இந்தியா – கஜகஸ்தான் இடையே யுரேனியம் வழங்குவது உள்பட 5 முக்கிய ஒப்பந் தங்கள் பிரதமர் நரேந்திரமோடி முன்னிலையில் புதன்கிழமை கையெழுத்தாகின.
மத்திய ஆசிய நாடுகளுக்கு அரசு முறைப்பயணம் மேற்கொண்டுள்ள நரேந்திர மோடி, கஜகஸ்தானுக்கு செவ்வாய்க் கிழமை சென்றார். கஜகஸ்தான் தலை நகர் அஸ்தானா விமான நிலையத்தில், அந்நாட்டு பிரதமர் கரீம் மாஸிமோவ் மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள் மோடிக்கு உற்சாகவரவேற்பு அளித்தனர்
அதன்பின்னர், அந்நாட்டு பிரதமர் கரீம் மாஸிமோவுடன் பேச்சு வார்த்தை நடத்திய மோடி, அங்குள்ள புகழ் பெற்ற நாஸர் பயேவ் பல்கலைக்கழக மாணவர்களிடையே உரை நிகழ்த்தினார்.
இதையடுத்து, கஜகஸ்தான் அதிபர் மாளிகையில் நரேந்திர மோடிக்கு புதன்கிழமை சிவப்புக்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், அந்நாட்டு அதிபர் நூர்சுல் தான் நாஸர்பயேவை சந்தித்த மோடி, அவருக்கு ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட குரு கிரந்த் சாஹேப், சமண சமயநூலான கல்பசூத்ரா, புத்தசமய நூலான அஷ்ட சஹஸ்ரிக பிரக்ஞபரமிதா, பெர்சிய மொழி பெயர்ப்பிலான வால்மீகி ராமாயணம் உள்ளிட்ட நூல்களைப் பரிசாக வழங்கினார்.
இதனை தொடர்ந்து, அதிபர் நாஸர் பயேவுடன் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். அப்போது, இருநாடுகளிடையே பாதுகாப்பு, யுரேனியம் விற்பனை, வர்த்தகம், கனிமவளம் உள்ளிட்டவை தொடர்பான 5 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
பின்னர் மோடி கூறியதாவது: இந்தியா – கஜகஸ்தான் இடையே பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினோம். இதில் பல முக்கிய முடிவுகள் எட்டப்பட்டன.
இருநாடுகளையும் பொருத்த வரை, பயங்கரவாதம் ஒரு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. இதனை ஒன்றிணைந்து எதிர்க்கும் வகையில் பாதுகாப்பு துறையில் முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
அதன்படி, இருநாட்டு உளவு தகவல்களை பரஸ்பரம் பரிமாறி கொள்ளுதல், இருநாட்டு ராணுவ வீரர்களின் கூட்டுப்பயிற்சி, சிறப்புப் படைகள் பரிமாற்றம், ராணுவத் தொழில்நுட்ப துறையில் இரு தரப்பு ஒத்துழைப்பு மேம்பாடு ஆகியவற்றை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுப்பது உறுதியாகியுள்ளது.
பயங்கரவாதத்தை ஒன்றிணைந்து எதிர்ப்பது என்ற நிலைப் பாட்டை முன்னெடுத்துச் செல்லவும் இது உதவும். இதேபோல், கஜகஸ்தானிடம் இருந்து இந்தியாவுக்கு யுரேனியத்தை நீண்ட காலத்துக்கு வழங்கும் வகையிலான ஒப்பந்தமும் கையெழுத் தாகியுள்ளது. இது இந்தியாவின் மின்சாரத் தேவையைச் சமாளிக்கப் பயன்படும். இதுதவிர, கனிம வளங்கள் துறையில் இரு தரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையிலான ஒப்பந்தமும் கையெழுத்தாகியிருக்கிறது என்றார் மோடி.
பற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி. ... |
அருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே அளவு அசோக ... |
இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.