இந்திய விமானப்படைக்குள் ரஃபேல் ரக போர் விமானங்களின் வருகை திணறிக் கொண்டிருக்கும் நமது பாதுகாப்பு துறைக்கு சிறிது ஆக்சிஜனை தரும் என்கிற பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பாரிக்கரின் சமீபத்திய கருத்து, நமது பாதுகாப்பு துறையின் பலவருட பலவினத்தை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.
இந்தியாவிடம் தற்போது ரஷ்யாவின் தயாரிப்புகலான மிக் 21, மிக் 27, சுகாய் 30 உள்ளிட்டவைகளே பெரும் பகுதி உள்ளது. மிக் ரக போர் விமானங்கள் இந்தியா – சீனா , இந்தியா – பாகிஸ்தான் போரின் போது இந்திய ராணுவத்தின் முதுகெலும்பாக இருந்தது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
இருப்பினும் கையாளுவதில் சிக்கலான தொழில் நுட்பம், நாற்பது வருட பழமை, பெரும்பாலான விமானங்கள் பழுதின் காரணமாக ஓய்வில் இருப்பது, மேலும் பல விமானங்கள் ஓய்வை நோக்கி காத்திருப்பது, ரஷ்ய பிரிவினைக்கு பிறகு தரமான உபகரணங்களை (spare parts) பெறுவதில் சிக்கல், இதனால் அடிக்கடி ஏற்படும் தொழில்நுட்ப கோளாறுகள் மற்றும் விபத்துகள். இதுவரை ஏற்பட்ட விபத்துகளில் மட்டும் 180 பைலட்டுகளை இழந்து "பறக்கும் சவப்பெட்டி" என்கிற அடைமொழியை பெற்றது. உள்ளிட்டவை ரஷ்யாவை தவிர்த்து , மிக்.,கை தவிர்த்து புதிய வகை விமானங்களை இந்திய ராணுவத்தில் இணைக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது இந்தியாவிடம் 34 விமானப்படை பிரிவுகளே உள்ளன, பாகிஸ்தான், சீனாவை சமாளிக்க வேண்டும் என்றால் 44 படைப் பிரிவுகள் தேவை, மேலும் 30 டன்களுக்கு எடை குறைவான, வான் பாதுகாப்பு, கண்காணிப்பு மற்றும் தரை மீதான இலக்குகளை தாக்கும் வல்லமை பெற்ற 100க்கும் அதிகமான விமானங்கள் தேவை அதையும் நாம் சில வருடங்களில் நிவர்த்தி செய்தாக வேண்டும்,
இந்நிலையில் தான் பிரான்ஸ் சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி பிரான்சிடம் இருந்து தற்போது 36 ரஃபேல் விமானங்களை "பறக்கும் நிலையிலும்", 90 விமானங்களை இந்தியாவில் உற்பத்தி செய்தும் வாங்குவது என ஒப்பந்தம் செய்துள்ளார். . அதுவும் எந்த இடைத் தரகர்களும் இன்றி பிரான்ஸ் அதிபருடன் தனியாக உட்க்கார்ந்து சந்தை விலையைவிட பத்து சதவிதம் குறைவான விலைக்கு பேசி முடித்துள்ளார்.
ரஃபேல் போர் விமானங்களை உற்பத்தி செய்யும் தஸ்ஸல்ட் ஏவியேஷன் நிறுவனம் விமானத் தயாரிப்பில் எந்த ஒரு இந்திய நிறுவனத்துடன் வேண்டுமானாலும் இனைந்து உற்பத்தியில் ஈடுபடலாம் . ஆனால் மொத்த முதலீடில் 51%ம் இந்திய நிருவனத்துடையதாக இருக்க வேண்டும். மேலும் அந்தத் தளவாடங்களுக்கான 30% உதிரிப் பாகங்கள் தயாரிப்பில் இந்திய நிறுவனங்களை பயன் படுத்திக்கொள்ள வேண்டும் என்பது ஒப்பந்தத்தின் முக்கிய அம்சமாகும்.
இதன் மூலம் ஆயுத கொள்முதலுக்காக நாம் செய்யும் முதலீடில் பெரும்பகுதி நம் நாட்டைவிட்டு வெளியே செல்லாது. வேலை வாய்ப்பு , நுகர்வு, கட்டுமானம் என ஏதோ ஒரு விதத்தில் நம்மையே வந்து சேரும் , மேக் இன் இந்தியா திட்டத்தின் முக்கிய நோக்கமும் இதுவே.
ஆனால் மிக்.,குடன் ஒப்பிடுகையில் ரஃபேல் விலை அதிகம், ரஷ்யாவை தவிர்த்து பிரான்சை நாடுவதா என்று விலை மதிப்பற்ற தேசத்தின் பாதுகாப்புக்கும் எதிர்க்கட்சிகள் விலை நிர்ணயிக்கின்றன.
கண்மூடித்தனமான ரஷ்ய ஆதரவும், கண்டுக்கொள்ளப்படாத உள்நாட்டு பாதுகாப்புமே இந்திய சீன போரின் தோல்விக்கு காரணம். அன்று தோள்கொடுக்க வேண்டிய ரஷ்யா இந்தியாவை உதாசீனப் படுத்தியது என்பதும், அமெரிக்காவின் திடீர் நேசக்கரமே படு தோல்வியிலிருந்து இந்தியாவை காப்பாற்றியது என்பதுமே வரலாறு. இதனால் விலை மதிப்பற்ற எண்ணற்ற உயிர்களை, லட்சக்கணக்கான சதுர கிலோ மீட்டர் நிலங்களையும் இழந்தோம் , இதனால் உருவான பொருளாதார சுமையை ஈடுகட்ட ஏழை பாமர பெண்களின் காதிலும் தாளியிலும் கிடந்த குண்டுமணி தங்கத்தை கூட தானமாக பெற்றோம் இவைகளுடன் ஒப்பிடுகையில் ரஃபேல் விலை ஒன்றும் அதிகம் இல்லையே?.
தமிழ்த் தாமரை VM வெங்கடேஷ்
டான்சிலிட்டிஸ்' (Tonsillitis) என்பதன் பெயர்தான் தொண்டை அழற்சி நோய். இது. தொண்டையின் சதையை ... |
மஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை பழம், காய்,இலை ... |
ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.