட் தொடர்பான மக்களின் எதிர் பார்ப்புகளை நிறைவேற்ற முடிந்த அளவுக்கு சிறப்பாக முயற்சி மேற்கொண்டுள்ளோம்.

மாநில அரசுகள், எம்.பி.க்கள், சமூகத்தில் பல்வேறு தரப்பினரிடம் இருந்து புதியரயில்கள், புதிய வழித் தடங்கள் குறித்து ஏராளமான கோரிக்கைகள் வந்துள்ளன. அனைவரையும் முடிந்தளவுக்கு திருப்திப்படுத்த முயற்சித்துள்ளோம் என்று கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

மருத்துவ செய்திகள்

வயிற்றுப்புண் குணமாக

நன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை மட்டும் எடுத்து ...

வேம்புவின் மருத்துவக் குணம்

நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ...

இம்பூறல் மூலிகையின் மருத்துவக் குணம்

இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு ...