3 சமூக பாதுகாப்பு திட்டங்களை தெரிந்துகொள்வோம்

 காப்பீடு, ஓய்வூதியம் தொடர்பான 3 சமூக பாதுகாப்பு திட்டங்களை பிரதமர் நரேந்திரமோடி கொல்கத்தாவில் தொடங்கி வைத்தார். அதன் விவரங்கள் வருமாறு.

பென்சன் திட்டத்தில் 18 வயது முதல் 40 வயதுவரை வங்கி கணக்கு வைத்திருக்கும் அனைவரும் சேரலாம். இவர்கள் மாதந்தோறும் ரூ.42 முதல் ரூ.210 வரை முதலீடு செய்யலாம். ஆண்டு தோறும் ஜூன் 1 முதல் மே 31 வரை இந்த தொகையை செலுத்திவந்தால், அவர்கள் 60 வயதில் இருந்து மாதந்தோறும் ரூ.1000 முதல் அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் வரை பென்சன் பெறலாம்.

விபத்து காப்பீடு திட்டத்தில் 18 வயது முதல் 70 வயதுவரை வங்கி கணக்கு வைத்திருக்கும் அனைவரும் ஆண்டுதோறும் ரூ.12 பிரிமியம் செலுத்தி வந்தால் ரூ.2 லட்சம் விபத்து காப்பீடுபெறலாம். விபத்தினால் ஏற்படும் நிரந்தர உடல்செயல் இழப்பும் இதில் அடங்கும்.

அடுத்து 18 முதல் 50 வயதுவரை வங்கிகணக்கு வைத்திருக்கும் அனைவரும் ஆயுள் காப்பீடு திட்டத்தில் சேரலாம். இதற்கு ஆண்டுதோறும் ரூ.330 பிரிமியம் செலுத்தவேண்டும். இந்த பிரிமியம் செலுத்துவோருக்கு மரணத்துக்குப் பின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் ஆயுள் காப்பீடு தொகை கிடைக்கும். இவற்றுக்கான பிரிமியம் மற்றும் ஓய்வூதிய மாதாந்திர தொகை ஆகியவை வங்கி கணக்கில் இருந்து பிடித்தம்செய்து கொள்ளப்படும்.

வங்கி கணக்கு வைத்திருக்கும் வயது தகுதியுடைய அனைவரும் இந்த 3 திட்டங்களிலும் சேரலாம். இதற்கான விவரங்களை கணக்கு வைத்திருக்கும் வங்கிகளை அணுகி தெரிந்துகொள்ளலாம். இந்த திட்டத்துக்கான படிவத்தை பெற்று நிரப்பி கொடுத்து திட்டத்தில் சேரலாம். இதற்கான முகாம்களும் நடைபெற உள்ளன. வங்கிகளை அணுகியும் விவரம்பெறலாம். 180042597777 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணுக்கு போன் செய்தும் விவரம் தெரிந்துகொள்ளலாம்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அதிகாரப்பசி கொண்ட கட்சிகளை மக் ...

அதிகாரப்பசி கொண்ட கட்சிகளை மக்கள் நிராகரித்து விட்டனர் –  மோடி  'பார்லியில் மக்களுக்காக என்றுமே காங்., பேசியதில்லை. அதிகாரப் பசி ...

சிட்டுக்குடுவிக்களின் எண்ணிக் ...

சிட்டுக்குடுவிக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது – மோடி “நாட்டில் குறைந்து வரும் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பல்வேறு ...

தேசிய மாணவர் படையில் இணையுங்கள ...

தேசிய மாணவர் படையில் இணையுங்கள் – பிரதமர் மோடி அழைப்பு  'என்.சி.சி.,யில் அதிகமான இளைஞர்கள் இணைய வேண்டும். வளர்ந்த இந்தியாவை ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் கலந்து கொள்ள மோடி வலியுறுத்தல் இந்தியாவை  அறிந்துகொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறுபுலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தல ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை  மோடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

மருத்துவ செய்திகள்

Down Syndrome என்றால் என்ன? அதைப் பற்றிய விழிப்புணர்வு எல்லோருக்கும் தேவையா ?

கண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ...

வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்

வெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் பவர்கள் பருமனாகலாம். ...

ஆடுதீண்டாப்பாளையின் மருத்துவக் குணம்

சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ...