மத்திய, மாநில அரசுகளின் கூட்டுமுயற்சியே மெட்ரோ ரெயில் திட்டம்

 வேளச்சேரி ராமச்சந்திர நாடாரின் முதலாண்டு நினைவு நாளை யொட்டி வேளச்சேரியில் உள்ள அவரது இல்லத்தில் மணிமண்டபம் மற்றும் திருவுருவ சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்புவிழா நடந்தது.

விழாவில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு மணி மண்டபம் மற்றும் ராமசந்திர நாடாரின் சிலையை திறந்துவைத்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது; மெட்ரோ ரெயில் திட்டம் மத்திய, மாநில அரசுகளின் கூட்டுமுயற்சியால் உருவான திட்டம். இதன் தொடக்கவிழா அழைப்பிதழில் கண்டிப்பாக பிரதமரின் படம் பிரசுரித்திருக்க வேண்டும்.

ஆனால், பிரசுரிக்கப்படவில்லை. தொடக்க விழாவில் கலந்துகொள்ள எனக்கும் அழைப்பிதழ் அனுப்ப வில்லை. இதுகுறித்து கருத்து கூற விரும்பவில்லை.

மெட்ரோ ரெயில் கட்டணம் மற்ற மாநிலங்களைவிட சென்னையில் கூடுதலாக உள்ளது. இதனை குறைக்க மாநில அரசு முயற்சிக்கவேண்டும்.

முல்லை பெரியாறு அணை பாதுகாப்புபணியில் தமிழக போலீசாரை நிறுத்த வேண்டாம். இந்த அணை இருமாநிலங்களுக்கும் சொந்தமானது. பிரச்சினை ஏற்படும்போது மட்டும் மத்தியபோலீஸ் படையை நிறுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

மருத்துவ செய்திகள்

நோய்களும் பரிகாரங்களும்

நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ...

செம்பரத்தையின் மருத்துவக் குணம்

செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும்.

மாதுளையின் மருத்துவ குணம்

புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் ...