ஐநா பாதுகாப்பு சபை யில் நிரந்தர இடம்கோர இந்தியாவுக்கு உரிமையுண்டு என்று பிரதமர் நரேந்திரமோடி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். பாரிசில் இந்திய வம்சாளி யினரிடையே உரையாற்றிய அவர், கையேந்தும் நிலையில் இந்தியா இல்லை என்று உறுதிபட தெரிவித்துள்ளார்.
4 நாள் பயணமாக பிரான்ஸ் சென்றுள்ள பிரதமர் நரேந்திரமோடி, அந்நாட்டின் தலைநகர் பாரிசில், இந்திய வம்சாவளி யினரிடையே உரையாற்றினார். அப்போது பேசிய அவர், இந்தியாவை முன்னெடுத்து செல்லவே பிரான்ஸ் வந்துள்ளதாக தெரிவித்தார்.
வளர்ச்சிப்பாதையில் பிரான்ஸ் நாட்டை இந்தியா பின்னுக்குதள்ளும் என்ற நம்பிக்கை உள்ளதாக தெரிவித்த மோடி, ஐ.நா பாதுகாப்புச் சபையில் நிரந்தர இடம்பெறுவது இந்தியாவின் உரிமை . இதற்காக யாரிடமும் கையேந்தும் நிலையில் இல்லை. இந்தியா அமைதியை விரும்பும்நாடு , இந்தியாவில் விரைவில் வறுமை ஒழிக்கப்படும் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார்.
பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை ... |
நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ... |
தலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, அரைத்த விழுதை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.