சட்டமன்றதேர்தலில் சிவசேனாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு இருந்திருந்தால், பா.ஜ.க.,வின் பலம் தெரியாமலேயே போயிருக்கும் என்று முதல்மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.
மராட்டிய பா.ஜ.க.,வின் 2 நாள் செயற்குழுகூட்டம் நேற்று கோலாப்பூரில் தொடங்கியது. இந்த கூட்டத்தை பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷா, முதல்–அமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி தொடங்கிவைத்தனர். இதில் கட்சியின் மாநில தலைவர் ராவ் சாகேப் தன்வே மற்றும் மூத்த தலைவர்கள், செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தின் போது முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பேசியதாவது:–
நடந்துமுடிந்த சட்ட மன்ற தேர்தலில் நாம் தனித்து போட்டியிடுவோம் என்பது எங்களுக்குதெரியாது. தேர்தல் கூட்டணி குறித்து முடிவு எடுக்க 3 நாட்களே இருந்தநிலையில் அமித்ஷா எங்களை அழைத்தார். மராட்டியத்தில் நிலவும் நிலைமைகளை கேட்டறிந்தார். அப்போது தேர்தலில் தனித்து போட்டியிடுவது குறித்து அவரிடம்கூறினோம். அதற்கு அவர் நீங்கள் என்ன முடிவு எடுத்தாலும் உங்களோடு இருப்பேன் என்றார்.
இதையடுத்து தேர்தலில் சிவசேனாவுடன் கூட்டணி அமைக்காமல் தனித்து போட்டி யிடுவது என்று முடிவு செய்யப்பட்டது.
இந்த தேர்தலின்போது ஒரு மாத காலத்திற்கு அமித்ஷா மராட்டிய மாநிலத்தையே தன் வீடாக்கிக் கொண்டார். மூத்த தலைவர்களை களத்தில் இறங்கி தேர்தல்பணியாற்ற முடுக்கிவிட்டு தேர்தலில் பா.ஜனதாவின் வெற்றியை உறுதிப் படுத்தினார். மேலும் அவர் ஒவ்வொருவரின் பின்னாலும் இருந்து உற்சாகப் படுத்தினார்.
ஒருவேளை சட்டமன்ற தேர்தலில் சிவசேனாவுடன் கூட்டணி அமைத்து நாம் போட்டியிட்டு இருந்திருந்தால் நம் பலம் நமக்குதெரியாமலேயே போயிருக்கும். நமது பலம் நமக்கு தெரியவந்ததன் பலனால்தான் உலகின் மிகப் பெரிய கட்சி ஆகி உள்ளோம்.என்று தேவேந்திர பட்னாவிஸ் பேசினார்.
உடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை நரம்புகளைச் சுருங்கச் ... |
கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ... |
சேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் உண்டாகும். ஆகையால் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.