இயற்கை சீற்றங்களின்போது, 50 சதவீத பயிர்கள் நாசமாகி யிருந்தால் மட்டுமே இழப்பீடு வழங்கப்படும் என இருந்ததை மாற்றி, 33 சதவீத சேதம் இருந்தாலே இழப்பீடுவழங்கலாம் என, விதி முறைகளை மாற்றி அமைத்து உள்ளோம்,'' என, பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
பா.ஜ., – எம்.பி.,க்கள் மத்தியில், பிரதமர் மோடி நேற்று பேசியதாவது:நமது அரசு, ஏழைகளுக்கான அரசு; விவசாயிகள் நலன்காக்கும் அரசு. ஆனால், பா.ஜ.,வை எதிர்க்க வேண்டும் என திட்டமிட்டு செயல்படும் காங்கிரஸ் போன்ற சிலகட்சிகள், தொழிலதிபர்களுக்கு ஆதரவான அரசு என, பொய்யான புகார் கூறி வருகின்றனர்.
எனவே நீங்கள் மக்களிடம் சென்று, மக்களுக்காக நாம் ஆற்றிவரும் செயல்களையும், தீட்டி வரும் திட்டங்களையும் பட்டிய லிடுங்கள். விவசாயிகளுக்காக நம் அரசு மேற்கொண்டு வரும் திடமான முடிவுகளை எடுத்துக்கூறுங்கள். இயற்கை சீற்றங்களின் போது, 50 சதவீத பயிர்கள் நாசமாகியிருந்தால் மட்டுமே இழப்பீடு வழங்கப்படும் என இருந்ததைமாற்றி, 33 சதவீத சேதம் இருந்தாலே இழப்பீடு வழங்கலாம் என, விதி முறைகளை மாற்றி அமைத்துள்ளோம்.நம் ஆட்சியை குறைகூற காங்கிரசுக்கு உரிமை உண்டு. ஆனால், 'நாங்கள்தான் நடுநிலையான ஆட்சி நடத்தினோம்' என கூற, காங்கிரசுக்கு அதிகாரம் இல்லை. அந்த கட்சிக்கு நல்லதை பார்க்கவோ, நல்லதைகேட்கவோ, நல்லனவற்றை பேசவோ நேரமில்லை. எனவே, வாய்க்கு வந்தபடி, நம் அரசை துாற்றிவருகிறது. அவர்களிடம் மோதி, நம் நேரத்தை வீணடிக்கவேண்டாம். நமக்கு நிறைய வேலைகள் இருக்கிறது, ஏழைகள் முன்னேற்றத்திற்காக.
ஆட்சி, அதிகாரத்தை கைப்பற்றவேண்டும் என்பது நமது எண்ணமல்ல. ஏழைகளுக்கு தொண்டாற்றவே நாம் பதவியில் உள்ளோம். அமெரிக்க அதிபர் மற்றும் உலகவங்கி, சர்வதேச நிதியம் போன்ற அமைப்புகள், இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்துவருவதாக கூறுகின்றன. தொழிலதிபர்கள், பணக் காரர்களுக்கு வீடு, வசதி, சலுகைகள் கிடைக்க வேண்டும் என்பதற்காகவா நாம் பாடு படுகிறோம்; இல்லையே! பிறகு ஏன், எதிர்க் கட்சிகளின் குரலுக்கு மதிப்பளிக்க வேண்டும். மக்களிடம் சென்று, அவர்களின் குறைகளை கேளுங்கள்; நம் சாதனைகளை பட்டியலிடுங்கள்.
ஏமனின் சிக்கி தவித்த இந்தியர்களை மீட்டதில், மத்திய அமைச்சர்கள் சுஷ்மா சுவராஜ் மற்றும் வி.கே.சிங் ஆகியோர் திறம்பட செயல்பட்டனர். இதில் வி.கே.சிங்கின் பங்கு அளப்பறியது. உலகின் எந்த ஒருநாட்டைச் சேர்ந்த மத்திய அமைச்சரும், போர் நடைபெறும் இடத்திற்கே சென்று மக்களை மீட்டதாக நான் கேள்விப்பட்டதில்லை; வி.கே.சிங் அதை செய்துள்ளார். ஆயிரக்கணக்கான இந்தியர்களை மீட்டுவந்த சிங்குக்கு ஒருசல்யூட். இவ்வாறு, பிரதமர் மோடி பேசினார்.
பிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் உள்ளன. இறை ... |
நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.