பிரதமர் மோடியும், சீனபிரதமர் லீ கெகியாங்கும் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், இருதரப்பு மக்களின் நலனை கருத்தில் கொண்டு, எல்லை பிரச்சினையில் விரைவான அரசியல் தீர்வு காண வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திரமோடி, சீன பிரதமர் லீ கெகியாங்குடன் நேற்று இருதரப்பு பேச்சு வார்த்தை நடத்தினார். இந்த பேச்சின் போது, எல்லை பிரச்சினை பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து இரு தலைவர்களும் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது பிரதமர் மோடி எல்லை பிரச்சினை தொடர்பாக குறிப்பிட்டார். அவர், "கடந்த காலங்களில் நமது உறவு சிக்கலானதாக இருந்துள்ளது. ஆனால் அந்தஉறவை ஒருவருக் கொருவர் பலத்துக்கான ஆதாரமாகவும், நல்லதொரு சக்தியாகவும் மாற்றவேண்டிய வரலாற்று கடமை நமக்குள்ளது. அதிபர் ஜின்பிங் குடனும், பிரதமர் லீ கெகியாங்குடனும் நான் நடத்திய பேச்சு வார்த்தை, நமது உறவை அந்த இலக்குநோக்கி முன்னேற்றி சென்றிருக்கிறது என்று நான் நம்புகிறேன்"
மேலும், "எல்லை பிரச்சினையை பொறுத்தமட்டில், சரியான, அர்த்தம் உள்ள, இருதரப்பும் ஏற்கத்தக்க தீர்வினை கண்டறிய இருதரப்பும் ஒப்புக்கொண்டோம். எல்லை பகுதியில், அமைதியையும், சமாதானத்தையும் கடைப் பிடிப்பதற்கு இருதரப்பும் வலியுறுத்தினோம். இந்த பிரச்சினையில், அசல் கட்டுப்பாட்டுகோடு குறித்து தெளிவுபடுத்த வேண்டியதின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினேன்" எனவும் குறிப்பிட்டார்.
இரு தரப்பு பேச்சுவார்த்தையை தொடர்ந்து கூட்டறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டது. அதிலும் எல்லை பிரச்சினை முக்கிய இடம் பெற்றுள்ளது.
அதில் கூறி இருப்பதாவது:-
எல்லைப் பகுதிகளில் அமைதியையும், சமாதானத்தையும் கடை பிடிப்பதில் இதுவரை கையெழுத்தான ஒப்பந்தங்கள், நெறிமுறைகளின் ஆக்கப் பூர்வமான பங்களிப்பை இருதரப்பும் ஒப்புக்கொண்டனர்.
எல்லை பாதுகாப்பில் ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும்; ஆண்டு தோறும் இருதரப்பும் வருகை தர வேண்டும்; இருதரப்பு ராணுவ தலைமையகங்கள் இடையே பரிமாற்றங்களை செய்துகொள்ள வேண்டும்; இருதரப்பு ராணுவ தலைமையகங்கள் இடையே நேரடி தொலைபேசி வசதியை ஏற்படுத்துவதற்கு முயற்சிக்க வேண்டும்; எல்லையில் தளபதிகள் இடையே பரிமாற்றங்களை விஸ்தரிப்பு செய்யவேண்டும்; இந்திய-சீன எல்லையில் எல்லா பகுதிகளிலும் எல்லை பாதுகாப்புபடையினர் கூட்டங்களை நடத்தவேண்டும் என இரு தலைவர்களும் உறுதி பூண்டனர்.
எல்லை பிரச்சினையில் விரைவான தீர்வு காண வேண்டும், அது இரு நாடுகளின் அடிப்படை நலனை பூர்த்திசெய்வதாக அமையும் என இருதரப்பும் உறுதிபட தெரிவித்தனர்.
இரு தரப்பு ஒட்டுமொத்த உறவினையும், இருதரப்பு மக்களின் நீண்டகால நலன்களையும் கருத்தில் கொண்டு, எல்லை பிரச்சினையில் அரசியல் தீர்வினை காண்பதற்கு இருதரப்பினரும் உறுதியுடன் நாடுவது என்றும் முடிவு செய்யப்பட்டது. எல்லை பிரச்சினை உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளுக்கும் இரு தரப்பினரும் ஆக்கப்பூர்வமான தீர்வு காண்பர்.
இரு தரப்பு கருத்து வேறுபாடுகள், இருதரப்பு உறவின் முன்னேற்றத்தை எந்த வகையிலும் பாதிக்க அனுமதிக்க கூடாது.
இந்திய சீன-எல்லையில், அமைதியும், சமாதானமும் நிலவுவது, இருதரப்பு உறவு வளர்ச்சியில் முக்கிய உத்தரவாதமாக அமையும் என்பது அங்கீகரிக்க பட்டது.
இறுதிதீர்வு காண்கிற வரையில், ஏற்கனவே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை அமல்படுத்தவும், எல்லையில் அமைதியையும், சமாதானத்தையும் தொடரவும் உறுதிபூண்டனர் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் பெருக்குவதாகவும், பூ ... |
மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ... |
இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.