பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் ஓராண்டு செயல் பாடுகளைப் பொருத்த வரையில், பத்துக்கு ஏழு மதிப்பெண் வழங்கலாம் என இந்திய வர்த்தக சபைகளின் சங்கம் (அசோசேம்) தெரிவித்துள்ளது.
வரும் 26-ம் தேதியுடன், மத்தியில் பாஜக கூட்டணி அரசு அமைந்து ஓராண்டு நிறைவுபெறவுள்ளது. இதையொட்டி, தேசியளவில் செயல்படும் தொழில்துறை கூட்டமைப்பான அசோசேம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
கடந்த ஓராண்டு கால ஆட்சியில், குறுந்தொழில் பொருளாதார நிலைமை வலுவடைந்துள்ளது. பணவீக்கம் குறைவு, நிலையான இடத்தில் ரூபாயின் மதிப்பு, கவர்ச்சி கரமான பொருளாதார சந்தைகளை ஏற்படுத்தியது உள்ளிட்டவை முக்கியமானதாகும்.
நிதிச்சந்தைகள் முதலீடுகளை ஈர்க்கக் கூடியவையாக உள்ளன. இந்த அரசு, உண்மையான அக்கறையுடன் கொள்கைகளை வகுத்து, சட்டதிருத்தங்களை மேற்கொண்டு வருகிறது. முதலீட்டு வாய்ப்புகள் பெருக, நுகர்வோரின் தேவைகள் அதிகரிக்க வேண்டும். அதற்கு, இன்னும், 24 முதல், 30 மாதங்களாகும். இந்த அரசு, நல்ல துவக்கத்தை தந்துள்ளது.
சேவை வரி மசோதா: சரக்கு, சேவை வரி மசோதா போன்ற விஷயங்களை அரசு முன்னெடுப்பது நல்லதொரு தொடக்கமாகும். தொழில்துறைக்கு நம்பிக்கையளிக்கும் இது போன்ற விஷயங்களை வேகமாக கையாள வேண்டும்.
நிலக்கரிச் சுரங்கங்கள், அலைக் கற்றையை வெற்றிகரமாக ஏலம் விட்டதன் மூலம், வெளிப்படைத்தன்மை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டு பயணங்களால், பிற நாடுகளுடனான பொருளாதார, ராஜீய உறவுகளில் ஆரோக்கியமான மாற்றம் ஏற்பட்டுள்ளது.
நவீன நகரங்கள், தூய்மை இந்தியா திட்டம் உள்ளிட்டவை பாராட்ட தகுந்தவையாகும். அனைவருக்கும் வங்கிக் கணக்குத் திட்டத்தில் 14 கோடி மக்களை இணைத்து, ரூ.14,000 கோடி முதலீடாகக் கவரப்பட்டுள்ளது.
அந்தக் கணக்குகள் அனைத்தையும் முடங்கிப் போகாமல், செயல்பாட்டில் இருக்கச்செய்வது அரசின் சவாலாக இருக்கும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை தொடர்ந்து வயிற்றுப்போக்கு ... |
ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ... |
நித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, தண்ணீர் விட்டுச் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.