பெருகிவரும் தொழில்நுட்ப புரட்சியின் காரணமாக உலகில் அனைத்தும் டிஜிட்டல் மயமாகிவருகிறது. இந்நிலையில், ரத்தம்சிந்தாத சைபர் யுத்தத்தை எதிர்கொள்ள இந்தியர்கள் தயாராக இருக்கவேண்டும்.
டிஜிட்டல் இந்தியா திட்டம்மூலம் நாட்டின் 2.5 லட்சம் கிராமங்களுக்கும் இண்டர்நெட் வசதி அளிக்க திட்டமிடப் பட்டுள்ளது. இந்தியர்கள் காணும் கோடிக் கணக்கான கனவுகள் நிறைவேறும் என்ற நம்பிக்கை உள்ளது. மேலும் ரவிசங்கர் மற்றும் அவரது குழு இணைந்து விரிவான ஒருங்கிணைந்த அணுகு முறையை வகுத்துள்ளது.
டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் மூலம் 18 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். நாம் உண்மையான வளர்ச்சிக்காக டிஜிட்டல் பிரிவினையை குறைக்கவேண்டும். ஐடி துறையில் புரட்சி உருவாகி உள்ளது. அதை நாம் சரியாக பயன் படுத்த வேண்டும். ரத்தம் சிந்தாத சைபர் யுத்தத்தை எதிர்கொள்ள இந்தியர்கள் தயாராக இருக்கவேண்டும்.
டிஜிட்டல் இந்தியா கனவின் மூலம் அதிவேக டிஜிட்டல் நெடுஞ்சாலைகளை ஒன்றிணைக்க முடியும். 1.2 லட்சம் இந்தியர்களின் கண்டு பிடிப்புகளை ஒன்றிணைக்க முடியும். பொதுமக்களின் தேவைகளை எளிதாக அடைய வைக்கமுடியும். அதற்கு எந்த தடையும் இருக்காது. இத்திட்டத்தில் ரூ.4.5 லட்சம் கோடி முதலீடுகள் வர வாய்ப்பு உள்ளது. விரைவில் இ.கவர்னன்ஸ், மொபைல் கவர்னனஸாக மாறும் .டிஜிட்டலின் மகத்தான சக்தியை பயன்படுத்தாவிட்டல் நாம் பின்தங்கிவிடுவோம்
உலகம் இணையபாதுகாப்பு குறித்து கவலையடைந்துள்ளது. இணைய பாதுகாப்பு வழங்குவதில் இந்தியா முன்னணியில் இருக்கவேண்டும்… இருக்கும்.
'டிஜிட்டல் இந்தியா' திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்து பேசியது.
வயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு சட்டியில் போட்டு, ... |
கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.