அதிகாரிகள் நியமனவிவகாரத்தில் தில்லி துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங்குக்கும், முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கும் இடையேயான அதிகார மோதல் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது.
பரஸ்பர குற்றச் சாட்டை சுமத்திய இருவரையும், குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி செவ்வாய்க் கிழமை கண்டித்தபிறகும், இந்த அதிகாரமோதல் முடிவுக்கு வரவில்லை.
இந்தநிலையில், கடந்த ஒருவாரத்தில் தனது ஒப்புதலின்றி தில்லி அரசு பிறப்பித்த அனைத்து உயரதிகாரிகள் பணியிட மாற்றல், நியமன உத்தரவுகளை துணை நிலை ஆளுநர் நஜீப்ஜங் புதன் கிழமை ரத்துசெய்தார்.
இதையடுத்து, "தில்லியில் சுதந்திரமாக ஆட்சிநடத்த ஒத்துழையுங்கள்' என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கடிதம் எழுதினார். இந்தமோதல் தொடருவதால் பெரும்பாலான அதிகாரிகள், தில்லி அரசில்தொடர்ந்து நீடிக்க விருப்பமின்றி மத்திய அரசுப்பணிக்கு மாற்றலாக விருப்பம்தெரிவித்து, மத்திய பணியாளர் நலத்துறையிடம் விண்ணப்பிக்க முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனால், தில்லி அரசியல்மட்டுமன்றி, அரசின் நிர்வாகத்திலும் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
முள்முருக்கு, முள்முருங்கை என அழைக்கப்படும் கல்யாண முருங்கை முழுவதும் முட்களைக் கொண்ட மென்மையான ... |
பொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை திர்க சில ... |
இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.