தமிழகத்தில் முதலமைச்சர் பதவியேற்க இருக்கிறார். வாழ்த்துக்கள். தமிழகத்தில் 7 மாதமாக முடங்கிக்கிடந்த நிர்வாகம் மக்களுக்கு பலன் தருவதாக, இயங்கும் நிர்வாகமாக மாற்றப்படும் நிலை ஏற்பட்டிருப்பது மகிழ்ச்சியே.
இன்று கிடைத்திருக்கும் செய்தியின் படி ஊழல் கறை படிந்த அமைச்சர்கள் நீக்கப்படுவார்கள் என்ற செய்தி வந்திருக்கிறது. இது உண்மையாக இருப்பின் வரவேற்கத்தக்க முயற்சி. அது மட்டுமல்லாமல் புதிதாக பதவியேற்கும் அமைச்சர்களுக்கு எந்த வித ஊழல் குற்றச்சாட்டும் இல்லாமல் மக்கள் மீது கவனம் செலுத்தும் நிர்வாகத்திறமை உடையவர்களாக இருக்க வேண்டும் என்பதே மக்களின் விருப்பம்.
அதுமட்டுமல்ல பல வளர்ச்சித்திட்டங்களும் அறிவிக்கப்படும் என்ற செய்தி உறுதிப்படுத்தப்பட்ட செய்தியாக இருப்பின் அதுவும் வரவேற்கத்தக்கது. நம் தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவரின் விருப்பமும் ஊழல் ஒழிந்த மாநிலமாக, அதே நேரத்தில் வளர்ச்சி மிகுந்த மாநிலமாக தமிழகம் இருக்க வேண்டும் என்பதே. முடங்கிக்கிடக்கும் திட்டங்கள் ஒவ்வொன்றும் விரைவுபடுத்தப்பட வேண்டும், நிறைவடைந்து ஆரம்பிக்கப்படாத திட்டங்கள் அனைத்தும் ஆரம்பிக்கப்பட வேண்டும், நிர்வாகத்தில் ஊழல் முற்றிலுமாகக் களையப்படும் என்பதை நாளை பதவியேற்கும் அரசு உறுதி செய்ய வேண்டும்.
டெண்டர்களை குஜராத் போன்ற மாநிலங்களில் செயல்படுத்தப்படுவதைப் போல – இணையதளம் மூலம் "இ" -டெண்டர்களுக்கு ஏற்பாடு செய்தால் ஊழல் ஒழிக்கப்படும் என்ற நம்பிக்கை மக்களுக்கு ஏற்படும்.
எல்லாவற்றிற்கும் மேல் இன்று தமிழகத்தில் பல சமூக அவலங்களுக்கும், கேடுகளுக்கும் காரணம் அரசாங்கத்தால் நடத்தப்படும் மதுபானக்கடைகள் என்பது நிரூபிக்கபட்ட உண்மை. இந்த மது அவலத்தினால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள், வருங்கால சந்ததியினரான இளைஞர்களும், குழந்தைகளும். நேற்று கூட குடிகாரத்தந்தையை திருத்த முடியாமல், மன உளைச்சலால் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்திருக்கும் மகனை நினைத்து நெஞ்சம் பதறுகிறது.
வழக்கின் மூலமாகவும், வழக்கமாக அவர்களின் தொண்டர்கள் செய்த பிராத்தனையின் மூலமாகவும் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவிற்கு கிடைத்திருப்பது மிகப்பெரிய நிம்மதி. நாளை முதல்வராக பதவி ஏற்கும் நிலையில் அதே நிம்மதி தமிழக மக்களுக்கும் கிடைக்க வேண்டும். ஆக பெண்களை அதிகம் பாதிக்கும் மிகப்பெரிய சமூகக் கொடுமையான "மதுபானக்கடைகள் " ஒழிக்கப்படும் என்ற அறிவிப்பு முதலமைச்சரின் முதல் அறிப்பாக இருந்தால் அதுவே தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்;.
மது இல்லாத தமிழகம் என்பதே முதல் அறிவிப்பாக இருக்க வேண்டும் என்பது கோடிக்கணக்கான பெண்களின் விருப்பம். அதுவே முதல்வரின் முதல் அறிவிப்பாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு
என்றும் மக்கள் பணியில்
(டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன்)
நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ... |
கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.