பூரண மது விலக்கை அமல்படுத்த கோரி சென்னையில் ஆர்பாட்டம் நடத்திய பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் உள்ளிட்ட நூற்றுக் கணக்கானோர் கைது செய்யப் பட்டனர். தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி, பாஜக சார்பில் மாநிலம் முழுவதும் இன்று வெள்ளிக் கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னையில் வட பழனி 100 அடிசாலை சந்திப்பு அருகில் உள்ள டாஸ்மாக் கடை உள்பட 15 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் பங்கேற்று பேசிய தமிழிசை சவுந்தரராஜன், தமிழகத்தில் பச்சிளம் பாலகர்கள்கூட மதுப்பழக்கத்திற்கு அடிமையாக்கப்பட்டு வருகின்றனர். தமிழ்நாட்டு மக்களுக்கு வழங்கப்படும் ஒருசில இலவசங்களுக்காக இல்லத் தரசிகளின் தாலி காவு வாங்கப்படுகிறது , தமிழகம் முழுவதும் மதுக் கடைகளை மூட வேண்டும் மதுவால் கிடைக்கும் வருமானத்தை வேறு வழியில் ஈட்ட அரசு முற்பட வேண்டும். பல இடங்களில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் பள்ளி அருகில் இருப்பது வருத்தமளிக்கிறது.
தமிழக அரசு பூரண மதுவிலக்கை அமல்படுத்தாவிட்டால் தமிழக முழுவதும் பாஜக மகளிரணி திரண்டு தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபடும் என்றார்.
இதனை தொடர்ந்து அங்கிருந்த டாஸ்டாக் கடைக்கு தமிழிசை பூட்டுபோட முயன்றார். அவரை காவல் துறையினர் கைதுசெய்து வேனில் ஏற்றினர். இதனை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ... |
மனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் பழம்தான் நோனி. ... |
உணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் வயிற்றில் எடுக்க ... |
Leave a Reply
You must be logged in to post a comment.