கேரளத்தில் நடந்த அரசியல் கொலைகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டை என அறியப்படும் கண்ணூர் மாவட்ட சிபிஎம் பிரமுகர்கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்.ஆனால் ஒவ்வொரு கொலை நடந்தபிறகு, மார்க்சிஸ்ட் தலைவர்கள் மாநில அளவில் பஞ்சாயத்து பண்ணி எங்கள் கட்சிக்கும் இந்த கொலைக்கும் சம்பந்தமே கிடையாது என்று அறிக்கை விடுவார்கள்.
2014 செப்டம்பர் 1 அன்று ஆர்.எஸ்.எஸ்.பிரமுகர் மனோஜ் கொலையின் போதும் இப்படித்தான் நடந்தது. மார்க்சிஸ்ட் ரவுடிகள் அவரை கோரமாக கொலை செய்தார்கள். அதையடுத்து, அந்தக் கட்சி இந்த கொலைக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை என்று அறிக்கை வெளியிட்டது. இந்த கொலை குறித்து CBI விசாரிக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ், பாஜக, விஸ்வஹிந்து பரிஷத் அமைப்புகள் கோரிக்கை வைத்தன. அதற்காக ஆர்ப்பாட்டமும் நடத்தின. இந்த அழுத்தம் காரணமாக கடைசியில் மாநில (காங்கிரஸ்) அரசு வழக்கை CBI யிடம் ஒப்படைத்தது.
கொலை நடந்து 6 மாதங்கள் ஆனபிறகு, உண்மை வெளிச்சத்துக்கு வந்தது. மார்ச் 7 அன்று நீதிமன்றத்தில் CBI அளித்த குற்றப்பத்திரிகை, மனோஜின் கொலை அரசியல் பழிவாங்கல் என்பதை அம்பலப்படுத்தியது. கேரளத்தின் தலச்சேரி செஷன்ஸ் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட 120 பக்கங்கள் கொண்ட இந்த குற்றப்பத்திரிகையில் உரிய ஆவணங்களும் சாட்சியங்களும் இடம் பெற்றிருந்தன.
கண்ணூர் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர்கள் பாஜகவில் இணைந்ததுதான் அரசியல் பழிவாங்கலுக்குக் காரணம் என்று குற்றப்பத்திரிகை தெரிவிக்கிறது. கொலை செய்யப்பட்ட மனோஜிக்கும் கொலையாளிகளுக்கும் தனிப்பட்ட விரோதம் எதுவும் இல்லை என்று புலனாய்வில் தெரிய வந்ததால் இது அரசியல் பழிவாங்கல் என்று நிரூபணம் ஆயிற்று. எவராவது கட்சியை விட்டுவிட்டு வெளியேறினால், அவருக்கு மனோஜின் கதிதான் என்று மார்க்சிஸ்ட் ஊழியர்கள் சொல்லாமல் சொல்லியிருக்கிறார்கள்.
இந்தக் கொலையில் மார்க்சிஸ்ட் கட்சியின் மூன்று கிளைகள் சம்பந்தப்பட்டிருப்பதை குற்றப்பத்திரிகை தெரிவித்துள்ளது. இந்தக் கொலையில் 19 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டிருந்தார்கள். அனைவரும் கைது செய்யப்பட்டு விட்டார்கள். CBI நடத்திய இந்த புலனாய்வினால் முன்பு ஒரு மார்க்சிஸ்ட் தலைவர் கொலை செய்யப்பட விவகாரத்தில் நிஜமான பின்னணி அம்பலமாகியுள்ளது.
இந்தக் கொலையை நாங்கள் செய்யவில்லை என்று இதுவரை மார்க்சிஸ்டுகள் பேசி வந்திருந்தார்கள். டி.பி.சந்திரசேகரன் என்ற மார்க்சிஸ்ட் பிரமுகர் கொடூரமாக கொலை செய்யப்பட்டதில் மாவட்ட அளவிலான மார்க்சிஸ்ட் தலைவர்கள் சம்பந்தபட்டிருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சந்திரசேகரன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை பகிரங்கமாக எதிர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மார்க்சிஸ்டுகளின் மாநிலத் தலைமையில் ரத்தம் தோய்ந்த புள்ளிகள் இடம் பெற்றிருப்பது அம்பலமாகியுள்ளது. தங்கள் கை ஓங்கியிருக்க வேண்டும் என்பதற்காக வன்முறையிலும் இறங்கத் தயங்காத மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செல்வாக்கு கண்ணூரில் அதிகரிப்பது ஜனநாயக கட்டமைப்புக்கு உலை வைக்கும் என்பது உறுதி.
-பிரதிப் கிருஷ்ணன்
விளையாட்டு வீர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை விரும்பி உண்டால் உணவில் மேற்கூறியபடி பல்வேறு ... |
இதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை பழுக்க காய்ச்சி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.