ராமர்கோயில் கட்டும் விவகாரத்தை கைவிட வில்லை

 உ.பி., மாநிலம், அயோத்தியில் ராமர்கோயில் கட்டும் விவகாரத்தை கைவிட வில்லை; இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணையை மத்திய அரசு விரைவுப் படுத்த வேண்டும் என ஆர்எஸ்எஸ் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் சுரேஷ் பய்யா ஜோஷி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்ததாவது:

ராமர்கோயில் விவகாரம் தொடர்பான வழக்கில், உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, ஹிந்துகளுக்கு சாதகமாக இருந்தது. தற்போது இந்தவிவகாரம், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.நீதித் துறை மிகவும் முக்கியமானது ஆகும். ஆனால், உச்ச நீதிமன்றத்தில் ராமர்கோயில் விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை தாமதமாக நடைபெறுகிறது. எனவே அந்தவழக்கு விசாரணையை அரசு விரைவுப் படுத்த வேண்டும்.ராமர்கோயில் விவகாரத்துக்காக தற்போது போராட்டம் நடத்தவேண்டிய அவசியம் இல்லை என கருதுகிறோம். இந்தவிவகாரத்தில், அடுத்த என்ன நடக்கிறது என்று பார்க்கவேண்டும். இதை ஒரு போதும் கைவிட்டுவிட மாட்டோம்.

பாகிஸ்தானில் அநீதியை சந்தித்த நூற்றுக் கணக்கான ஹிந்து குடும்பங்கள், அங்கிருந்து தப்பிவந்து குஜராத் உள்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தஞ்சமடைந் துள்ளனர். அவர்கள், தங்களுக்கு இந்திய குடியுரிமை வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்களை இந்திய அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த விவகாரத்துக்கு மத்திய அரசு அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.பசுவதை செய்வோருக்கு எதிராக மாநிலஅரசுகள் சட்டம் நிறைவேற்றினால் மட்டும் போதாது. அந்த சட்டத்தின் அடிப்படையில், பசு வதையில் ஈடுபடுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப் படுவதை உறுதிசெய்ய வேண்டும் என்றார் ஜோஷி.

மேற்கு வங்க மாநிலத்தில், கன்னியாஸ்திரி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்துக்கு ஜோஷி கடும்கண்டனம் தெரிவித்தார். இந்த சம்பவத்துக்கு மதச் சாயம் பூசி, இரு சமூகத்தினர் இடையே பதற்றத்தை ஏற்படுத்தும்செயலில் யாரும் ஈடுபடவேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அதிகாரப்பசி கொண்ட கட்சிகளை மக் ...

அதிகாரப்பசி கொண்ட கட்சிகளை மக்கள் நிராகரித்து விட்டனர் –  மோடி  'பார்லியில் மக்களுக்காக என்றுமே காங்., பேசியதில்லை. அதிகாரப் பசி ...

சிட்டுக்குடுவிக்களின் எண்ணிக் ...

சிட்டுக்குடுவிக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது – மோடி “நாட்டில் குறைந்து வரும் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பல்வேறு ...

தேசிய மாணவர் படையில் இணையுங்கள ...

தேசிய மாணவர் படையில் இணையுங்கள் – பிரதமர் மோடி அழைப்பு  'என்.சி.சி.,யில் அதிகமான இளைஞர்கள் இணைய வேண்டும். வளர்ந்த இந்தியாவை ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் கலந்து கொள்ள மோடி வலியுறுத்தல் இந்தியாவை  அறிந்துகொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறுபுலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தல ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை  மோடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

மருத்துவ செய்திகள்

சர்க்கரை நோய் குணமாக

முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு ...

வயிற்றுப்புண் குணமாக

நன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை மட்டும் எடுத்து ...

இரத்த அழுத்த நோய்

இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.