அம்பேத்கர் அவர்களின் குடும்பம் ஆன்மீக குடும்பம். அவரது தந்தை சிறந்த ஆன்மீகவாதி. அந்த குடும்பத்தில் பிறந்த பீமராவ் எவ்வளவு கஷ்டங்களை எதிர்கொள்ள வேண்டி இருந்தது. அவரது குழந்தைப்பருவத்திலும் இளமைப்பருவத்திலும் தீண்டாமை என்னும் கொடுமையால் மிகுந்த கசப்பான அனுபவங்களை அனுபவிக்க வேண்டி இருந்தது. அவர் தனது இளம் வயதில் தாயை இழந்திருந்தார். அவரது அக்காள் தாய் ஸ்தானத்திலிருந்து வளர்த்து வந்தார்.
அவரது அக்காள்தான் பீமராவிற்கு முடிவெட்டி விடுவார். ஏன் அக்கா எனக்கு முடிவெட்டி விடுகிறீர்கள்? என்று கேட்க, நாம் தாழ்ந்த ஜாதியில் பிறந்ததினால் நமக்கு மற்றவர்கள் முடிவெட்ட மாட்டார்கள் என்று தெரிவித்தார். அதன் தொடர்ச்சியாக பள்ளிப்பருவத்திலும் தீண்டாமை கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். உயர் ஜாதி மாணவர்கள் அமரும் இடத்தில் இவர் அமர முடியாது. இவருக்கு தனியாக சாக்கு விரித்து அமர வைத்தார்கள். குழந்தைப்பருவமும் பள்ளிப்பருவமும் கசப்பான அனுபவங்களாகவே இருந்தது.
இத்தனை கஷ்டங்களை எதிர்கொன்டாலும் தனது வாழ்க்கையில் முன்னேற வேண்டுமென்ற வேட்கை அவரது இதயத்தை துளைத்து எடுத்துக்கொண்டு இருந்தது. அதனால் தனது திறமையை வளர்த்துக் கொள்வதற்காகவும் தன்னை மேம்படுத்திக் கொள்வதற்காகவும் பல இன்னல்களையும் தாங்கிக் கொண்டு கல்வியில் தன்னை மேம்படுத்திக்கொண்டார். மேலை நாடுகளுக்குசென்றும் கல்வி கற்றார். கல்வியில் தன்னை உயர்த்திக்கொன்டாலும் தன்னை சமுதாயம் அங்கீகரிக்காத நிலையையே எதிர்கொள்ள வேண்டி இருந்தது. லண்டன் மேற்படிப்பை முடித்து திரும்பிய அவருக்கு படிப்பிற்கு உதவி செய்த பரோடா சமஸ்தானம் அவரது அறிவுதிறமைக்கு மதிப்பளித்து தனது சமஸ்தானத்தில் உயர் பதவி கொடுத்து பணியில் அமர்த்தியது. அங்கும் அவருக்கு தீண்டாமை கொடுமைதான். அவர் வெளியில் தங்குவதற்கு வீடுகிடைப்பதில் ஜாதி தடையாக இருந்தது.
உயர் ஜாதியினர் அவருக்கு வீடு கொடுக்க மறுத்தனர். ஒரு பார்சி சமுதாயத்தின் ஆசிரமத்தில் வாடகைக்கு தங்க அனுமதி கிடைத்தது. அங்கும் அவருக்கு சோதனைதான். ஜாதியின் வாசத்தை பிடித்து அவர் தங்கியிருந்த ஆசிரமத்திற்கு ஜாதி வெறிபிடித்த கும்பல் வந்து, நீ யார்? என்று கேட்டார்கள். அதற்க்கு நான் ஹிந்து என்று பதில் அளித்தார். ஹிந்து என்றால் என்ன ஜாதி என்று கேட்டு, அந்த ஆசிரமத்திலிருந்தும் விரட்டப்பட்டார். மேலை நாடுகளுக்குசென்று மூன்று முனைவர் பட்டம் (Ph.D) பெற்ற அம்பேத்கர் அவர்களுக்கு தங்குவதர்க்குக்கூட வீடு கிடைக்காமல் மரத்தடியில் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்த நிலையை நினைத்து கண் கலங்கினார், வேதனையுற்றார். நான் என்ன பாவம் செய்தேன், ஹிந்து மதத்தில் பிறந்தது குற்றமா? இதற்கு என்னதான் தீர்வு என்று சிந்தித்தார். தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு மும்பை சென்றார். எனக்கு மட்டுமல்ல இந்த பிரச்சினை, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த கோடிக்கணக்கான மக்களும் இந்த துயர நிலையை அனுபவிப்பதையும் கண்டு வேதனை அடைந்தார். இதற்கு தீர்வு காண தனது சமூகத்தை இணைத்து ஹிந்து சமுதாயத்தில் நிலவும் தீண்டாமையை அகற்றவும், தனது சமூகத்தின் எதிரான அநீதிகளை அகற்றவும் போராட முடிவு செய்தார்.
