கப்பல்கட்டுமான பணியில் அதிக ஆற்றலை கொண்டுள்ள இந்தியா, மேக் இன் இந்தியா திட்டத்தின் ஒருபகுதியாக இதனை தொடரவேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புது டெல்லியில் இன்று தேசிய கடற்ப்படை தினத்தை முன்னிட்டு, கப்பல் போக்கு வரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி தலைமையிலான குழு ஏற்பாடுசெய்திருந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மோடி இதனை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்,
5 ஆயிரம் வருடங்களுக்கு முன்பிருந்தே இந்தியாவிற்கு கடற்படை பாரம் பரியம் இருந்துள்ளது. லோத்தல் பகுதியில் மிகபழமையான துறைமுகம் இருந்துள்ளது என்பதில் இருந்து இதனை அறியலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் வரலாற்றை வெளிப்படுத்தும் வகையில் உலகதரமிக்க கடற்படை மியூசியம் ஒன்றை நிறுவ அனைவரும் ஒன்றாக பணியாற்றவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கப்பல் போக்குவரத்து துறையில் மேம்பாட்டுக்கான திட்டங்கள் குறித்து பிரதமருக்கு, கட்காரி விரிவாக எடுத்துரைத்தார்.
உங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். உதாரணமாக, கண்பார்வை ... |
கீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் சத்துக்களும் உள்ளன. ... |
Leave a Reply
You must be logged in to post a comment.