பொய்யுரைக்கின்றனர், மெய்யுரைப்பது எங்கள் பொறுப்பு

 அமேதி தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி அவர்கள் பேசிய பேச்சுக்கள் அத்தனையும் உண்மைக்கு புறம்பாகவே இருக்கிறது. பழிவாங்கும் நடவடிக்கையாக தன் தொகுதிக்கு வர வேண்டிய உணவுப் ப+ங்காவை மோடி அரசு தடுத்து விட்டது என்ற மிகப் பெரிய பொய்ப் பூசணியை தன் சொல் எனும் சோற்றில் மறைக்கப் பார்க்கிறார்.

அமேதியில் திட்டமிட்டப்பட்டிருக்கும் உணவுப் பூங்கா காங்கிரஸ் ஆட்சி காலத்திலேயே கைவிடப்பட்டுவிட்டது – இந்தத்திட்டத்தை செயல்படுத்த அந்த நிறுவனம் சில நிபந்தனைகளை விதித்த போது அது முடியாது என்று காங்கிரஸ் கைவிட்டுவிட்டது.

காங்கிரஸ் கைவிட்டதை பாஜக கைவிட்டது என்று சொல்வது எவ்வளவு துரோகம் என்று மக்களே முடிவு செய்யட்டும். அதே போல் மோடியின் ஓர் ஆண்டு சாதனைக்கு இந்திய தொழில்நுட்பம் மற்றும் வர்த்தக கூட்டமைப்பான அசோசெம் 10க்கு 7 மதிப்பெண் வழங்கியுள்ளது. அதாவது ஓராண்டில் பணவீக்கம் குறைந்துள்ளது, ரூபாய் மதிப்பு நிலையாக உள்ளது, என்பன போன்ற சாதனைகளால் 10க்கு 7 மதிப்பெண் கொடுக்கலாம் என்று அந்த அமைப்பு சொல்லும் போது, ராகுல் ‘0’ மதிப்பு கொடுத்தார் என்றால் மதிப்பிடபடுபவரை விட மதிப்பீடு செய்பவர் எவ்வளவு பலவீனமானவர் என்பதைக் காட்டுவது மட்டுமல்லாது, ‘0’ மார்க் வாங்குபவர் எப்படி மற்றவரை மதிப்பீடு செய்ய முடியும் என்ற கேள்வியே மக்கள் மனதில் எழுகிறது.

அதுமட்டுமல்ல வெளிநாடு சென்று கொண்டிருக்கும் மோடிக்கு விவசாயிகளைச் சந்திக்க நேரமில்லை என்று சொல்லியிருக்கிறார். ஓராண்டில் மோடி வெளிநாடுகளுக்குச் சென்ற நாட்களின் எண்ணிக்கை 45 நாட்கள் அந்த 45 நாட்களும் அவர் இங்கிருந்து விமானத்தில் ஏறும் வரை, அங்கு செய்யும் சுற்றுப் பயணம் முதல் இங்கு வந்து இறங்கும் வரை, மக்கள் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் 58 நாட்கள் காணாமல் போய்விட்டு, அந்த 58 நாட்களில் எங்கே இருக்கிறார் என்று தெரியாமல் அந்த நாட்களில் விவசாயிகள் என்ன நிலைமையில் இருக்கிறார் என்று சற்றும் கவலைப்படாத ராகுலுக்கு விவசாயிகளைப் பற்றி பேச தகுதியில்லை.

அதுமட்டுமல்ல 58 நாட்களை விடுங்கள். ஆட்சி செய்த 10 ஆண்டுகள் மக்களைப் பற்றியும், விவசாயிகளைப் பற்றியும் கவலைப்படாதவர்கள் இன்று விவசாயகளுக்கு நல்ல பல திட்டங்களைக் கொண்டு வந்து கொண்டிருக்கும் மோடியை பற்றி விமர்சிப்பதை மக்களே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

அதே போல் தமிழகத்தில் அண்ணன் வைகோ, மோடி வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர வேறு என்ன சாதித்திருக்கிறார் என்று கேட்கிறார்.; மோடி ஒன்றும் கள்ளத் தோணி ஏறி காணாமல் போகவில்லை. இந்த நாட்டிற்கு வருமானத்தையும், பொருளாதாரத்தையும், முதலீடுகளையும் கொண்டு வருவதற்கே அவர் வெளிநாடு செல்கிறார். என்ன செய்வது? இதற்கு முன் ஆண்ட காங்கிரஸ் அரசு நாட்டை பொருளாதார நிலையில் மிகவும் கீழான, பின்தங்கிய நிலையில் வைத்துவிட்டுச் சென்றதால் இன்று பலநாடுகளுக்குச் சென்று முதலீடுகளை ஈர்க்க வேண்டிய கட்டாயத்தில் மோடி உள்ளார்.

அதுமட்டுமல்ல, தென் கொரியாவிலிருந்து மட்டும் 63,000 கோடிக்கு மேலாக முதலீடு கிடைக்க இருக்கிறது. இதில் 63,670 கோடி இந்தயாவின் உள்கட்டமைப்புக்கும், நவீன நகரங்கள், மின் உற்பத்தி மையங்கள் ரயில்வே துறை மேம்பாடு இதற்காகப் பயன்படுத்தப்பட இருக்கின்றது இதில் பயனடைபவர்கள் யார்? நம் இந்திய மக்கள் தானே?

