தில்லியில் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பிரதமர் புதன் கிழமை பேட்டி அளித்தார். அப்போது, நாடாளுமன்றத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அதிகார மமதையை காட்டுகிறது என்றும், இது ஒரேஒருவர் நடத்தும் அரசு என்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறிய குற்றச்சாட்டுகளை அவர் மறுத்தார்.
ஒருவேளை, ஏற்கெனவே (முந்தைய அரசில்) உண்மையான அதிகாரத்தை தன்வசம் வைத்திருந்த, அரசியல் சாசனத்தை மீறிய ஒரு நபர் அதிகார மையத்தை சோனியா குறிப்பிடுகிறார் போலும். ஆட்சி அதிகாரமானது தற்போது அரசியல்சாசன வழியிலேயே செலுத்தப் படுகிறது. "தற்போது நாங்கள் அரசியல்சாசன ரீதியிலேயே செயல்படுகிறோம்.
அரசியல் சாசனத்தை மீறிய அதிகார மையங்களின் பேச்சை நாங்கள் கேட்பதில்லை' என்பது தான் குற்றச்சாட்டு என்றால், அந்தக்குற்றத்தை நான் ஒப்புக்கொள்கிறேன். அனைத்து அதிகாரங்களும் பிரதமர் அலுவலகத்தில் குவிந்திருக்கின்றன என்ற விமர்சனம் குறித்து கேட்கிறீர்கள். இந்தக்கேள்வி பல்வேறு விவகாரங்களை உள்ளடக்கியதாகும்.
அரசியல்சாசன ரீதியில் செயல்பட வேண்டியவர் மீது (முன்னாள் பிரதமர்) அரசியல் சாசனத்தை மீறி ஒருவர் (சோனியா) அதிகாரத்தைச் செலுத்திக் கொண்டிருந்தபோது இந்தக் கேள்வி எழுப்பப்பட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
பிரதமரும், பிரதமர் அலுவலகமும் அரசியல் சாசன ஏற்பாட்டின் ஒருபகுதிதான்; அதற்கு அப்பாற்பட்டவர்களல்ல. எங்கள் அரசைப்பற்றி ராகுல் காந்தி முன்வைக்கும் விமர்சனங்களைப் பொருத்த வரை, மக்களவை தேர்தல்முடிந்து ஓராண்டு ஆகியும்கூட, அதில் ஏற்பட்ட படுதோல்வியை காங்கிரஸால் இன்னமும் ஜீரணிக்க முடியவில்லை.
காங்கிரஸாரின் பாவங்களுக்காக அவர்களை மக்கள் தண்டித்துள்ளனர். இதிலிருந்து அவர்கள் பாடம் கற்றுக் கொள்வார்கள் என்று நாங்கள் நினைத்தோம். ஆனால், தாங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு எதிரிகள் என்பதை அவர்கள் நிரூபித்துவருகின்றனர்.
"கடந்த மக்களவைத் தேர்தலின்போது "நல்லநாள்கள் வரப் போகின்றன' என்று அளித்த வாக்குறுதிப்படி தாங்கள் செயல்படவில்லை என்ற அதிருப்திக்குரல்கள் எழுந்துள்ளனவே? மக்கள் பொறுமை இழந்து விட்டார்களா?' என்று செய்தியாளர் கேட்டார்.
அதற்குப் பதிலளித்து மோடி கூறியதாவது:
மத்திய பாஜக ஆட்சியில் தற்போது ஒரு முறைகேடு கூட நடக்கவில்லை என்னும்போது, அதற்கு நல்ல காலம் வந்ததாக அர்த்தமில்லையா?
இந்த 21ம் நூற்றாண்டு இந்தியாவின் நூற்றாண்டாக இருக்கவேண்டும். ஆனால், 2004 முதல் 2014 வரை (ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலம்) மோசமான கருத்துகளும், மோசமான செயல் பாடுகளும் நாட்டை கடுமையாகப் பாதித்துவிட்டன.
அப்போது ஒவ்வொரு நாளும் கெட்ட நாளாக இருந்தது. நாள்தோறும் புதுப்புது ஊழல்கள் வெளிவந்து கொண்டிருந்தன. மக்கள் கடும்கோபத்தில் இருந்தனர். இன்று, நாங்கள் தவறான காரியங்களை செய்வதாக எங்கள் எதிரிகள்கூட குற்றம் சாட்டவில்லை என்று மோடி பதிலளித்தார்.
பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ... |
காய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது அருகம்புல்லாகும். இது ... |
மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.