தேநீர் விற்றுத்தான் இன்று இருக்கும் நிலையை நான் அடைந்திருக்கிறேன்.
> எளிதான பணிகளைத்தான் செய்ய வேண்டும் என்றால் நான் பிரதமராகியிருக்கக் கூடாது. நான் பிரதமரானதே கடினமான பணிகளைச் செய்வதற்காகத்தான்.
> நான் இதயத்திலிருந்து பேசுகிறேன். ஏழையான எனக்கு ஏழைகளின் தேவை என்ன என்று தெரியும்.
> நான் உங்களிடம் உறுதியளிக்கிறேன். நீங்கள் 12 மணி நேரம் உழைத்தால் நான் 13 மணி நேரம் உழைப்பேன். நீங்கள் 14 மணி நேரம் உழைத்தால் நான் 15 மணி நேரம் உழைப்பேன்.
> நான் இந்த நாட்டின் பிரதமர் அல்ல, பிரதான சேவகன்!
> நமது முன்னோர்கள் வேண்டுமானால் பாம்புகளுடன் விளையாடியிருக்கலாம்; ஆனால் தற்போது கணினி மவுஸ்களுடன் விளையாடுபவர்கள் நாம்.
> உங்கள் கையில் துப்பாக்கி இருந்தால் அதைக் கொண்டு நிலத்தைச் சிவப்பாகத்தான் முடியும். உங்கள் கையில் ஏர் இருந்தாலோ அதைக் கொண்டு நிலத்தைப் பச்சையாக்க முடியும்.
> நாட்டுக்காக இறப்பதற்கு எனக்கு ஒரு சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. ஆனால், நாட்டுக்காக வாழ்வதற்கு எனக்கு ஒரு சந்தர்ப்பம் வாய்த்திருக்கிறது.
> பயனற்ற சட்டங்களை ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றாக ஒழித்துக்கட்ட முடியும் என்றால் உலகத்திலேயே மகிழ்ச்சியான மனிதனாக நான்தான் இருப்பேன்.
> டெல்லி செங்கோட்டையிலிருந்து உலகத்துக்கு நான் அழைப்பு விடுக்கிறேன். சர்வதேச நிறுவனங்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன். எங்களிடம் திறமையும் ஒழுங்கும் இருக்கிறது; மின் அணுவிலிருந்து மின்சாரம் வரை; ரசாயனம் முதல் மருந்துப் பொருட்கள் வரை எதை வேண்டுமானாலும் இந்தியாவில் தயார் செய்யலாம், வாருங்கள்!
இதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் உடைய செடி. ... |
தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ... |
தினமும் எட்டுமுறை 8 அவுன்ஸ் டம்ளரில் தண்ணீர்குடியுங்கள். தண்ணீர் அதிகமாக குடிப்பது கொழுப்பைகரைத்திட ... |
Leave a Reply
You must be logged in to post a comment.