அதுமட்டுமல்ல, சீனப் பயணத்தினால் பல நன்மைகள் விளைந்திருக்கின்றது காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் தன் வாலை ஆட்டிக் கொண்டும், நம் எல்லையில் நீட்டிக் கொண்டும் இருந்த சீன டிராகன் இன்று வாலை சுருட்டிக் கொண்டு, அன்பை பகிர்ந்து கொண்டிருக்கிறது என்பது மட்டுமல்ல, நம் சென்னையில் சீன துணைத்தூதரகம் வர இருக்கிறது என்ற அளவில் சாதனைப் பயணமாக அமைந்திருக்கிறது என்பதை யாரால் மறுக்க முடியும்? சைனாவில் இருந்து மட்டும் 1,32,000; கோடிகள் முதலீடு வர இருக்கிறது என்றால் சாதாரணமா? 1,76,000 கோடி ஊழல் செய்து பழக்கப்பட்ட இந்த நாட்டிற்கு 1,32,000 கோடி முதலீடு கிடைத்திருக்கிறது என்றால், நாம் இதை எந்த அளவிற்கு பாக்கியமாக கருத வேண்டும். கடன்பாக்கி வைத்துப்பழக்கப்பட்ட இந்த நாடு, இன்று மங்கோலியா நாட்டிற்கு 6,300 கோடி உதவி செய்கிறது என்றால் அதிலும் நாம் பெருமைப்பட வேண்டும். அதுமட்டுமல்ல, ஓர் பிரதமரின் பணி உள்நாட்டுப் பிரச்சினை மட்டுமல்ல, இந்திய தேசத்தின் மதிப்பையும் தரத்தையும் உலக நாடுகளில் உயர்ததுவம் ஓர் கடமையே.

அவர் சென்ற நாடுகளின் பட்டியலைப் பார்த்தால் ஜப்பான், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், கனடா, சைனா, கொரியா – இந்த நாடுகள் அனைத்தும் உலக பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் நாடுகள். அந்த நாடுகளின் பார்வையும், உறவும், முதலீடும், இந்தியாவை நோக்கி திரும்பியிருக்கிறது. அதன் மூலம் உலகமே இந்தியாவை நோக்கி திரும்புகிறது என்றால் இந்த பயணம் இந்தியர்களின் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்பதை இந்திய இளைஞர்கள் மீது அக்கறை கொண்ட ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்வார்கள்.

திரைக்கடல் ஓடியும் திரவியம் தேடு என்ற ஒளவையாரின் முதுமொழியைத்தான் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார் திரு. மோடி அவர்கள். உலக நாடுகள் செல்வதால்தான் நம் நாடு செல்வமயமாகிக் கொண்டிருக்கிறது.

மத்திய அரசு தமிழகத்திற்கும் அதிக நன்மைகளைச் செய்து வருகிறது என்பதையும் மறுக்க முடியாது. 5 மீனவர்கள் தூக்குக் கயிற்றிற்குப் பக்கத்தில் சென்று விடுவித்ததையும் மறந்து, ஏதோ மத்திய அரசு மீனவர்கள் கடத்தல் காரர்கள் என்று சொல்லிவிட்டது என்று எல்லோரும் குற்றம் சாட்டினார்கள். ஆனால் இன்று வந்திருக்கும் செய்தி மீனவர்கள் என்ற போர்வையில் செயல்படும் கடத்தல்காரர்களால் ஒட்டு மொத்த மீனவர்களுக்கும் கெட்ட பெயர் ஏற்படுகிறது என்று தேசிய மீனவர்கள் சங்கம் வலியுறுத்துகிறது. சிறிசேனாவைச் சந்தித்த மீனவர்களுடன் ஓர் கடத்தல்காராரும் இருந்திருக்கிறார் என்ற செய்தி நமக்கு அதிர்ச்சியைத் தருகிறது. இங்கே உள்ள அரசியல்வாதிகள் மத்திய அரசு மீனவர்களை எந்த அளவிற்கு பாதுகாத்துவருகிறது, மதித்து வருகிறது என்பதை தெரியாமல் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்பது இதன் மூலம் வெட்ட வெளிச்சாமகிறது.

நமது ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அவர்கள் நில எல்லை வரையறை மசோதா வங்கதேசத்திற்கு விடுக்கும் நட்புறவுச் செய்தி என்று கூறியது மட்டுமல்ல, இதுவரை நடந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரிலேயே அதிக நாட்கள் பயனுள்ளதாகவும், அதிக மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட தொடராகவும் உள்ளது என்று பாராட்டியிருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. ஆக பொய்யுரைக்கின்றனர், மெய்யுரைக்க வேண்டியது எங்கள் பொறுப்பு.

நன்றி; டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன்

பாஜக மாநில தலைவர்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

அழகு குறிப்பு – சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க

சிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் ...

குடல்வால் தேவையா?

மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ...

கருவேல் இலையின் மருத்துவக் குணம்

கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ...