வளர்ச்சி என்ற பழத்தின் பலன் ஏழைகளை சென்றடையாத வரை வளர்ச்சி என்பது முழுமைப் பெறாது

 அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்கிற குறிக்கோளை எட்டும்வகையில், காப்பீடு, ஓய்வூதியம் தொடர்பான 3 சமூக பாதுகாப்பு திட்டங்களை பிரதமர் நரேந்திரமோடி கொல்கத்தாவில் தொடங்கி வைத்தார். நாட்டின் பிற மாநிலங்களில் மத்திய அமைச்சர்கள் இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைத்தனர்.

கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பிரதமரின் சுரக் ஷா பீம யோஜனா (விபத்து காப்பீடு), ஜீவன் ஜோதி பீம யோஜனா (ஆயுள் காப்பீடு) மற்றும் அடல் பென்ஷன் யோஜனா (ஓய்வூதியம்) உள்ளிட்ட மூன்று திட்டங்களை மோடி அறிமுகம்செய்தார். இந்நிகழ்ச்சியில் மாநில முதல்வர் மம்தாபானர்ஜி மற்றும் மத்திய நிதித்துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா ஆகியோர் உடன் இருந்தார்.

காப்பீடு, ஓய்வூதியம் உள்ளிட்ட திட்டங்களில் சேராத, பொருளாதார ரீதியாக பின் தங்கியுள்ள அமைப்புசாரா தொழிலில் ஈடுபட்டுள்ள ஏழைமக்கள் பயன் பெறும் வகையில் இந்த திட்டங்கள் நாடு முழுவதும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இந்த திட்டங்களை அறிமுகம் செய்து வைத்த பின்னர் பிரதமர் பேசியதாவது:

ஏழைமக்களின் நலனுக்காக வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்டன. ஆனால் வங்கிகளில் ஏழைகளை பார்க்க முடியவில்லை. வாழ்க்கையில் எதிர்பாராதவிதமாக ஏற்படும் உயிரிழப்பு, விபத்தால் ஊனம் அடைதல், ஓய்வுகாலம் ஆகிய இக்கட்டான சூழ்நிலையில் உதவும் காப்பீடு, ஓய்வூதியம் உள்ளிட்ட திட்டங்கள் பெரும்பாலான ஏழை மக்களை எட்டவில்லை.

ஒருநாட்டின் வளர்ச்சிப் பயணம் என்பது ஏழைகளையும் உள்ளடக்கியதாக இருக்கவேண்டும். வளர்ச்சி என்ற பழத்தின் பலன் ஏழைகளை சென்றடையாத வரை வளர்ச்சி என்பது முழுமையற்றதாகவே இருக்கும். எனவே ஏழைகளின் நலனை கருத்தில்கொண்டு இந்தத்திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

வங்கிக்கணக்கு வைத்திருக்கும் அனைவரும் இந்ததிட்டங்களில் சேர்ந்து பயனடையலாம். விபத்துகாப்பீட்டு திட்டத்தின் கீழ் ஆண்டு பிரீமியமாக ரூ.12 செலுத்தி ரூ.2 லட்சம் வரை காப்பீடுபெறலாம். ஆயுள் காப்பீட்டு திட்டத்தின்கீழ் ஆண்டுக்கு ரூ.330 பிரீமியம் செலுத்தினால் ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்.

ஓய்வூதிய திட்டத்தில் 18 வயது முதல் 40 வயதுவரை உள்ள அனைவரும் சேரலாம். மாதந்தோறும் ரூ.42 முதல் ரூ.210 வரை முதலீடுசெய்யலாம். ஆண்டுதோறும் இந்த தொகையை செலுத்திவந்தால், 60-வது வயதிலிருந்து மாதந் தோறும் ரூ.1000 முதல் அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் வரை ஓய்வூதியம் பெறலாம்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

குழந்தை திருமணம் இல்லாத இந்திய ...

குழந்தை திருமணம் இல்லாத இந்தியாவை உருவாக்கும் வகையில் அன்னபூர்ணா தேவி இன்று பால் விவாகம் முகத் பாரத் தேசிய இயக்கத்தை தொடங்கி வைக்கிறார் குழந்தை திருமணம் இல்லாத இந்தியாவை உருவாக்கும் வகையில் மத்திய ...

தமிழக கூட்டுறவு வங்கிக்கு அமித ...

தமிழக கூட்டுறவு வங்கிக்கு அமித்ஷா விருது வழங்கினார் டில்லியில் சர்வதேச கூட்டுறவு ஆண்டு விழா நேற்று நடந்தது. ...

அரசியலமைப்பு சட்டத்திற்கு உட் ...

அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு எனது  கடமைகளை செய்கிறேன் – பிரதமர் மோடி '' யாருடைய அதிகார வரம்பையும் மீறாமல், அரசியலமைப்பு சட்டத்திற்கு ...

நீதித்துறையின் பணியை, எதிர்க்க ...

நீதித்துறையின் பணியை, எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன 'நீதித்துறையின் பணியை, எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன' என மக்களவை ...

மக்களின் விருப்பங்களை மதிக்கவ ...

மக்களின் விருப்பங்களை மதிக்கவில்லை எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்றத்தின் இருஅவைகளும் நேற்று ஒத்திவைக்கப் பட்டன. ...

அரசியலில் தி.மு.க – வின் அரசியல ...

அரசியலில் தி.மு.க – வின் அரசியல் நாடகத்தை கேள்வி கேட்க அனைவருக்கும் உரிமை உண்டு – அண்ணாமலை அரசியலில் தி.மு.க.,வின் இரட்டை வேடத்தை கேள்வி கேட்க அனைவருக்கும் ...

மருத்துவ செய்திகள்

சர்க்கரை வியாதி

சர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு "இன்சுலின்" சுரப்பதாலோ அல்லது போதுமான இன்சுலின் ...

Down Syndrome என்றால் என்ன? அதைப் பற்றிய விழிப்புணர்வு எல்லோருக்கும் தேவையா ?

கண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ...

மலச்சிக்கல் நீங்க உணவு முறைகள்

புரோட்டீன் தினமும் இவர்கள் ஒரு கிலோ எடைக்கு 1கிராம் வீதம் புரோட்டீன் உணவைச் சாப்பிடலாம்.