“என்னிட்ம் எதாவது நல்ல குணம் இருக்கிறது என்றால்
ஹிந்து தர்மத்திலிருந்து பெறப்பட்டதுதான்”
– Dr.பீமராவ்அம்பேத்கர்
ஆலயப்பிரவேசம், அனைவரும் பொது குளங்களில் நீர்ப் எடுத்தல் போன்ற போராட்டங்களை தலைமையேற்று நடத்தினார். அதற்கு பல ஹிந்து அமைப்புகளும், உயர் ஜாதி ஹிந்துக்களும் ஆதரவு அளித்தனர். இருந்தபோதிலும் அவரது போராட்டத்திற்கு முழுமையான வெற்றி கிடைக்கவில்லை. ஆகவே அவர் ஹிந்து மதத்தில் இருந்து கொண்டு போராடி நமது சமுதாயத்திற்கு சமூகநீதி பெறமுடியாது என்ற நிலைக்கு தள்ளப்பட்டார், ஆகவே மதம் மாற முடிவுசெய்தார். கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களுடைய நன்மை தீமைகளை ஆராய்ந்து அவை நமது கலாசாரத்திற்கு எதிரான மதங்கள் என்பதால் அம்மதங்களை புறக்கணித்து, 1956, அக்டோபர் 14 -ல் இந்தியாவில் தோன்றிய ஹிந்து கலாச்சாரத்தோடு இசைவுள்ள மதமான புத்த மதத்தை தழுவினார். அவர் புத்த மதத்தில் வாழ்ந்தது 54 நாட்கள் மட்டுமே. “
மதம் மனிதனுக்கு அவசியம், ஏழைகளுக்கு மிகவும் அவசியம்
மதம் மனிதனுக்கு நம்பிக்கை அளிக்கிறது
– Dr.பீமராவ்அம்பேத்கர்
1925-ல் ஆரம்பிக்கப்பட்ட ஆர்.ஆர் எஸ் இயக்கம் கடந்த 90 ஆண்டு காலமாக. ஹிந்து ஒற்றுமை மற்றும் ஜாதி ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சமுதாயத்தை உருவாக்குவதையே லட்சியமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. தனது சக்திக்கேற்ப பல்வேறு நிகழ்சிகளின் மூலமாக சமூகத்தில் நல் இணக்கமும் நல் இசைவும் ஏற்படுத்த தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. டாக்டர் அம்பேத்கர் , ஹிந்து மடாதிபதிகளையும் சந்நியாசிகளையும் ஹிந்து மதத்தில் தீண்டாமை இல்லை என்று அறிவிக்கச் செய்ய முடியுமா என்று கேள்வி எழுப்பினார். அவர் உள்ளத்தில் எழுந்த அவரது எண்ணங்களுக்கு செயல்வடிவம் கொடுக்கும் விதமாக ஆர்.ஆர் எஸ்-ன் இரண்டாவது தலைவர் ஸ்ரீ குருஜி அவர்களின் முயற்சியினால் 1969 உடுப்பியில் பாரதநாடு முழுவதிலுருந்து துறவிகளையும் மடாதிபதிகளையும் சந்நியாசிகளையும் சங்கராச்சரியரையும் அழைத்து ஒரே மேடையில் அமரவைத்து “ஹிந்து மதத்தில் தீண்டாமை இல்லை” என்று பிரகடனப்படுத்த வைத்தது ஆர்.ஆர் எஸ்.
