திராவிடர் கழகத்தை கண்டித்து மாநிலம் முழுவதும் கருஞ் சட்டை அகற்றும் போராட்டம் வெடிக்கும் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், "பெண்கள் அணியும் தாலி என்பது தமிழ் கலாச் சாரத்தின் அடையாளம். ஒரு குறிப்பிட்ட மதச் சின்னம் அல்ல. எல்லா மதத்திலும் தாலி அணியும் வழக்கம் உள்ளது. எந்த குடும்பபெண்ணும் தாலியை அடிமைத் தனமாக நினைப்பதில்லை. அன்பின் அடையாளமாக, புனித சின்னமாகத் தான் கருதி வருகிறார்கள்.
கலாச்சாரத்தின் காவலர்கள் என்று பேசிக்கொண்டு தாலியை அகற்றவேண்டும் என்று பேசியதன் மூலம் தமிழ் கலாச் சாரத்துக்கு எதிரானவர்கள் என்பதை நிரூபித்து இருக்கிறார்கள். அவர்களது இந்த கலாச்சார தாக்குதலுக்கு எந்தத் தரப்பும் ஆதரவு கொடுக்கப் போவதில்லை.
பெண்களுக்கு எதிரான, கலாச்சாரத்துக்கு எதிரான தாக்குதலை நடத்தியவர்கள் மீது வழக்கு பதிவுசெய்து திராவிட கட்சிகள் கண்துடைப்பு நாடகம் ஆடுகின்றன. கி.வீரமணியை கைதுசெய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கருப்புசட்டை அணிவது அவர்கள் உரிமை என்றால் தாலி அணிவது இவர்கள் உரிமை. கருப்புதுணி என்பது துக்க நிகழ்ச்சிக்கு அடையாளமாக அணிவது திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளில் கருஞ்சட்டை அணிந்து பங்கேற்ககூடாது என்று பெண்கள் வெகுண்டெழுந்தால் இவர்கள் என்ன செய்வார்கள்?
நம்பிக்கை சார்ந்த விசயங்களில் தலையிட்டால் தமிழகம் முழுவதும் கருஞ்சட்டை அகற்றும்போராட்டம் வெடிக்கும். தமிழகத்தில் பா.ஜ.க.,வை முதன்மை கட்சியாக மாற்ற கட்சியை பலப்படுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன.
விரைவில் சட்ட சபை தேர்தலை சந்திக்க உள்ள தமிழகத்தின்மீது அகில இந்திய தலைமை தனிக் கவனம் செலுத்தி வருகிறது. நிச்சயமாக மக்களின் நம்பிக்கையை பெற்று பலம்வாய்ந்த மாற்று சக்தியாக பா.ஜ.க மாறும்" என்று கூறினார்
கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ... |
இதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, பேய்மருட்டி பேய்வருட்டி ... |
நீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் உடையவர்கள் தொடர்ந்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.