நாட்டின் பாதுகாப்புக்கே முன்னுரிமை

 கூட்டணிகளுக்கோ, கூட்டணி ஆட்சிக்கோ எங்கள் அரசு முக்கியத் துவம் அளிக்காது. மாறாக, நாட்டின் பாதுகாப்புக்கே முன்னுரிமை அளிப்போம் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெளிவுபடுத்தியுள்ளார்.

காஷ்மீரை ஆளும் பாஜக.-பி.டி.பி. கூட்டணி அரசின் முதல்மந்திரியான முப்தி முகமது சயித் தலைமையிலான ஆட்சியில் ஹுரியத் இயக்க தலைவர்களை சிறையிலிருந்து விடுவித்தது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இந்நிலையில், உத்தரப் பிரதேசம் மாநிலம், காசியாபாத்தில் இன்று நடைபெற்ற மத்திய தொழில்பாதுகாப்பு படை தொடர்பான நிகழ்ச்சியின் போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியதாவது:-

எந்த காரணத்துக்காகவும் நாட்டின் பாதுகாப்பில் எனது அரசு சமரசம் செய்துகொள்ளாது. எங்களை பொருத்தவரையில் கூட்டணி அரசாங்கமோ அல்லது தனிக்கட்சி அரசாங்கமோ.., அது எங்களுக்கு முன்னுரிமையான பிரச்சனை அல்ல. நாடும் நாட்டின் பாதுகாப்புமே எங்களது முன்னுரிமை என்ற எங்களது நோக்கத்தை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

நேற்று, பாராளுமன்றத்தில் தெரிவித்த அதேகருத்தை மீண்டும் தெளிவுப்படுத்த விரும்புகிறேன். ஆட்சி எங்களுக்கு முக்கியமல்ல; நாடுதான் எங்களுக்கு மூலமுதல் முக்கியத்துவம் வாய்ந்தது. எனது இந்தகருத்தில் எல்லா விவகாரங்களுமே உள்ளடக்கமாகி இருக்கின்றன. இந்த உண்மையை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்த விவகாரத்தைப் (ஹுரியத் இயக்க தலைவர்களை சிறையில் இருந்து விடுவித்தது) பொருத்தவரை நான் இப்போதைக்கு எதுவும் சொல்வதற்கில்லை. ஜம்முகாஷ்மீர் மாநில அரசு இதுதொடர்பாக வெளிப்படுத்தியுள்ள கருத்து எனக்கு திருப்தியாக இல்லை. இதுதொடர்பாக மேலும் சில தகவல்கள், விளக்கங்கள் தேவை என காஷ்மீர் அரசிடம் கேட்டிருக்கிறேன். அவை கிடைத்தபின்னரே நான் கருத்து தெரிவிக்க முடியும் என்றார் .

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் கலந்து கொள்ள மோடி வலியுறுத்தல் இந்தியாவை  அறிந்துகொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறுபுலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தல ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை  மோடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

மருத்துவ செய்திகள்

உடல் சூட்டை தணிக்கும் எலுமிச்சை

மஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை பழம், காய்,இலை ...

எலும்பு நைவு (OSTEOPOROSIS)

உடல் உழைப்பு குறைந்துபோய், தசைகளுக்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் போன்றவற்றை மேற்கொள்ள நேரமேயில்லாமல் ...

குங்குமப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், மேக நோய், ...