வரும் 2016 ம் ஆண்டு நடைபெறும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், பாஜக வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் என்று அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் முரளிதர்ராவ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பெங்களூரில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது,
"பாஜக தேசிய நிர்வாகிகள், செயற்குழுக்கூட்டம் கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா தலைமையில் பெங்களூரில் தொடங்குகிறது. இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொள்கிறார்.
கர்நாடகத்தை மையமாக வைத்து தமிழகம், ஆந்திரம், கேரளத்தில் பாஜக.,வைப் பலப் படுத்துவது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படும். அடுத்த மாதம் 27 ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்தியில் பாஜக ஆட்சி அமைந்து ஓராண்டு நிறைவடைகிறது.
கடந்த 10 மாதங்களில் மத்திய அரசு நிறைவேற்றியுள்ள விவசாயிகள், இளைஞர்கள், தொழில் நலன்சார்ந்த திட்டங்கள் குறித்து பொது மக்களிடம் பிரசாரம் செய்வது குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும்.
பாஜக அரசியல் கொள்கைகளை வகுத்த தீனதயாள் உபாத் யாயாவின் நூற்றாண்டு விழாவை கொண்டாடுவது குறித்து கூட்டத்தில் செயல் திட்டம் வகுக்கப்படும். நரேந்திர மோடி தலைமையில் மத்தியில் பாஜக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக பெங்களூரில் தேசியசெயற்குழு கூடுகிறது. இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்படும் முடிவுகள் வரலாற்றில் நினைவுகூரப்படும்.
ஹரியானா, மகாராஷ்டிரம், ஜம்மு- காஷ்மீர் , ஜார்க்கண்ட் மாநிலங்களின் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பாஜக தனது சொந்தபலத்தில் வெற்றி பெற்றுள்ளது. தமிழகத்தில் பாஜக.,வில் வலிமையான தலைவரை உருவாக்குவது தொடர்பான பணிகள் நடை பெற்று வருகின்றன.
2016ஆம் ஆண்டு நடைபெறும் தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றிபெற்று ஆட்சி அமைப்பதற்கான செயல் திட்டம் வகுக்கப்படும். தமிழகத்தில் உறுப்பினர் சேர்க்கை திருப்திகரமாக உள்ளது. இதுவரை தமிழகத்தில் 35 லட்சம் பேர், கேரளத்தில் 20 லட்சம் பேர் பாஜக.,வில் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர்.
அரசியலில் வெற்றி, தோல்வி இயல்பானது. டெல்லி சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைந்ததால், அதன் பாதிப்பு வேறு மாநிலங்களிலும் எதிரொலிக்கும் என்பதில் உண்மையில்லை.
ராஜஸ்தான், பஞ்சாப், அஸ்ஸாம், மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் பாஜக வெற்றிபெற்றுள்ளது. இதேபோல, பலவீனமாக உள்ள மாநிலங்களில் பாஜக வளரும்; அரசியல் ரீதியாக வெற்றி பெறும்" என்றார்.
இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ... |
மாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது. |
முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள்.இரும்பு சத்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.