ஹிந்தி மொழியின் முக்கியத்துவம் அதிகரித்து கொண்டே வருகிறது

 பொருளாதார வளத்தைநோக்கி இந்தியா வேகமாக வளர்ச்சி அடையும் நிலையில், ஹிந்தி மொழியின் முக்கியத்துவம் அதிகரித்து கொண்டே வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

உஸ்பெகிஸ்தான் நாட்டின் தாஷ்கண்ட் நகரில் செவ்வாய்க்கிழமை உரை நிகழ்த்திய மோடி பேசியதாவது: ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்தில் உள்ள மக்களுடனான தொடர்பு தான் இருநாடுகளுக்கு இடையேயான உறவுக்கு அடித்தளமாக அமைகிறது.

இதில், மொழியும், கலாசாரமும் முக்கியப்பங்கு வகிக்கின்றன. எந்தவொரு நாட்டின் பொருளாதாரம் வலிமை பெறுகிறதோ அதன்மொழியும் வேகமாக வளர்ச்சி அடையும். ஏனெனில், மக்கள் அந்தமொழியை கற்க ஆர்வம் காட்ட தொடங்குவர்.

இதை போலவே, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியால் ஹிந்திமொழியின் முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது. ஒருநாட்டின் வரலாறு, பாரம் பரியம் ஆகிய உணர்வுகளை உள்வாங்கி கொண்டு தன்பயணத்தை மொழி தொடர்கிறது. மொழிகளுக்கு மிகப்பெரிய இதயம் உண்டு. ஒருவருடைய ஆளுமை திறனை அதிகரிப்பதில் மொழி முக்கியப் பங்காற்றுகிறது.

வன்முறையில் இருந்து விலகியிருப்பதற்கு இசை சிறந்தவழியாகும் என்று உஸ்பெகிஸ்தான் அதிபர் இஸ்லாம் கரிமோவ் கூறியிருப்பதை வரவேற்கிறேன் என்றார் மோடி.

சாஸ்திரிக்கு அஞ்சலி: முன்னதாக, தாஷ்கண்ட் நகரில் அமைக்கப்பட்டுள்ள, இந்தியாவின் முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியின் மார்பளவு சிலைக்கு பிரதமர் நரேந்திர மோடி மலர்கொத்துவைத்து மரியாதை செலுத்தினார்.

இதுகுறித்து சுட்டுரையில் (டுவிட்டர்) அவர் வெளியிட்ட பதிவில், "இந்தியாவின் பெருமைமிகு மகனான லால்பகதூர் சாஸ்திரிக்கு மரியாதை செலுத்துகிறேன்' என்று கூறியுள்ளார்.

1966-ஆம் ஆண்டில், ஒன்றுபட்ட சோவியத்யூனியனின் அங்கமான தாஷ்கண்ட் நகருக்கு அரசு முறை பயணமாக சென்றிருந்த அப்போதைய பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி, மாரடைப்பால் அங்கேயே உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

மருத்துவ செய்திகள்

வேம்புவின் மருத்துவக் குணம்

நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ...

ஊமத்தை இலையின் மருத்துவ குணம்

அகன்ற இலைகளையும், புனல் போன்ற நீண்ட மலர்களையும், முள் நிறைந்த காயையும் உடைய ...

மஞ்சளின் மருத்துவக் குணம்

பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ...