'நீதிபதிகள் செய்யும் பணியானது கடவுளுக்கு அடுத்தப்படியானது' என பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார். புதுடெல்லியில் முதல்-மந்திரிகள் மற்றும் ஐகோர்ட்டு தலைமை நீதிபதிகள் பங்கேற்கும் மாநாடு நடைபெறுகிறது. மத்திய சட்டத் துறை அமைச்சகம் இந்த மாநாட்டுக்கு
ஏற்பாடுகளை செய்துள்ளது. சட்டத் துறை எதிர்கொள்ளும் நிர்வாக பிரச்சினைகள், வழக்குதேக்கம் மற்றும் அவற்றை விரைவில் தீர்ப்பதற்கான ஆலோசனைகள் ஆகியவை குறித்து இந்தமாநாட்டில் பேசப்படுகிறது. நீதித்துறை கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் குறித்தும் இதில் விவாதிக்கப்படவுள்ளது. மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
மாநாட்டில் மாநில முதல்-மந்திரிகள், ஐகோர்ட்டு தலைமை நீதிபதிகள் ஆகியோர் கலந்துகொண்டு உள்ளனர். மாநாட்டில் பேசிய பிரதமர் , எனக்கு இந்த மாநாடு குறித்து நன்றாக தெரியும், முன்னதாக நான் அந்த வரிசையில் அமந்து இருந்தேன் (முதல்-மந்திரிகள் இருக்கை). இன்று இங்கு அமர்ந்துள்ளேன். இம்மாநாட்டின் யோசனைகள் வெளிப்படை தன்மையை அதிகரிக்கும், ஒருவருக் கொருவர் வலுப்படுத்துவது ஆகிறது,
இந்தியாவின் கரத்தை வலுப்படுத்தும். இது போன்ற மாநாடில் ஏற்கனவே பேசியவற்றை நான் மீண்டும் கூறுவதற்கு விரும்பவில்லை. எல்லா மாநாட்டிலும் அமர்ந்திருக்கும் ஒவ்வொருவரும் ஊழல்விவகாரம் தொடர்பான கவலையை எழுப்புகின்றனர். ஒவ்வொருவரும் கவலை அடைந்துள்ளனர், ஆனால் இதுவரையிலும் தீர்வு காணப்பட முடியவில்லை. இது சாத்தியமாகும், இந்தமாநாட்டால் தீர்வு காணப்படமுடியும்.
சட்டம் , ஒழுங்கு துறையில் உள்ளவர்கள் தெய்வீகமான பணியினை ஆற்றுகின்றனர். கடவுள் நீங்கள் என்ன செய்யவேண்டும் என்பதை நீங்கள் செய்கிறீர்கள். கடவுளுக்கு அடுத்தப்படியாக வைத்து மதிக்கப்படு பவர்கள் நீதிபதிகள், புனிதமான பணியினை செய்பவர்கள் நீதிபதிகள். நீதிதுறையின் மீது மக்கள் பெரிதும் நம்பிக்கை வைத்துள்ளனர். ஏழைகளுக்கு நீதி வழங்கப்படுவதை உறுதிசெய்யவேண்டும். கால மாற்றத்திற்கு ஏற்ப புதிய மாற்றங்களை நீதித் துறை கையாளவேண்டும்
மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ... |
ஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ஒரு நல்ல ... |
கோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, பேய் சீந்தில், ... |
Leave a Reply
You must be logged in to post a comment.