ஹிந்து அனைவரும் சோதர்கள்
ஹிந்து எவருமே தாழ்ந்தவராகார்
ஹிந்துவைக்காப்பது என்விரதம்
சரிசமானமே எனது மந்திரம்
மூன்றாவது ஆர்.ஆர் எஸ். தலைவர் ஸ்ரீ பாளா சாஹேப் தேவரஸ் தீண்டாமை பாவமில்லைஎனில் உலகத்தில் வேறதுவும் பாவமில்லை என்று அறிவிப்பு செய்து அதற்கு புதிய உத்வேகமூட்டினார்.
ஆர்.ஆர். எஸ் இயக்கத்தின் தொண்டர்களும் பொறுப்பாளர்களும் தாங்கள் வசிக்கின்ற பகுதிகளில் ஏற்றத்தாழ்வு இல்லாத சமுதாயம் உருவாக பல முயற்ச்சிகள் செய்து வருகின்றனர். கோயமுத்தூர் மாவட்டம் குறிச்சி என்ற கிராமத்தில் திருவிளக்கு வழிபாட்டின் மூலமாக அனைத்து சமூகத்தை சேர்ந்தவர்களும் எந்த வேறுபாடுகளும் இல்லாமல் வழிபாட்டில் கலந்துகொண்டு ஒற்றுமையாக வாழும் சூழல் உருவாகி உள்ளது.
திருவாரூர் மாவட்டம் அலிவலம் கிராமத்தில் மார்கழி மாத பஜனை மூலமாக அனைத்து சமூகமும் இணைந்து ஆலய வழிபாடு செய்யும் சூழல் உருவாகி உள்ளது. 2001 கம்பம் சட்டமன்ற தேர்தலில் ஜாதிக் கலவரம் ஏற்படும் என்று பலரும் அச்சப்பட்ட நேரத்தில் ஆர்.ஆர் எஸ் இயக்கம் வலுவாக இருந்ததால் அந்தப்பகுதிகளில் ஜாதிக்கலவரம் தவிர்க்கப்பட்டது.
காரைக்கால் மாவட்டம் நிரவி கோவில் பத்து என்ற கிராமத்தில் அனைத்து சமூகத்தினரையும் கோவில் உபயதாரர்களாக ஆக்கி அதன் மூலம் அனைவரும் இணைந்து கோவில் வழிபாடு செய்யும் நிலை உருவாகியுள்ளது.
Dr. அம்பேத்கர் அவர்கள் வாழ்ந்த காலத்தில் ஹிந்து அமைப்புகள் வலிமை இல்லாததாக இருந்தது . இந்து இயக்கங்கள் வளர வளர திரு அம்பேத்கர் அவர்களின் கனவு நனவாகிக் கொண்டிருக்கிறது. தீண்டாமை இல்லாத பாரதம், ஏற்றத்தாழ்வு இல்லாத சமுதாயம் உருவாக ஆர்.ஆர். எஸ் நேர்மறை நோக்கத்தோடு முழு சமூகத்தையும் இணைத்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அண்ணல் அம்பேத்கரின் கனவு நனவாகும் தூரம் வெகு விரைவில் …..
நன்றி ; பு. தங்கராஜ்
சமுதாய நல்லிணக்கப்பேரவை மாநில் அமைப்பாளர்
தீண்டாமை என்பது ஹிந்து தர்மத்தின் மீது சுமத்தப்பட்ட களங்கமல்ல,
மனித தேகத்தின் மீது சுமத்தப்பட்ட களங்கம்
Dr.பீமராவ் அம்பேத்கர்
You must be logged in to post a comment.
உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ... |
கோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, பேய் சீந்தில், ... |
நீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி சூப்பு, ஊறுகாய், ... |
1mandate